கருத்தரங்க கற்பித்தல் முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கருத்தரங்க கற்பித்தல் முறை[தொகு]

கருத்தரங்க கற்பித்தல் முறை என்பது உயர்கற்றலுக்கான கற்பித்தல் உத்தியாகும்.மனித இடைவினையுடைய (இன்டெர் ஆக்டிவ்) உளவியல் கற்பித்தல் கொள்கைகளை அடிப்படையாக கொண்ட கற்பித்தல் முறைகளுல் ஒன்று.

வரையறை[தொகு]

 1. கருத்தரங்கில் குறிப்பிட்ட கருத்தில் கட்டுரை வழங்கப்பட்டு அதிலுள்ள சிக்கலான கருத்துகளுக்கு குழு விவாதம் மூலம் தீர்வு காணப்படும் என்று சி.என்.ராஜா மற்றும் டி.பி.ராவ் (2004) கூறியுள்ளார்.
 2. கருத்தரங்கம் ஒரு முறைப்படுத்தப்பட்ட குழு விவாதத்திற்கு முன்னரோ பின்னரோ ஒரு முறையான விரிவுரை நிகழ்த்தப்படும் என்று சி.ஜே.குமார் மற்றும் டி.பி.ராவ் (2004) கருத்தரங்கத்தினை வரையறை செய்துள்ளனர்.

நோக்கம்[தொகு]

 1. மற்றவர்கள் கூறும் எதிரான கருத்துகளை சகித்துக்கொள்ளும் உணர்வினை வளர்த்தல் / உருவாக்குதல்
 2. சக மாணவர்கள் /சக பணியாளர்களுடன் ஒத்துழைப்பு மற்றும் மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளித்தல் போன்ற உணர்வுகளை வளர்த்தல் / உருவாக்குதல்
 3. கருத்தரங்க பங்கேற்பாளரிடம் மன எழுச்சி நிலைப்புத்தன்மையை வளர்த்தல் / உருவாக்குதல்
 4. மற்றவர்களிடம் வினாக்கள் கேட்கும் நற்பண்பு முறை மற்றும் மற்றவர்கள் கேட்கும் வினாக்களுக்கு திறமையாக பதில் கூறும் நற்பண்பு முறைகளையும் பெறுதல்

வகைகள்[தொகு]

 1. சிறு கருத்தரங்கம்
 2. பெரிய கருத்தரங்கம்
 3. தேசிய கருத்தரங்கம்
 4. பன்னாட்டுக் கருத்தரங்கம்

சிறு கருத்தரங்கம்[தொகு]

வகுப்பறையில் ஒரு சிறு பாடத்தலைப்பை விவாதம் செய்ய நடத்தப்படும் கருத்தரங்கம்.ஒரு நிறுவனத்தில் பெரிய கருத்தரங்கம் நடத்தபடுவதற்கு முன் சிறு கருத்தரங்கம் நடத்தப்படல் வேண்டும்.

பெரிய கருத்தரங்கம்[தொகு]

ஒரு முதன்மை கருத்தில் துறை அல்லது நிறுவன சார்பில் நடத்தப்படும் கருத்தரங்கம்.பெரிய கருத்தரங்கம் துறை நிலையில் வாரம் அல்லது மாதம் ஒரு முறை நடத்தப்படும்.இதில் ஒரு குறிப்பிட்ட கருத்து பொதுவாக தேர்வு செய்யப்படுகிறது.

தேசிய கருத்தரங்கம்[தொகு]

ஒரு சங்கம் அல்லது ஒரு அமைப்பினால் தேசிய அளவில் நடத்தப்படுவது. கருத்தரங்கின் மையக்கருத்தில் புலமைப்பெற்ற வல்லுனர்கள் அழைக்கப்படுகிறார்கள்.கருத்தரங்கின் கால அட்டவணை, கருத்து மற்றும் இடத்தை கருத்தரங்கின் செயலர் தயாரிக்கிறார்.

பன்னாட்டுக் கருத்தரங்கம்[தொகு]

ஒரு பன்னாட்டு அமைப்பினால் பொதுவாக நடத்தப்படும் கருத்தரங்கம். ஒரு நாடு பன்னாட்டு கருத்துகளில் பன்னாட்டு கருத்தரங்கினை நடத்தலாம்.

கருத்தரங்கக் குழு[தொகு]

கருத்தரங்கம் கருத்தரங்கக் குழு அடிப்படையில் நடத்தப்படும்.குழு உறுப்பினர்கள்

 1. கருத்தரங்கின் தலைவர்
 2. கருத்தரங்கின் அமைப்புச்செயலர்
 3. கருத்தரங்கின் அமர்வுத்தலைவர்
 4. கருத்தரங்கப் பேச்சாளர்
 5. கருத்த்ரங்கப் பங்கேற்பாளர்

சிறப்புகள்[தொகு]

 • அறிவுசார் புலனின் பல்வேறு திறமைகள் வளர்க்கப்படுகிறது.
 • உளம் சார்ந்த பண்புகளை பங்கேற்பாளர்களிடத்தில் ஏற்படுத்த வழிவகுக்கிறது.
 • கருத்தரங்கக்குழு நடத்தை வழிமுறைகளை பங்கேற்பாளர்களிடம் வளர்க்கிறது.
 • கருத்தரங்க முறையில் தானே கற்றல் இடம் பெறுவதால் கற்றல் தொடர்ந்து நிலைத்து நிற்கிறது.
 • மேன்மையான கற்பித்தல் மதிப்பை பெற்றுள்ளது.

மேற்கோள்[தொகு]

[1]

 1. அறிவியல் கற்பித்தல் -முதலாமாண்டு. தமிழ்நாட்டு பாட நூல் கழகம். 2008. பக். 61-71.