கருணாநிதி நினைவிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருணாநிதி நினைவிடம், தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி நினைவாக சென்னை மெரீனா கடற்கரையில், 2018ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் 2021 ஆகஸ்ட் 24ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்[1]. தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடும் முதல் அறிவிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை, சிந்தனைகளைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், காமராஜர் சாலையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும். அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே நினைவிடம் அமைக்கப்படும். அந்த நினைவிடத்தில் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை அடங்கிய நவீன ஒளிப்படங்கள் இடம்பெறும்" என்றார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருணாநிதி_நினைவிடம்&oldid=3439947" இலிருந்து மீள்விக்கப்பட்டது