கருக்கால மது அருந்துதல் கோளாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருக்கால மது அருந்துதல் கோளாறு
கருக்கால மது அருந்துதல் கோளாறினால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை.
சிறப்புஉளவியல், குழந்தை மருத்துவம், நச்சியல்
அறிகுறிகள்அசாதாரனத் தோற்றம், குறைந்த உயரம்,குறைவான எடை, குறுந்தலை, குறைவான ஒருங்கிணைப்பு, குறைந்த அறிவுத்திறன், நடத்தைச் சிக்கல்கள்[1][2]
கால அளவுநீண்ட காலம்[1][3]
வகைகள்கருக்கால மது அருந்துதல் கோளாறு, பகுதி கருக்கால மது அருந்துதல் கோளாறு ஆல்கஹால் தொடர்பான நரம்பு வளர்ச்சிக் கோளாறுகள்r, ஆல்கஹால் தொடர்பான பிறவிக் குறைபாடுகள்[1]
காரணங்கள்கருத்தரித்த காலத்தில் மது அருந்துதல்[1]
நோயறிதல்ஆறிகுறல் மூலம் கண்டறியப்படுகிறது[1]
தடுப்புகருத்தரிப்புக் காலத்தில் மது அருந்துவதைத் தவிர்த்தல்[4]
சிகிச்சைபெற்றோர்-குழந்தைக்கிடையே தொடர்புச் சிகிச்சை,நடத்தை மாற்ற முயற்சிகள், சாத்தியப்படும் மருந்துகள்[5]
நிகழும் வீதம்1–5% (US, EU)[6]

கருக்கால மது அருந்தல் கோளாறுகள் (Fetal alcohol spectrum disorders); என்பது கருத்தரிப்புகாலத்தில் தாய் மது அருந்துவதால் கருவுக்கு ஏற்படக்கூடிய நிலைமைகளின் குழு ஆகும். இதன் சிக்கல்களில் பிறக்கும் குழந்தைக்கு அசாதாரண தோற்றம், குறுகிய உயரம், குறைந்த உடல் எடை, சிறிய தலை , குறைந்த ஒருங்கிணைப்பு, குறைந்த புத்திசாலித்தனம், நடத்தை பிரச்சினைகள் மற்றும் கேள்விக் குறைபாடு அல்லது பார்வைக் குறைபாட்டில் சிக்கல்கள் ஆகியவை இருக்கலாம்.[2] பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி பயிலும் பொழுது பள்ளியில் சிக்கல், சட்ட சிக்கல்கள், அதிக ஆபத்துள்ள நடத்தைகளில் பங்கேற்பது மற்றும் ஆல்கஹால் அல்லது பிற மருந்துகளில் சிக்கல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.[7] இந்த நிலையின் மிகக் கடுமையான வடிவம் கரு ஆல்கஹால நோய்க்குறி ( FAS ) என அழைக்கப்படுகிறது. பிற வகைகளில் பகுதி கரு ஆல்கஹால் நோய்க்குறி ஆல்கஹால் தொடர்பான நரம்பியல் வளர்ச்சி கோளாறு (ஏ.ஆர்.என்.டி) மற்றும் ஆல்கஹால் தொடர்பான பிறப்பு குறைபாடுகள் (ஏ.ஆர்.பி.டி) ஆகியவை அடங்கும்.[1][8] சிலர் FAS ஐ ஒரு நோயறிதலாக மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்கள், மற்ற வகைகளைப் பொறுத்தவரை ஆதாரங்கள் முடிவில்லாதவை என்று கருதுகின்றனர்.[9]

தாய் கருத்தரித்த காலத்தில் மது அருந்துவதால் கரு ஆல்கஹால் மூளை ஸ்பெக்ட்ரம் கோளாறுகள் ஏற்படுகின்றன.[1] அமெரிக்காவின் ஆய்வுகள் கடந்த மாதத்தில் சுமார் 10% கர்ப்பிணிப் பெண்கள் மது அருந்தியுள்ளதாகவும், கர்ப்ப காலத்தில் 20% முதல் 30% வரை ஒரு கட்டத்தில் குடித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பிணி அமெரிக்க பெண்களில் சுமார் 3.6% பேர் குடிப்பழக்கம் உள்ளவர்களாக உள்ளனர்.[10] சிக்கல்களின் ஆபத்து நுகரப்படும்அளவு, நுகரும் எண்ணிக்கை இடைவெளி,கர்ப்ப காலத்தில் ஆல்கஹால் எப்போது உட்கொள்ளப்படுகிறது என்பதைப் பொறுத்தது. வயதான தாய், புகைபிடித்தல் மற்றும் மோசமான உணவு ஆகியவை பிற ஆபத்து காரணிகளில் அடங்கும்.[11][12] கர்ப்ப காலத்தில் அறியப்பட்ட பாதுகாப்பான அளவு அல்லது குடிக்க பாதுகாப்பான நேரம் என எதுவும் இல்லை.[13] சிறிய அளவிலான ஆல்கஹால் குடிப்பதால் குழந்தையின் முகத்தில் அசாதாரணங்கள் ஏற்படாது, மாறாக இது நடத்தைச் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். ஆல்கஹால் முளைக்கான இயற்கையாக அமைந்துள்ள இரத்தத்தடையைக் கடக்கிறது. மேலும் கருவில் வளரும் குழந்தையை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கிறது.[14] நோய் கண்டறிதல் என்பது நபரின் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டது.

கருத்தரிப்புக் காலத்தில் மது அருந்துவதைத் தவிர்ப்பதன் மூலம் கருக்கால மது அருந்துதல் கோளாறுகள் தடுக்கப்படுகின்றன.[4] இந்த காரணத்திற்காக, மருத்துவர்கள் கருத்தரித்த காலத்தில் அல்லது கருத்தரித்தலுக்கான முயற்சியில் இருக்கும்போதும் மது அருந்துதல் வேண்டாம் என்று பரிந்துரைக்கின்றனர்.[15][16] அவ்வாறு மது அருந்துதவதால் குழந்தைக்கு ஏற்படும் இந்த கோளாறு நிலை அதன் வாழ்நாள் முழுதும் நிரந்தரமானது என்றாலும், சிகிச்சையானது விளைவுகளை மேம்படுத்தலாம்.[1] பெற்றோர்-குழந்தை இடையேயான தொடர்பு சிகிச்சை, குழந்தைகளின் நடத்தையை மாற்றுவதற்கான முயற்சிகள் மற்றும் மருந்துகள்[5] ஆகியவை இதற்கான சிகிச்சை முறைகளில் இடம்பெற்று இருக்கலாம்.[3]

அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் 1% முதல் 5% மக்கள் இந்த கருக்கால மது அருந்துதல் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 0.2 முதல் 9 வரையான குழந்தைகளுக்கு இந்த கருவில் மது அருந்துவதால் ஏற்படும் கோளாறு ஏற்படும் என்று நம்பப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில், சில கணக்கெடுப்புகளில் இந்த எண்ணிக்கை 9% விட அதிகமாக உள்ளது. கர்ப்ப காலத்தில் ஆல்கஹால் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என பண்டைய காலங்களிலிருந்து விவரிக்கப்பட்டுள்ளன.[8] இக்கோளாறு உடைய (FAS) உடைய ஒரு குழந்தையின் வாழ்நாள் செலவு அமெரிக்காவில் 2002 இல், $ 2,000,000 ஆகும்.[6] கருக்கால ஆல்கஹால் நோய்க்குறி என்ற சொல் முதன்முதலில் 1973 இல் பயன்படுத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "Facts about FASDs". April 16, 2015. Archived from the original on 23 May 2015. பார்க்கப்பட்ட நாள் 10 June 2015.
 2. 2.0 2.1 Fetal alcohol spectrum disorder: Canadian guidelines for diagnosis. 
 3. 3.0 3.1 Rasmussen, Carmen; Andrew, Gail; Zwaigenbaum, Lonnie; Tough, Suzanne (2016-11-20). "Neurobehavioural outcomes of children with fetal alcohol spectrum disorders: A Canadian perspective". Paediatrics & Child Health 13 (3): 185–191. பன்னாட்டுத் தர தொடர் எண்:1205-7088. பப்மெட்:19252695. 
 4. 4.0 4.1 "Alcohol Use in Pregnancy". 17 April 2014. Archived from the original on 28 June 2015. பார்க்கப்பட்ட நாள் 10 June 2015.
 5. 5.0 5.1 Roszel, EL (13 April 2015). "Central nervous system deficits in fetal alcohol spectrum disorder.". The Nurse Practitioner 40 (4): 24–33. doi:10.1097/01.npr.0000444650.10142.4f. பப்மெட்:25774812. 
 6. 6.0 6.1 "Data & Statistics Prevalence of FASDs". Center for Disease Control and Prevention. April 16, 2015. Archived from the original on 29 June 2015. பார்க்கப்பட்ட நாள் 10 June 2015.
 7. Fetal Alcohol Spectrum Disorder (FASD): neurobehavioral profile, indications for diagnosis and treatment.. 2013. 
 8. 8.0 8.1 Fetal alcohol spectrum disorders: an overview.. June 2011. 
 9. "Fetal Alcohol Syndrome (FAS) and Fetal Alcohol Spectrum Disorders (FASD) – conditions and interventions". www.sbu.se. Swedish Agency for Health Technology Assessment and Assessment of Social Services (SBU). 14 December 2016. Archived from the original on 6 June 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-06-08.
 10. Epidemiology of substance use in reproductive-age women.. June 2014. 
 11. An Update on Fetal Alcohol Syndrome—Pathogenesis, Risks, and Treatment. 2016. 
 12. "Fetal Alcohol Exposure". April 2015. Archived from the original on 10 June 2015. பார்க்கப்பட்ட நாள் 10 June 2015.
 13. Fetal Alcohol Spectrum Disorders. 19 October 2015. 
 14. Fetal Alcohol Spectrum Disorder: Management and Policy Perspectives of FASD. 2011 இம் மூலத்தில் இருந்து 10 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170910233951/https://books.google.com/books?id=TiSL4txuYN0C&pg=PA73. 
 15. Vice Admiral Richard H. Carmona (2005). "A 2005 Message to Women from the U.S. Surgeon General" (PDF). Archived from the original (PDF) on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 12 June 2015.
 16. "Australian Government National Health and Medical Research Council". Archived from the original on 5 November 2012. பார்க்கப்பட்ட நாள் 4 November 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)