கருஞ்சீரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருஞ்சீரகம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: பூக்குந்தாவரம்
வகுப்பு: மூவடுக்கிதழி
வரிசை: Ranunculales
குடும்பம்: Ranunculaceae
பேரினம்: Nigella
இனம்: N. sativa
இருசொற் பெயரீடு
Nigella sativa
லி.
Nigella sativa

கருஞ்சீரகம் (Nigella sativa) தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவினைத் தாயகமாகக் கொண்ட தாவரம். இச்செடி 20 முதல் 30 செ.மீ. உயரம் வரை வளரும். மலர்கள் நீண்ட காம்புகளுடன் வெளிர் நீல நிறத்தில் இருக்கும். கனியின் மேற்பகுதி பிளவுற்று விதைகள் வெளியாகும். ஒரு காயில் பல விதைகள் அடங்கியிருக்கும். இவை கறுப்பாகவும், உறுதியாகவும் இருக்கும். இதன் விதைகள் நறுமண உணவுப் பொருளாகப் பயன்படுகின்றன. இது பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இதை சாப்பிட்ட உடன் தொண்டையில் ஒரு விதமான அரிப்புணர்வை சில நிமிடங்களுக்கு ஏற்படுத்துகிறது.

"இறப்பைத்தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக் கூடியது கருஞ்சீரகம்" என்று இசுலாம் மதத்தின் தூதர் நபிகள் நாயகம் அவர்களது வாக்காகக் கருதப்படுகிறது. யுனானி மருத்துவத்தில், இன்றளவும் இதன் எண்ணெயை பயன்படுத்தப்படுகின்றனர். மேலும் அரபு நாடுகளிலும் இதனை உணவுடன் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றனர்.

விவிலியத்திலும் இதனை பற்றி குறிப்பிடபட்டுள்ளது.

இடம்பெற்றுள்ள சத்துக்கள்[தொகு]

இதன் விதையில் இடம்பெற்றுள்ள தைமோகுவினோன் வேறு எந்த தாவரத்திலும் இல்லாத ஒன்று. மேலும் அவசியமான அமினோ அமிலங்கள், அவசியமான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பீடா-கரோடின், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்களையும் கொண்டுள்ளது.

மருத்துவ குணங்கள்[தொகு]

இதன் விதைகள் நெடுநாள் நோய்களான புற்றுநோய், இருதயநோய் மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றையும் குணப்படுத்தக் கூடியதாக நம்பப்படுகிறது. கருஞ்சீரகத்தை வைத்து நடத்தப்பட்ட ஆய்வுகள் அவை நோய் எதிர்பாற்றல் முறைமையை வலுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கருஞ்சீரகம் சக்தி வாய்ந்த ஆண்டிஆக்ஸிடண்ட்(antioxidant) ஆகும். மற்றும் வீக்கம் தணிக்கும் (anti-inflammatory) குணத்தையும் கொண்டுள்ளது. இதனால் ஆஸ்துமா மற்றும் சுவாச ஒவ்வாமை நோய்களுக்கான தகுந்த எதிர்ப்பு சக்தியினைத் தருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருஞ்சீரகம்&oldid=3725999" இருந்து மீள்விக்கப்பட்டது