உள்ளடக்கத்துக்குச் செல்

கருப்பட்டி, மதுரை

ஆள்கூறுகள்: 10°03′23″N 77°55′43″E / 10.0564°N 77.9286°E / 10.0564; 77.9286
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்பட்டி
கருப்பட்டி is located in தமிழ்நாடு
கருப்பட்டி
கருப்பட்டி
ஆள்கூறுகள்: 10°03′23″N 77°55′43″E / 10.0564°N 77.9286°E / 10.0564; 77.9286
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்மதுரை
ஏற்றம்
198.15 m (650.10 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,399
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
625205
தொலைபேசிக் குறியீடு+91452*******
புறநகர்ப் பகுதிகள்சோழவந்தான், மன்னாடிமங்கலம், முள்ளிப்பள்ளம், வாடிப்பட்டி, தேனூர், குருவித்துறை
மக்களவைத் தொகுதிதேனி
சட்டமன்றத் தொகுதிசோழவந்தான்

கருப்பட்டி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

பெயர் மருவுதல்

[தொகு]

பாண்டிய மன்னர் ஒருவரை எதிர்த்துப் போரிட்ட சோழ மன்னர் ஒருவர் தன் படை யானைகள் தங்குவதற்காக இந்த ஊரைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அச்சமயம் இவ்வூர் கரிப்பட்டி (கரி - யானை; பட்டி - தங்குமிடம்) என்று அழைக்கப்பட்டது. இந்த ஊர், பின்னர் பெயர் மருவி கருப்பட்டி என்றாயிற்று.[3]

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 198.15 மீ. உயரத்தில், (10°03′23″N 77°55′43″E / 10.0564°N 77.9286°E / 10.0564; 77.9286) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கருப்பட்டி ஊர் அமையப் பெற்றுள்ளது.

கருப்பட்டி, மதுரை is located in தமிழ்நாடு
கருப்பட்டி
கருப்பட்டி
கருப்பட்டி, மதுரை (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், கருப்பட்டி ஊரின் மொத்த மக்கள்தொகை 3,399 பேர் ஆகும். இதில் 1,712 பேர் ஆண்கள் மற்றும் 1,687 பேர் பெண்கள் ஆவர்.[4]

சமயம்

[தொகு]

இந்துக் கோயில்

[தொகு]

வேணுகோபால சுவாமி கோயில் என்ற பெருமாள் கோயில்,[5] ஆஞ்சநேயர் கோயில்[6] பெத்தண்ண சுவாமி கோயில் என்ற கிராமக் கோயில்,[7] மற்றும் அய்யனார் கோயில் என்ற கிராமக் கோயில்[8] ஆகியவை கருப்பட்டி பகுதியில் அமைந்துள்ளன. இக்கோயில்களானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகின்றன.

அரசியல்

[தொகு]

கருப்பட்டி பகுதியானது, சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, தேனி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ṭi. Ār Kurusvāmi (1998). "Tamil̲ vaḷartta Teluṅkar" (in ta). Rājēsvari Puttaka Nilaiyam. https://books.google.com/books?id=Teh5AAAAIAAJ&q=%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF,%2520%25E0%25AE%25AE%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%2588. 
  2. "Gram Panchayat (ग्राम पंचायत): Karuppatti (கருப்பட்டி )". localbodydata-com.translate.goog. Retrieved 2025-01-18.
  3. "Karuppatti Village". karuppatti.com. Retrieved 2025-01-18.
  4. "Karupatti Village Population - Vadipatti - Madurai, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-01-18.
  5. "Arulmigu Venugopalaswamy Temple, Karupatti - 625205, Madurai District [TM033900].,". hrce.tn.gov.in. Retrieved 2025-01-18.
  6. "Arulmigu Anjaneyar Temple, Karupatti - 625205, Madurai District [TM033934].,". hrce.tn.gov.in. Retrieved 2025-01-18.
  7. "Arulmigu Pethanaswamy Temple, Karupatti - 625205, Madurai District [TM033911].,". hrce.tn.gov.in. Retrieved 2025-01-18.
  8. "Arulmigu Ayyanar Temple, Karupatti - 625205, Madurai District [TM033910].,". hrce.tn.gov.in. Retrieved 2025-01-18.
  9. "Karuppatti Village". www.onefivenine.com. Retrieved 2025-01-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பட்டி,_மதுரை&oldid=4191430" இலிருந்து மீள்விக்கப்பட்டது