கருங் காய்ச்சல்
கருங் காய்ச்சல் Visceral leishmaniasis காலா அசார் | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | infectious diseases |
ஐ.சி.டி.-10 | B55.0 |
ஐ.சி.டி.-9 | 085.0 |
நோய்களின் தரவுத்தளம் | 7070 |
ஈமெடிசின் | emerg/296 |
ம.பா.த | D007898 |
கருங் காய்ச்சல் Visceral leishmaniasis (VL), காலா அசார் என்னும் அறியப்படுவது,[1] black fever, மற்றும் Dumdum fever,[2] லெஷ்மேனியாசிசின் கடுமையான வடிவம் மற்றும், முறையான நோயறிதல் மற்றும் சிகிச்சை இல்லையானால், அதிக உயிரிழப்பு ஏற்படும் நோய்களில் ஒன்று.[3] கருங் காய்சல் நோயானது லீஷ்மேனியா பேரினத்தைச் சேர்ந்த லெஷ்மேனியா டெனோவானி என்னும் புரோட்டோசோன் ஒட்டுண்ணிகள் காரணமாக ஏற்படும் நோயாகும்.
இந்த ஒட்டுண்ணிகள் கல்லீரல், மண்ணீரல், எலும்பு மச்சை, போன்ற உள்ளுறுப்பு பகுதிகளுக்கு இடம்பெயர்கிறது, இந்த நோயிக்கு உரிய மருத்துவம் அளிக்காவிட்டால் அது மரணத்தை ஏற்படுத்தும். நோயின் அறிகுறிகள் காய்ச்சல், எடை இழப்பு, சோர்வு, தோலில் புண் - தடிப்புகள், குருதிச்சோகை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் கணிசமான வீக்கம் போன்றவை ஆகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, இந்த நோய் எச்.ஐ.வி / விஎல் க்கு இணையாக வளர்ந்துவரும் ஒரு நோய்த்தொற்று பிரச்சனையாகும்..[4]
இந்த நோய் உலகில் இரண்டாவது பெரிய ஒட்டுண்ணி கொலையாளியாக (மலேரியாவுக்கு அடுத்து) உள்ளது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200,000 முதல் 400,000 பேர் இந்த நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகின்றனர்.[5][6]
பரவும் விதம்
[தொகு]கருங்காய்ச்சலானது மலேரியாவைப் போன்றே ஒருவகை கொசுக்கள் மூலம் பரவுகின்றது. மணல் கொசுக்கள் என்றழைக்கப்படும் இவ்வகைக் கொசுக்கள், சாதாரண கொசுக்களைவிட உருவத்தில் சிறியதாக உள்ளன. இவை ‘லெஷ்மேனியா டெனோவானி’ என்ற ஒட்டுண்ணியை மனிதர்களுக்குப் பரப்புகிறது. இந்த ஒட்டுண்ணிகளால் உடல் நிலை பாதிப்படைகிறது.
மருத்துவம்
[தொகு]ஒருவருக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அவருக்குக் கருங் காய்ச்சலுக்கான சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆர்.கே.39, எலீசா ஆகிய குருதி பரிசோதனைகள் மூலம் கருங்காய்ச்சலா, சாதாரண காய்ச்சலா என்பது உறுதி செய்யப்படும்.
நோயாளிக்குக் கருங்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் ‘சோடியம் ஸ்டிபோகுளுகோனேட்’ (எஸ்எஸ்பி) என்ற ஊசி மருந்து 20 நாட்களுக்கு தொடர்ந்து செலுத்தப்படும்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "WHO | Visceral leishmaniasis". www.who.int. பார்க்கப்பட்ட நாள் 2015-10-05.
- ↑ James, William D.; Berger, Timothy G.; et al. (2006). Andrews' Diseases of the Skin: clinical Dermatology. Saunders Elsevier. p. 426. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7216-2921-0.
- ↑ Das, Aritra; Karthick, Morchan; Dwivedi, Shweta; Banerjee, Indranath; Mahapatra, Tanmay; Srikantiah, Sridhar; Chaudhuri, Indrajit (2016-11-01). "Epidemiologic Correlates of Mortality among Symptomatic Visceral Leishmaniasis Cases: Findings from Situation Assessment in High Endemic Foci in India". PLoS neglected tropical diseases 10 (11): e0005150. doi:10.1371/journal.pntd.0005150. பன்னாட்டுத் தர தொடர் எண்:1935-2735. பப்மெட்:27870870.
- ↑ "Leishmaniasis and HIV co-infection". WHO.
- ↑ "Leishmaniasis". WHO Fact sheet N°375. World Health Organization. பார்க்கப்பட்ட நாள் 23 September 2014.
- ↑ Desjeux P. (2001). "The increase of risk factors for leishmaniasis worldwide". Transactions of the Royal Society of Tropical Medicine and Hygiene 95 (3): 239–43. doi:10.1016/S0035-9203(01)90223-8. பப்மெட்:11490989.
- ↑ ஜேக்கப் கோஷி (21 ஆகத்து 2017). "சிறிய மணல் கொசுக்களால் பரவும் கொடிய கருங் காய்ச்சல்". செய்திக் கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகத்து 2017.