கருத்தியற் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

கருத்தியற் கோட்பாட்டின் அடிப்படை-மனித மனத்திலுள்ள கருத்துக்கள், மனித சக்திக்கு அப்பாற்பட்டவைகளில் உள்ள கருத்துக்கள் ஆகியன மட்டுமே உண்மையானவை என்பதேயாகும்.

கருத்தியற் கோட்பாட்டை பேசியவர்கள்[தொகு]

பிளேட்டோ, சாக்ரடீஸ், செயிண்ட் அகஸ்ட்டின், ஹேகல் ஆகியோர்.

கருத்தியற் கோட்பாட்டின் ஒத்த கருத்துக்கள்[தொகு]

தன்னாளுமைதான் உயர்வான உண்மைத் தன்மையுடையது-ரேனே தெர்ஸ்கார்டே. உலகில் காலங்காலமாய் நிலைத்தும், உலகெங்கிலும் பரவியும் நிற்கும் ஒரு பொருள்-ஸ்பினோசா.

கருத்தியற் கோட்பாட்டை வளர்ச்சியுற செய்தவர்கள்[தொகு]

பெர்க்கிலி காண்ட் ஹேகல்

கல்விக் குறிக்கோள்கள்[தொகு]

ஒருவரின் உள்ளுக்குள் தோன்றும் வளர்ச்சி;அது ஒருவரின் தன்னாளுமை என்பதே கல்வி எனக் கருத்தியற் கோட்பாடு கூறுகிறது. தன்னாற்றலறிதல் ஆன்மீக வளர்ச்சி

கார்னி என்பவரின் கூற்றுப்படி கருத்தியற் கோட்பாடு[தொகு]

உண்மை, அழகு, அன்பு ஆகிய மூன்றையும் அடைய உதவுவதே கல்வியின் நோக்கமாக உள்ளது.

கற்கும் சூழல்[தொகு]

கருத்தியற் கோட்பாட்டின் படி கல்விக்குறிக்கோள்களைப் பள்ளிகளில்தான மாணவர்கள் வென்றடைய முடியும். பள்ளிகள் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும் இடம் என கருத்தியற் கோட்பாடு விளக்குகிறது.

சான்றாதாரம்[தொகு]

இந்திய சமுதாயத்தில் கல்வி(ஏப்ரல்-1995).டாக்டர் கோகிலா தங்கசாமி(ஆசிரியர்).பக்.56-57,மாநிலா பதிப்பகம், மதுரை-625 004.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருத்தியற்_கோட்பாடு&oldid=2398286" இருந்து மீள்விக்கப்பட்டது