உள்ளடக்கத்துக்குச் செல்

கருந்தலை நாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருந்தலை நாரை
மிகுமி தேசிய பூங்கா, தான்சானியாவில் கருந்தலை நாரை
கருந்தலை நாரையின் குரலோசை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
அர்டியா
இனம்:
அ. மெலனோசெப்பாலா
இருசொற் பெயரீடு
அர்டியா மெலனோசெப்பாலா
சில்ட்ரன் & விகோர்சு, 1826
கருந்தலை நாரையின் பரம்பல்

கருந்தலை நாரை (Black-headed heron-அர்டியா மெலனோசெப்பாலா-Ardea melanocephala) என்பது ஆர்டீடே என்ற நாரை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இது சகாரா கீழமை ஆப்பிரிக்கா மற்றும் மடகாசுகரின் பெரும்பகுதி முழுவதும் காணப்படுகிறது. இப் பறவை வலசைச் செல்வதில்லை. ஆனால் சில மேற்கு ஆப்பிரிக்கப் பறவைகள் மழைக்காலத்தில் வடக்கே நகர்கின்றன.

இனப்பெருக்கம்

[தொகு]

கருந்தலை நாரை சிற்றினம் பொதுவாக ஈரமான பருவத்தில் மரங்கள், நாணல் படுக்கைகள் அல்லது பாறைகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. இது ஒரு பருமனான குச்சிகளால் கூடமைத்து 2 முதல் 4 முட்டைகளை இடும்.

உணவு

[தொகு]

கருந்தலை நாரை பெரும்பாலும் ஆழமற்ற நீரில் இரையினைத் தேடும். இதன் நீண்ட, கூர்மையான அலகு மூலம் மீன் அல்லது தவளைகளை வேட்டையாடும். இது தண்ணீரிலிருந்து விலகி, பெரிய பூச்சிகள், சிறிய பாலூட்டிகள் மற்றும் பறவைகளை எடுத்துச் செல்கிறது. இது தன் இரையை அடைய அசையாமல் காத்திருந்து வேட்டையாடுகிறது.

கருந்தலை நாரை 85 செ. மீ. உயரமும், 150 செ. மீ. இறக்கை நீட்டமும் கொண்ட ஒரு பெரிய பறவை ஆகும். இது சாம்பல் நாரை போலவே கிட்டத்தட்ட பெரியது. இது பொதுவாக அடர் நிறமுடையதாக இருந்தாலும் தோற்றத்தில் ஒத்திருக்கிறது. இதன் இறகுகள் மேற்பகுதியில் பெரும்பாலும் சாம்பல் நிறத்திலும், கீழே வெளிர் சாம்பல் நிறமாகவும் இருக்கும். இது ஒரு சக்திவாய்ந்த மங்கலான அலகினைக் கொண்டுள்ளது.

கருந்தலை நாரை மெதுவாகக் கழுத்தினைப் பின் நோக்கி வைத்துப் பறக்கின்றது. இவ்வாறு பறப்பது நாரை, குருகுகளின் சிறப்பியல்பாகும். மேலும் இவை கழுத்தினை நீட்டிப் பறக்கும், கொக்கு, கரண்டிவாயன்களிலிருந்து வேறுபடுகின்றன. இவை பறக்கும் போது அடிப்பகுதியின் வெண்ணிறம் அழகாகத் தோன்றும்.

இதனுடைய அழைப்பு ஒரு உரத்த குரலாக உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

படம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருந்தலை_நாரை&oldid=4154351" இலிருந்து மீள்விக்கப்பட்டது