கருங்குழி பேரூராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருங்குழி பேரூராட்சி இது, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மதுராந்தகம் ஒன்றியத்தில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

பேரூராட்சி[தொகு]

இப்பேரூராட்சி 15 வார்டுகள் கொண்டது. இப்பேரூராட்சிக்கு உட்பட்டு 3 கிராமங்கள்உள்ளன. அவை மேலவலம்பேட்டை, மலைப்பாளையம் மற்றும் கருங்குழி ஆகும். இப்பேரூராட்சிக்கு உட்பட்டு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி, இரு நடுநிலைப்பள்ளிகள் மற்றும் ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது. மொத்த மக்கள் தொகை 12,485 ஆகும்.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 15 வார்டுகளையும், 3,075 h குடியிருப்புகளையும் கொண்ட இப்பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 12,485 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 6,245 மற்றும் 6,240 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 999 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 1300 ஆகும். சராசரி எழுத்தறிவு 88.27% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 4,577 மற்றும் 135 ஆகவுள்ளனர்.[1]> இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 92.96%, இசுலாமியர்கள் 5.44%, கிறித்துவர்கள் மற்றும் பிறர் 0.47% ஆக உள்ளனர். [2]

குடிநீர் வசதி[தொகு]

இவ்வூருக்கு அருகில் பாலாறு ஓடுகிறது. மதுராந்தகம் ஏரியும் அருகில் உள்ளதால் விவசாயம் குறைவற நடைபெறுகிறது. ஏரிப்பாசனம் நடைபெறுகிறது. குடிநீர் வசதி நிறைவாக உள்ளது.

போக்குவரத்து வசதி[தொகு]

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இவ்வூர் உள்ளதால் 'போக்குவரத்து வசதி நன்றாக உள்ளது.

சிறப்புகள்[தொகு]

கருங்குழி பேரூராட்சி, தமிழ்நாட்டின் சிறந்த பேரூராட்சியாக முதல் பரிசை 15 ஆகத்து 2022 அன்று பெற்றது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருங்குழி_பேரூராட்சி&oldid=3856082" இலிருந்து மீள்விக்கப்பட்டது