கருத்தரிப்புக்காலமும் மதுவும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கருத்தரிப்புக் காலத்தில் மது (Alcohol in pregnancy) என்பது கர்ப்பத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பே மது அருந்துதல் உட்பட பெண்கள் கருத்தரித்திருக்கும் காலத்தில் மது எனப்படும் ஆல்ககால் பயன்படுத்துவதை குறிக்கிறது. கர்ப்பமாக இருக்கும்போது பெண்கள் எந்தவொரு அளவும், எந்தவொரு நாளும் அல்லது காலமும் ஆல்ககாலை அருந்துவது பாதுகாப்பானதாக இருக்குமென கருதப்படுவதில்லை[1][2]. கருத்தரிப்புக் காலத்தில் தாய் மது அருந்துவதால் குழந்தைகளுக்கு பல மோசமான பாதிப்புகளை உள்ளடக்கிய உடல் மற்றும் உள்ளக் கோளாறுகள் ஏற்படுகின்றன. அவற்றுள் மிகவும் அபாயகரமானது கருவில் ஆல்ககால் நோய்க்குறி தோன்றுதலாகும். அசாதாரண தோற்றம், குட்டையான உயரம், குறைந்த உடல் எடை, சிறிய தலை அளவு, மோசமான ஒருங்கிணைப்பு, குறைந்த புத்திசாலித்தனம், நடத்தை பிரச்சினைகள், காது கேளாமை மற்றும் பார்வை குறைபாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் கருத்தரிப்புக் காலத்தில் ஒரு தாய் மது அருந்துவதால் அவள் சுமக்கும் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகளாகும் [3]. மேலும், இத்தகைய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பள்ளிகளில் சிக்கல், சட்ட சிக்கல்கள், அதிக ஆபத்துள்ள நடத்தைகளில் பங்கேற்பது மற்றும் பொழுது போக்கிற்காக ஆல்ககால் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் போன்ற அசாதாரண நடத்தை சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகிறது [4]. கருவுற்றிருக்கும் காலத்தில் மதுவை பயன்படுத்துவதால் பெண்களுக்கு தன்னிச்சையான கருச்சிதைவு, குழந்தை செத்துப் பிறத்தல், குறைப்பிரசவம் மற்றும் எடை குறைவான குழந்தை பிறப்பது போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன.[5].

ஆனால் கருக்காலத்தில் மது அருந்தும் தாய்மார்களின் குழந்தைகள் எல்லாம் இது தொடர்பான குறைபாடுகளில் சிக்கிக் கொள்கின்றன என உறுதியாகவும் கூறமுடியவில்லை. பெண்கள் மது பயன்படுத்துவதால் குடும்பத்தில் வன்முறையும் குழந்தைகளுக்கு பல்வேறு தீங்குகள் உண்டாகவும் வாய்ப்புகள் அதிகமாகும்.[5] என்பதும் மறுக்கமுடியாத உண்மைகளாகும்.

கருவுற்ற பெண் முதல் மூன்று மாத காலத்தில் ஒரு நாளைக்கு நான்கு முறைகளுக்கு மேல் மது அருந்துவதால் கரு ஆல்ககால் நோய்க்குறி நோய்கள் தோன்றுகின்றன. ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கும் போதே நோய்க்கான அறிகுறிகள் மிதமாக தென்படத் தொடங்கும்[6][7]. ஒரு நாளைக்கு இரண்டு முறை மது அருந்துதல் அல்லது வாரத்திற்கு பத்து முறை அருந்துதல் இவற்றில் எது தீங்கு விளைவிக்கத் தொடங்கும் காலம் என்பதற்கான சான்றுகள் தெளிவாக இல்லை [6][8].

பல்வேறு சுகாதார நிறுவனங்களும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பெண்கள் மது அருந்துவதை முற்றிலுமாக விலக்குமாறு பரிந்துரைக்கின்றன. பெண்ணின் கரு மது நோயால் பிறழ்வு விளைவுகளும் ஒட்டு மொத்த கர்பகாலமும் பாதிக்கப்படும்.[9][10][11].

கருவியல் ஆய்வு[தொகு]

குழந்தையின் வெவ்வேறு உடல் அமைப்புகள் கர்ப்ப காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் வளர்கின்றன, முதிர்ச்சியடைகின்றன மற்றும் உருவாகின்றன. பெண்கள் கருத்தரிப்பு காலத்தில் மது அருந்துவதால் இந்த வளர்ச்சி நிலைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் பாதிப்பு ஏற்படலாம். மது இப்பிரச்சினைக்கு உகந்த காரணமாகவும் இருக்கலாம்[12]. கருத்தரித்த முதல் சில வாரங்களில் பெண்கள் தாங்கள் கர்ப்பமாக இருப்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பே குழந்தைகள் கருவில் வேகமாக வளர ஆரம்பித்துவிடுகின்றன. கருத்தரித்த முதல் மூன்று வாரங்களில் மூளை, முதுகெலும்பு மற்றும் இதயம் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய உறுப்புகள் உருவாகின்றன. இதனால் கருவின் ஆரம்ப காலகட்டங்கள் மனித வளர்ச்சியில் மிகவும் முக்கியமான காலங்கள் ஆகும். .குழந்தையின் உடல் அமைப்புகள் கருவுற்ற காலத்தின் பிற்பகுதியில் வளர்ச்சி அடைந்தாலும் ஆரம்பத்தில் மது உட்கொள்வதால் உறுப்புகளில் பிற்காலத்தில் குறைபாடுகளை ஏற்படுத்தும்.[12] கருவுற்ற நான்காம் வாரத்தில் கைகள்,கால்கள்,விரல்கள் மற்றும் கால்விரல்கள் உருவாவதால் இதன் வளர்ச்சியை மது அருந்துதல் பாதிக்கிறது. மேலும் கண்கள் மற்றும் காதுகள் நான்காவது வாரத்தில் உருவாதாலால் அவைகளும் பாதிக்கபடுகின்றன. [12]கருவுற்ற ஆறாவது வாரத்தில், பற்கள் மற்றும் அண்ணம் உருவாகும் நேரத்தில் மது அருந்துவதால் இக் கட்டமைப்புகள் பாதிக்கப் படுகின்றன.[12] இக் காலகட்டத்தில் மது அருந்துதல் பன்முக நோய்கள் உண்டாகக் காரணமாகும். மேலும் கருவுற்ற 20 வது வாரத்திற்குள் உறுப்புகள் நன்கு வளர்ச்சி அடைவதால் மதுவால் குழந்தை மிகவும் பாதிப்படையும். எனவே பெண்கள் கருத்தரிக்க முயற்சிப்பதற்கு முன்பே மது அருந்துவதை நிறுத்துவது பாதுகாப்பானதாக அமையும்.[12]

குழந்தையின் மூளை, உடல் மற்றும் உறுப்புகள் கருவுற்ற நாளிலிருந்து வளர்வால் மது அருந்துவதால் அவை பாதிக்கப்படலாம். கருவுருதல் ஒருவருக்கொருவர் வேறுபடுதலால் மது அருந்துதல் வெவ்வேறு குழந்தைகள் பலநிலைகளில் பாதிக்கப்படலாம். பிறப்பதற்கு முன்பே மதுவால் பாதிக்கப்பட்ட குழந்தை பிறக்கும்போது இயல்பாகத் தோன்றினாலும் பள்ளிக்கு செல்லும்வரை அறிவுசார் குறைபாடுகளை அறிய இயலாது.[12]

மேற்கோள்கள்[தொகு]

 1. Williams, Janet F.; Smith, Vincent C.; COMMITTEE ON SUBSTANCE ABUSE (2015). "Fetal Alcohol Spectrum Disorders". Pediatrics 136 (5): e1395–1406. doi:10.1542/peds.2015-3113. பன்னாட்டுத் தர தொடர் எண்:1098-4275. பப்மெட்:26482673. 
 2. Flak, Audrey L.; Su, Su; Bertrand, Jacquelyn; Denny, Clark H.; Kesmodel, Ulrik S.; Cogswell, Mary E. (2014). "The association of mild, moderate, and binge prenatal alcohol exposure and child neuropsychological outcomes: a meta-analysis". Alcoholism, Clinical and Experimental Research 38 (1): 214–226. doi:10.1111/acer.12214. பன்னாட்டுத் தர தொடர் எண்:1530-0277. பப்மெட்:23905882. 
 3. "Facts about FASDs". 16 ஏப்ரல் 2015. 23 மே 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 10 ஜூன் 2015 அன்று பார்க்கப்பட்டது.
 4. Coriale, G; Fiorentino, D; Di Lauro, F; Marchitelli, R; Scalese, B; Fiore, M; Maviglia, M; Ceccanti, M (2013). "Fetal Alcohol Spectrum Disorder (FASD): neurobehavioral profile, indications for diagnosis and treatment.". Rivista di Psichiatria 48 (5): 359–369. doi:10.1708/1356.15062. பப்மெட்:24326748. 
 5. 5.0 5.1 "Guidelines for the identification and management of substance use and substance use disorders in pregnancy" (PDF). World Health Organization. 2014. 11 August 2017 அன்று பார்க்கப்பட்டது.
 6. 6.0 6.1 Yaffe, Sumner J (2011). Drugs in pregnancy and lactation: a reference guide to fetal and neonatal risk (9 ). Philadelphia: Wolters Kluwer Health/Lippincott Williams & Wilkins. பக். 527. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781608317080. Archived from the original on 10 September 2017. https://web.archive.org/web/20170910233951/https://books.google.com/books?id=OIgTE4aynrMC&pg=PA527. 
 7. "Pregnancy and alcohol: occasional, light drinking may be safe". Prescrire Int. 21 (124): 44–50. 2012. பப்மெட்:22413723. 
 8. Henderson, J; Gray, R; Brocklehurst, P (2007). "Systematic review of effects of low-moderate prenatal alcohol exposure on pregnancy outcome.". BJOG : An International Journal of Obstetrics and Gynaecology 114 (3): 243–252. doi:10.1111/j.1471-0528.2006.01163.x. பப்மெட்:17233797. 
 9. "Fetal Alcohol Spectrum Disorders". Pediatrics 136 (5): e1395–e1406. 2015. doi:10.1542/peds.2015-3113. பப்மெட்:26482673. 
 10. "Framework for alcohol policy in the WHO European Region" (PDF). World Health Organisation.
 11. "Drinking in pregnancy guidance". nhs.uk (in ஆங்கிலம்). 2018-04-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-04-06 அன்று பார்க்கப்பட்டது.
 12. 12.0 12.1 12.2 12.3 12.4 12.5 "An Alcohol-free pregnancy is the best choice for your baby" (PDF). Centers for Disease Control and Prevention. 10 August 2017 அன்று பார்க்கப்பட்டது. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.