கருத்தோட்டப் பெயர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருத்தோட்டப் பெயர்வு என்பது வழமையான, ஏற்றுக்கொள்ளப்பட்ட வழியில் செய்யப்படும் அல்லது கருதப்படும் ஒன்று முற்றிலும் புதிய, வேறான வழியில் மாற்றப்படும் நிகழ்வு ஆகும்[1][2]. இக்கருத்து தாமசு கூன் என்ற அமெரிக்க அறிவியல் வரலாற்றாசிரியரால் அறிமுகப்படுத்தப் பட்டது. ஒரு துறையின் மையக் கருத்துகள் குறுகிய காலத்திற்குள் பொதுவாக மாற்றமடைவதில்லை; புதிய கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் புதியவர்கள் துறையில் உள்ளபோது இத்தகைய கருத்தோட்டத்தில் பெயர்வு ஏற்படும் என்று கூன் கருதினார்[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "மெரியம்-வெபுஸ்டர்சு: Definition of paradigm shift". பார்க்கப்பட்ட நாள் 11 பிப்ரவரி 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. "கேம்பிரிட்சு இணைய அகராதி: meaning of paradigm shift". பார்க்கப்பட்ட நாள் 11 February 2022.
  3. "தி இந்து: What is 'paradigm shift' in philosophy?". பார்க்கப்பட்ட நாள் 11 பிப்ரவரி 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருத்தோட்டப்_பெயர்வு&oldid=3387875" இலிருந்து மீள்விக்கப்பட்டது