கருநாடகக் கொடி
2024 அக்டோபர் 30 நிலவரப்படி, இந்தியாவில் கருநாடக மாநிலத்திற்கு ஒரு அதிகாரப்பூர்வ கொடி உள்ளது. [1] பல தசாப்தங்களாக, கன்னட ஆர்வலர்கள் பாரம்பரியமாக சிவப்பு மற்றும் மஞ்சள் கொடியைப் பயன்படுத்தி வருகின்றனர். [2] இருப்பினும், 2017 ஆம் ஆண்டில், சித்தராமையா அரசாங்கம் புதிய கொடியை வடிவமைத்து பரிந்துரைக்க ஒரு குழுவை அமைத்தது. [2] 2018 ஆம் ஆண்டில் மாநிலத்திற்கு ஒரு கொடி முன்மொழியப்பட்டது, ஆனால் அது முறையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. [2]
கருநாடக அரசை, வெள்ளைப் பின்னணியில் மாநில சின்னத்தை சித்தரிக்கும் பதாகையால் பிரதிநிதித்துவப்படுத்தப்பபடுகிறது.
கருநாடக அரசின் 2018 ஆம் ஆண்டு முன்மொழிவு
[தொகு]கருநாடக அரசு 2018 ஆம் ஆண்டில் கருநாடகக் கொடிக்கான பாரம்பரிய மஞ்சள்-சிவப்பு கன்னட இரு நிறக் கொடியை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கபட்ட புதியக் கொடியை முன்மொழிந்தது. நடுவில் வெள்ளை பட்டை மற்றும் சின்னத்துடன் கூடிய புதிய மூவர்ணக் கொடியாக, பிராந்திய அரசியல் கட்சிகளிடமிருந்து மாறுபட்டதாக, இந்திய மூவர்ணக் கொடியின் அமைப்பைப் பின்பற்றுவதற்காக அது வடிவமைக்கப்பட்டது. 2019 ஆகத்தில், கருநாடக அரசு தனி மாநிலக் கொடிக்கான திட்டத்தை இனி அதிகாரப்பூர்வமாகப் பின்பற்றப் போவதில்லை என்று அறிவித்தது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pressure on govt to announce 'official Karnataka flag' on November 1 for Kannada Rajyotsava". https://www.deccanherald.com/india/karnataka/pressure-on-govt-to-announce-official-karnataka-flag-on-november-1-for-kannada-rajyotsava-3256176.
- ↑ 2.0 2.1 2.2 "Karnataka urged to spell out its stand on Kannada flag issue". https://www.thehindu.com/news/national/karnataka/karnataka-urged-to-spell-out-its-stand-on-kannada-flag-issue/article68815646.ece.