கருந்தொண்டைச் சில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கருந்தொண்டைச் சில்லை
LonchuraKelaartiKeulemans.png
Lonchura kelaarti kelaarti
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: குருவி (வரிசை)
குடும்பம்: Estrildidae
பேரினம்: சில்லை
இனம்: L. kelaarti
இருசொற் பெயரீடு
Lonchura kelaarti
(Jerdon, 1863)

கருந்தொண்டைச் சில்லை தென்மேற்கு இந்தியா மற்றும் இலங்கையில் காணப்படும் ஒரு Passeriformes வரிசையை சார்ந்த சிற்றினம் ஆகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகிறது.

உடலமைப்பு[தொகு]

கருந்தொண்டைச் சில்லை 10செ.மீ. - தலை இறக்கைகள் வால் ஆகியன சாக்லெட் பழுப்பு நிறம் முதுகு பழுப்பு நிறமாக இருக்க வால் போர்வை இறகுகள் சற்று வெளுத்துக் காணப்படும். கன்னம், தொண்டை, மார்பு ஆகியன நல்ல பழுப்பாக இருக்க வயிறு வாலடி ஆகியன இளஞ் சிவப்புத் தோய்ந்த பழுப்பாக இருக்கும்.

காணப்படும் பகுதிகள்[தொகு]

தமிழ்நாட்டில் தென்மேற்கு மலைப் பகுதிகளில் ஆண்டு முழுதும் காணப்படும் இது கோடை காலத்தில் வடக்கே உள்ள நீலகிரி மலைப் பகுதிக்கும் வலசை வருகின்றது. பிற சில்லைகளைப் போல வறண்ட நிலங்களை விரும்பாத இது மலைப் பாங்கான நிலப் பகுதிகளையும் நீர் வளமிக்க பகுதிகளையும் விரும்பித் திரிவது.

கருந்தொண்டைச் சில்லை

உணவு[தொகு]

புல்விதைகள், நெல், களையாக வளர்ந்துள்ள செடிகளின் விதை ஆகியவையே முக்கிய உணவு. இதன் பழக்க வழக்கங்கள் முந்தைய சில்லையைப் போன்றதே. பாட்சாதமிழ் நாட்டுப் பறவைகளின் பட்டியலில் இது தாராளமாக எங்கும் காணப்படுவதெனக் கூறியுள்ளது ஆய்வுக்கு உரியது.

இனப்பெருக்கம்[தொகு]

ஜூலை முதல் டிசம்பர் வரை மூங்கில் இலை புல்லின் அகன்ற இலை ஆகியன கொண்டு பந்து வடிவிலான கூட்டினை அமைக்கும். கூட்டினுள் மெத்தென்று ஆக்க வைக்கப்பட்ட புல்லின் பூவோடுகூடிய இனுக்குகள் நுழைவாயிலுக்கு வெளியே குழல் அமைப்பில் நீட்டிக் கொண்டிருக்கும். சிறுமரங்களின் வெளிப்பட நீண்டிருக்கும் கிளைகளிடையே தரையிலிருந்து 4மீ. ஊயரத்துக்கு உள்ளாக இதன் கூடு அமைந்திருக்கும் 3 முதல் 8 வரை முட்டைகள் இடும். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lonchura kelaarti". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:152