சின்னக் கீச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

தமிழ்நாட்டில் காணப்படும் கீச்சான் பறவைகளில் இது ஒரு வகையாகும்.

கருஞ்சிப்பு முதுகுக் கீச்சான்
Bay-backed shrike (Lanius vittatus).jpg
Rajastan, இந்தியா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: Laniidae
பேரினம்: Lanius
இனம்: L. vittatus
இருசொற் பெயரீடு
Lanius vittatus
(Valenciennes, 1826)

பெயர்கள்[தொகு]

தமிழில் :கருஞ்சிப்பு முதுகுக் கீச்சான்

ஆங்கிலத்தில் :Bay-backed shrike

அறிவியல் பெயர் :Lanius vittatus

உடலமைப்பு[தொகு]

18 செ.மீ - பருத்த தலையும் முனைவளைந்த மேல் அலகும் நீண்டு குறுகிய வாலும் உடைய இதன் நெற்றியும் கண்பட்டையும் கருப்பாக இருக்கும். உச்சந்தலை வெண்மை, முதுகு செம்பழுப்பு, பிட்டம் வெள்ளை, மார்பும் வயிறும் வெள்ளை. [2]

காணப்படும் பகுதிகள் & உணவு[தொகு]

முள் மரங்களோடு கூடிய காடுகள் விளைநிலங்களைச் சார்ந்த வேலிகள் தந்திக் கம்பிகளிலும் தனித்து அமர்ந்து காணப்படும். தத்துக்கிளி, சில வண்டு, ஓணான் ஆகியவற்றை உணவாக உண்ணும்.

இனப்பெருக்கம்[தொகு]

பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையான பருவத்தில் கரவேல், இலந்தை, வேலிக் கருவை போன்ற மரங்களின் கவட்டியில் கூடமைத்து 3 முதல் 5 முட்டைகள் இடும்.

மேற்கோள்கள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

Bay-Backed Shrike -- Bd Environment

  1. "Lanius vittatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க . ரத்னம் -மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:118
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னக்_கீச்சான்&oldid=3142896" இருந்து மீள்விக்கப்பட்டது