கருட வாகனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருட வாகனம்

உரிய கடவுள்: திருமால்
வகைகள்: கல் கருடன்

கருட வாகனம் என்பது வைணவ சமயத்தில் முழுமுதற் கடவுளான திருமால் உலா செல்லும் வாகனங்களில் ஒன்றாகும். கருடனை பெரிய திருவடி என்கின்றனர். [1] கருடாழ்வார், விஷ்ணுப்பிரியன், விஹாகேஸ்வரன், வைநதேயன், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன் என்ற பெயர்களும் கருடனுக்கு உண்டு.

கருடவாகனத்தில் திருமாலை பார்ப்பவர்களுக்கு மறுபிறவியே இல்லை என்பது வைணவர்களின் நம்பிக்கை ஆகும்.[2]

வாகன அமைப்பு[தொகு]

கருடன் மனிதர்களைப் போன்ற தோற்றத்துடன், மூக்கு மட்டும் கழுகு போல அமைக்கப்படுகிறது. கருடன வாகனத்திற்கு இறக்கைகள் உளாளன. அமர்ந்த நிலையில் ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். இரு கரங்களை முன்புறம் நீட்டியவாறு உள்ளார். அதில் திருமாலின் பாதங்களை தாங்குவார்.

கோயில்களில் உலா நாட்கள்[தொகு]

வைணவ கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமத்திற்கு ஏற்றவாறு உற்சவத்தின் மூன்றாம் நாள் அல்லது ஐந்தாம் நாள் கருட வாகனம் பயன்படுத்தப்படுகிறது.[1]

  • திருவரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வருடத்தில் நான்கு முறை நம்பெருமாள் கருடவாகனத்தில் உலா வருகிறார். சித்திரைத் தேர் திருவிழா, தைத்தேர் திருவிழா மற்றும் பங்குனி கோரதத் திருவிழாக்களில் நம்பெருமாள் தங்க கருடவாகனத்தில் உலா வருகிறார். மாசித் தெப்பத்திருவிழாவின் போது நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் உலா வருகிறார். மாசி வெள்ளி கருடவாகனத்தில் நம்பெருமாளை தரிசனம் செய்தால் காசிக்குச் சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். [3]

கல் கருட வாகனம்[தொகு]

நாச்சியார் கோயிலில் கருட வாகன உலாவை கல் கருடன் சேவை என்கின்றனர். இந்த விழா வருடத்தில் மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் நடைபெறுகிறது. கல்கருட சேவையின் பொழுது 4 டன் எடையுள்ள கல்லினால் செய்யப்பட்ட கருடாழ்வார் வீதிஉலா நடைபெறும். கருட வாகனத்தை முதலில் 4 பேரும் பின்னர் 8,16,32,64 கடைசியாக 128 பேர் தூக்குவர். நிகழ்ச்சி முடிவில் சிலையை மீண்டும் கோவிலுக்குள் எடுத்து செல்லும் பொழுது சிலை தூக்குவோரின் எண்ணிக்கை 128, 64, 32, 16,8 என குறைந்து இறுதியில் 4 பேர் மட்டும் சிலையை கோவிலுக்குள் எடுத்துச்செல்வர்.

இவற்றையும் காண்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hindu Gods Vaganas drawings
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 புத்தகம்:தமிழகக் கோயில் வாகனங்கள். ஆசிரியர்:சக்கரவர்த்தி, பிரதீப். பக்கம் 13
  2. காமராஜ், மு ஹரி. "பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? #GarudaPanchami". https://www.vikatan.com/. {{cite web}}: External link in |website= (help)
  3. இளங்கோவன்,தே.தீட்ஷித், நவீன். "திருவரங்கம்: வெள்ளி கருட வாகனத்தில் வந்த நம்பெருமாள்; பரவசத்தில் ஆழ்ந்த பக்தர்கள்!". https://www.vikatan.com/. {{cite web}}: External link in |website= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருட_வாகனம்&oldid=3711869" இலிருந்து மீள்விக்கப்பட்டது