கருட கர்வபங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருட கர்வபங்கம்
ஒரு காட்சி
இயக்கம்ஆர். பத்மநாபன்
மூலக்கதைஸ்ரீ கிருஷ்ணன் புராணம்
இசைசிதம்பரம் வைத்யநாத சர்மா
நடிப்புஎம். டி. பார்த்தசாரதி

செருகளத்தூர் சாமா

எம். எஸ். மோகனாம்பாள்
மற்றும் பலர்
கலையகம்ஓரியண்டல் பிலிம்ஸ்
வெளியீடு1936
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கருட கர்வபங்கம் (Garuda Garvabhangam) ஒரு இந்திய தமிழ் புராணத் திரைப்படமாகும். 1936 ஆம் ஆண்டு வெளியிடப்பெற்ற இத் திரைப்படத்தில் எம். டி. பார்த்தசாரதி, செருகளத்தூர் சாமா இன்னும் பலர் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்[தொகு]

எம். டி. பார்த்தசாரதி
செருகளத்தூர் சாமா
எம். எஸ். மோகனாம்பாள்
வித்வான் ஸ்ரீநிவாசன்
ஜி. எஸ். மணி
விமலா
ஒய். வி. ராவ்
எம். டி. சுப்ரமணிய முதலியார்[1]

தயாரிப்புக் குழு[தொகு]

தயாரிப்பு: ஓரியண்டல் ஃபிலிம்ஸ்
இயக்கம்: ஆர். பத்மநாபன், பிரேம் சேத்னா[2]
ஒளிப்பதிவு: பிரிக்கி
இசை: சிதம்பரம் வைத்யநாத சர்மா[1]

தயாரிப்பு விபரம்[தொகு]

புராணத்தில் வரும் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகளில் ஒன்றான கருட கர்வபங்கம் முதலில் 1929 ஆம் ஆண்டு ஏ. நாராயணன் என்பவரால் மௌனப்படமாகத் தயாரிக்கப்பட்டது. 1936 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்தப் படம் கொல்கத்தாவிலுள்ள பயனியர் ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது. இதே படம் பின்னர் 1943 ஆம் ஆண்டு கண்டசாலா பலராமையா என்பவரால் தெலுங்கில் தயாரிக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருட_கர்வபங்கம்&oldid=3713908" இருந்து மீள்விக்கப்பட்டது