கருடா அதிரடிப் படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருடா அதிரடிப் படை
படிமம்:IAF-Garud SF.png
உருவாக்கம்6 பிப்ரவரி 2004- தற்போது வரை
நாடுஇந்தியா இந்தியா
கிளை இந்திய வான்படை
வகைஇந்தியச் சிறப்புப் படைகள் [1]
பொறுப்பு
 • வான் தாக்குதல்
 • போர் விமான தளக் கட்டுப்பாடு & பாதுகாப்பு
 • வான் போக்குரத்து கட்டுப்பாடு
 • எதிர் தாக்குதல்
 • நேரடி தாக்குதல்
அரண்/தலைமையகம்இந்தன் வான் படை நிலையம், காசியாபாத்[2]
குறிக்கோள்(கள்)॥प्रहार से सुरक्षा॥ (மொழிபெயர்ப்பு:தாக்குதல் மூலம் பாதுகாப்பு)
பதக்கம்அசோக சக்கரம் 1, சௌரிய சக்கரம் 4
படைத்துறைச் சின்னங்கள்
Garud Commando Force Patchபடிமம்:Garud Commando Force Logo.jpg
இந்திய வான்படை நாளின் போது கருடா அதிரடிப் படையினர் பயிற்சி செய்தல், 2018

கருடா அதிரடிப் படை (Garud Commando Force) இந்தியச் சிறப்புப் படைகளின் ஒரு பிரிவான கருடா அதிரடிப் படை, இந்திய வான்படையின் ஒரு அலகாகச் செயல்படுகிறது. கருடா அதிரடிப் படை செப்டம்பர் 2004-இல் நிறுவப்பட்ட இப்படையில் தற்போது 1,500 அதிரடி வீரர்களும், அதிகாரிகளும் உள்ளனர்.[3][4][5]

கருடா அதிரடிப் படைகள் வான் படையின் தளங்களை எதிரிகளிடமிருந்து பாதுகாத்தலே முக்கியப் பணியாகும்.;[6][7]

கருடா அதிரடிப்படை வீரர்கள் தேர்வு & பயிற்சி[தொகு]

2008-இல் அமெரிக்காவின் நவேதா பாலைவனத்தில் கருடா அதிரடிப் படைவீரர்கள் பயிற்சி எடுத்தல்

இந்தியத் தரைப்படை மற்றும் கடற்படைகளின் சிறப்புப் படை வீரர்களை, தங்கள் படையிலிருந்தே தேர்வு செய்வது வழக்கம். ஆனால கருடா அதிரடிப் படை வீரர்களை இந்திய வான்படையினர் தனியாக விளம்பரம் செய்து, தேர்வு மையங்கள் மூலம் ஆட்சேர்ப்பு செய்கிறது. படைக்கு தகுதியான வேட்பாளர்கள, கடுமையான உடல் பயிற்சி மற்றும் எழுத்துத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். கருடா அதிரடிப் படையில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களின் பயிற்சிக் காலம் 72 வாரங்கள் ஆகும்.

தேர்வான ஒரு கருடா அதிரடிப் படை வீரர் எங்கு இடுகையிடப்பட்டாலும், அவர் ஒரு இந்திய வான்படை பிரிவின் ஒரு பகுதியாக இருப்பார். கருடா அதிரடிப் படைக்கு தேர்வானவர்களுக்கு தெலுங்காணா மாநிலத்தில் துண்டிகல் விமானப்படை அகாதமியில் 72 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். இதில் பாராசூட் பயிற்சியும் அடங்கும்.

பாராசூட்டிலிருந்து வானிலிருந்து தரையில் குதிக்கும் கருடா அதிரடிப் படைவீரர், பொக்ரான், 2013

பொறுப்புகள்[தொகு]

நேரடி நடவடிக்கை, சிறப்பு உளவு, எதிரி பிரதேசத்தில் வீழ்ந்த விமானிகளை மீட்பது, எதிரி பிரதேசத்தில் விமானப் படை தளங்களை நிறுவுதல் மற்றும் இந்த விமானத் தளங்களுக்கு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை வழங்குதல் ஆகியவை கருடாவின் கட்டாயப் பணிகளில் அடங்கும்.[8] எதிரிகளின் வான் பாதுகாப்புகளை அடக்குதல் மற்றும் ரேடார்கள் போன்ற பிற எதிரி சொத்துக்களை அழித்தல், இந்திய வான்வழித் தாக்குதல்களின் விளைவுகளை மதிப்பீடு செய்தல் மற்றும் இந்திய வான்வழித் தாக்குதல்களுக்கு வழிகாட்ட லேசர் வடிவமைப்புகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை கருடா அதிரடிப் படை மேற்கொள்கிறது. [9] [10] இந்திய வான்படை தளங்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பு பொதுவாக விமானப்படையின் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்படினும், சில முக்கியமான சொத்துக்களை கருடா அதிரடிப் படையால் பாதுகாக்கப்படுகின்றன. [10]கருடா அதிரடிப் படை செய்யும் பணிகளில் பயங்கரவாத எதிர்ப்பு, வான்வழி தாக்குதல், கடத்தல் எதிர்ப்பு, பணயக்கைதிகள் மீட்பு மற்றும் பேரழிவுகளின் போது பொதுமக்கள் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுதல் ஆகியவையும் அடங்கும்.[11]

Garud 2019 வாயு சக்தி பயிற்சியின் போது கருடா அதிரடிப் படையினர்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Special Forces of India
 2. Hindan Air Force Station
 3. "Garud commandoes take first casualties after operating for 12 yrs in J&K". 2017-10-12. 2018-10-14 அன்று பார்க்கப்பட்டது.
 4. "IAF to induct 700 more Garud commandos". India.com. 2016-02-02. 2016-02-03 அன்று பார்க்கப்பட்டது.
 5. "IAF plans to raise 10 more Garud squadrons - The Economic Times". The Economic Times. 2016-02-03 அன்று பார்க்கப்பட்டது.
 6. Press Information Bureau, இந்திய அரசு(18 December 2003). "Constitution of Commando Force". செய்திக் குறிப்பு. Archived from the original in Wayback Machine.
 7. "IAF's Garuda Force to be sent to Congo". www.rediff.com. 2018-04-25 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Indian Commandos Heads To Israel For 'Major' Military Drill". Outlook. 10 November 2017. 27 September 2020 அன்று பார்க்கப்பட்டது.
 9. Shukla, Ajai (2017-10-11). "Garud commandoes take first casualties after operating for 12 yrs in J&K". Business Standard India. https://www.business-standard.com/article/current-affairs/garud-commandoes-take-first-casualties-after-secretly-operating-for-12-yrs-117101101012_1.html. 
 10. 10.0 10.1 V.K. Bhatia, Air Marshal (Retd) (October 2009). "Special Forces - Garuds for All Reasons". SP’s Aviation (ஆங்கிலம்). 2020-09-27 அன்று பார்க்கப்பட்டது.
 11. "City-based airmen were part of anti-terror operations". The Tribune. October 12, 2017. 28 September 2020 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருடா_அதிரடிப்_படை&oldid=3315411" இருந்து மீள்விக்கப்பட்டது