உள்ளடக்கத்துக்குச் செல்

கரிவெள்ளூர் முரளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரிவெள்ளூர் முரளி
கரிவெள்ளூர் முரளி
பிறப்பு15 நவம்பர் 1955 (1955-11-15) (அகவை 69)
கரிவெள்ளூர், கேரளம், இந்தியா
பணிகவிஞர், பாடலாசிரியர், நாடக ஆசிரியர், எழுத்தாளர்
பெற்றோர்எ. வி. குஞ்ஞம்பு, கே. தேவநாயகி
வாழ்க்கைத்
துணை
கோமளவல்லி கே.வி.
விருதுகள்நாடகத்திற்கான கேரள சாகித்ய அகாடமி விருது
கேரள சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப்

கரிவெள்ளூர் முரளி (Karivellur Murali) என்பவர் கேரளத்தைச் சேர்ந்த மலையாள கவிஞரும், நாடக ஆசிரியரும் ஆவார். நாடகத்துக்கான கேரள சாகித்ய அகாதமி விருது, கேரள சங்கீத நாதக அகாடமி விருது, கேரள சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

வாழ்க்கை

[தொகு]

முரளி 1955 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாள் பொதுவடமைக் கட்சித் தலைவர் ஏ. வி. குஞ்சம்பு, கே. தேவயானி இணையருக்கு அன்றைய மலபார் மாவட்டத்தில் உள்ள கரிவெள்ளூரில் பிறந்தார்.[1] 1976 ஆம் ஆண்டு கண்ணூர் கெல்ட்ரானில் தனது பணிக்குச் சேர்ந்த இவர், 2013 நவம்பர் 30, அன்று கண்ணூர் கெல்ட்ரானில் மூத்த ஸ்டோர்ஸ் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது மனைவி பாரத ஸ்டேட் வங்கி ஊழியரான கே. வி. கோமளவள்ளி என்பவராவார். இவர் கெல்ட்ரான் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியூ) தலைவராக 20 ஆண்டுகள் இருந்தார்.

கலை, இலக்கியத் தொழில்

[தொகு]
ஜனவரி 2018, மும்பையில் நடந்த இலக்கிய முகாமில் கரிவெள்ளூர் முரளி பேசுகிறார்.

கரிவெள்ளூலூர் முரளி சிறுவயதிலிருந்தே கவிதைகளையும், பாடல்களையும் எழுதத் தொடங்கினார். இவர் தனது 10 வயதில் கே.கே. ஐயக்காட் எழுதிய ஸ்மரகம் நாடகத்தில் நடித்து தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார், மேலும் 1966 ஆம் ஆண்டு கரிவெள்ளூர் தியாகிகள் தினத்தன்று அரங்கேற்றினார்.[2] அதன் பிறகு பல நாடகங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தார். கரிவெள்ளூர் ஜனசக்தி, கரிவெள்ளூர் சென்ட்ரல் ஆர்ட்ஸ் கிளப், அரோலி சாந்திபிரபா, கல்லியச்சேரி கவிதா தியேட்டர்ஸ், கடம்பேரி யுவஜன [2] போன்ற பல பிராந்திய கலை பன்றங்களின் நாடகங்களில் தீவிரமாக நடித்தார். இவர் 40 ஆண்டுகளாக அனைத்திந்திய வானொலி நாடகங்களின் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார்.[2]

கரிவெள்ளூர் முரளியின் முதல் கவிதைத் தொகுப்பு எண்டே சொன்ன மண்ணின் பாட்டு என்ற பெயரில் 1982 இல் வெளிவந்தது. இந்தப் படைப்பில் இவரது தந்தை குன்ஹம்பு தலைமையிலான கரிவெள்ளூர் போராட்டம் குறித்த ஒரு கவிதை உள்ளது. இருபத்தொரு வயதில், இவர் முதன்முதலில் அபராஜிதரன் ரட்டி என்ற நாடகத்தை எழுதினார். கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் நடத்திய கண்ணூர் மாவட்ட அளவிலான போட்டியில் இந்த நாடகம் ஐந்து விருதுகளைப் பெற்றது.[2]

1977 ஆம் ஆண்டில், கேரளத்தின் முதல் வீதி நாடகங்களில் ஒன்றான 'படையோட்டம்' என்ற தெரு நாடகத்தை எழுதி இயக்கினார்.[2] அதன் பிறகு இவர் கேரளத்தில் வீதி நாடகம், திறந்தவெளி நாடகம், கலா ஜாதா இயக்கத்தின் முக்கிய ஆதரவாளராக ஆனார்.[2]

1987 ஆம் ஆண்டில், கண்ணூரில் சங்க சேதனா என்ற நாடகக் குழு உருவாக்கப்பட்டது. இவர் அதன் நிறுவன செயலாளராக இருந்தார். பின்னர் இவர் கண்ணூர் சங்க சேதனாவை 17 ஆண்டுகள் வழிநடத்தினார். இவரது பல படைப்புகள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.[2] 1998 ஆம் ஆண்டில், சங்க சேதனாவால் அரங்கேற்றப்பட்ட முரளியின் நாடகமான சே குவேரா ஆறு மாநில விருதுகளைப் பெற்றது.[2] இந்த நாடகம் ஒரு ஆண்டில் சுமார் முன்னூறு அரங்குகளில் மேடையேறியது.[2] மேலும் இவர் பல கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

முரளி சுமார் அறுபது நாடகங்களை எழுதியுள்ளார். எழுதியது மட்டமல்லாமல் நாடகங்களை இயக்கியுமுள்ளார். 1980 முதல் 2015 வரை 25 ஆண்டுகளாக கேரள சாஸ்திர சாகித்ய பரிசத் நடத்திய கலா ஜாதங்களுக்கு (கலை நடைப்பயணம்) கவிதைகளையும் எழுதினார்.[3] கெல்ட்ரான் கிளப், கல்யாசேரி கவிதா தியேட்டர்ஸ், அரோலி சாந்திபிரபா போன்ற நாடகக் குழுக்களுடன் இணைந்து நாடக நடவடிக்கைகளை இவர் சுறுசுறுப்பாக்கினார்.[2]

2003 ஆம் ஆண்டில், இவர் ரஜிதா மதுவின் 'அபு பக்கரின்டே உம்மா பரஞ்சத்' (அதாவது: அபு பக்கரின் உம்மா கூறுகிறார்) என்ற ஓரங்க நாடகத்தை எழுதி இயக்கினார். இது 2802 முறை மேடையேறி சாதனையைப் படைத்தது.[2]

இவர் புரோகமன கலா சாகித்ய சங்க மாவட்டச் செயலாளர், தலைவர், மாநிலச் செயலாளர், கேரள கேரள சங்கீத நாடக அகாதமியின் செயற்குழு உறுப்பினர், கேரள பிரஸ் அகாதமியின் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தார்.[2] 2022 இல் கேரள சங்கீத நாடக அகாதமியின் செயலாளராக கரிவெள்ளூர் முரளி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

படைப்புகள்

[தொகு]

நாடகங்கள்

[தொகு]
  • அபராஜிதருடெ ராத்ரி
  • அக்ரயாணம்
  • சங்ககனம்
  • ஜேக்கப் அலெக்சாண்டர் எந்தினு ஆத்மஹத்யா செய்து?
  • விஸ்வநாதன் ஓடிக்கொண்டிரிக்குன்னு
  • அபூபக்கறின்றெ உம்மா பறையுன்னு
  • குருதிப்பாடம்
  • சே குவேரா [5]
  • கலரக்குஞ்ஞம்மா ஓர்க்குன்னு
  • ஈ பூமி அருடேத்?

ஆவணப்படம்

[தொகு]

கேரளத்தின் போராட்டங்கள் மற்றும் தியாகிகள் குறித்து இவர் எழுதி இயக்கிய செஞ்சொறபூவுகள் என்ற ஆவணப்படம் கைரளி தொலைக்காட்சியில் 50 அத்தியாயங்களாக ஒளிபரப்பாகியுள்ளது.[2]

விருதுகள்

[தொகு]
  • கேரள சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப் 2021 [6]
  • நாடகத்திற்கான கேரள சாகித்ய அகாடமி விருது 2000 (சே குவேரா) [7][8]
  • கேரள சங்கீத நாடக அகாடமி விருது 2006 [9]
  • கேரள அரசு தொழில்முறை நாடக விருதுகள் 2021 - சிறந்த நாடகப் பாடலுக்கான விருது [10]
  • அபுதாபி சக்தி விருது (சே குவேரா) [7]
  • கே.எஸ்.கே. தளிக்குளம் விருது (சே குவேரா)[2]
  • நாடகம், கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியத் துறைக்கான ஒட்டுமொத்த பங்களிப்புக்கான கலா குவைத் சாம்பசிவன் விருது [11]
  • 11வது சிவராமபிள்ளை விருது
  • முல்லனேழி விருது (2015)
  • செருகாடு விருது 2016 (ஈ பூமி அருதேத்) [12]
  • சிறந்த நாடகப் பாடல் இசையமைப்பிற்கான கேரள சங்கீத நாடக அகாடமி விருது (2017)
  • பி.கே. நாராயணன் மாஸ்டர் விருது (2018) [13]
  • நாடகத் துறைக்கான ஒட்டுமொத்த பங்களிப்புக்கான முதல் இ.கே. அயமு அறக்கட்டளை விருது [14]
  • பிஜே ஆண்டனி அறக்கட்டளையின் 2024 பிஜே ஆண்டனி விருது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. admin (2017-10-14). "മുരളി. കെ. കരിവെള്ളൂര്‍". Keralaliterature.com (in மலையாளம்). Archived from the original on 7 November 2023. Retrieved 2023-02-20.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 Report, Buero. "കേരള സംഗീത നാടക അക്കാദമി ഫെലോഷിപ്പ് കരിവെള്ളൂർ മുരളിക്ക്". Raareede News Plus (in மலையாளம்). Archived from the original on 20 February 2023. Retrieved 2023-02-20.
  3. 3.0 3.1 Aparna (2024-02-14). "കരിവെള്ളൂർ മുരളിക്ക്‌ ഈ വർഷത്തെ പി ജെ ആന്റണി പുരസ്കാരം". Kairali News | Kairali News Live (in மலையாளம்). Retrieved 2025-02-16.
  4. Daily, Keralakaumudi. "കരിവെള്ളൂർ മുരളി ചുമതലയേറ്റു". Keralakaumudi Daily (in மலையாளம்). Archived from the original on 20 February 2023. Retrieved 2023-02-19.
  5. "'Castro an inspiration for Kerala's communists'". Archived from the original on 20 February 2023. Retrieved 20 February 2023.
  6. Correspondent, Special. "Sangeetha Nataka Akademi awards announced" (in en-IN) இம் மூலத்தில் இருந்து 11 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220311125216/https://www.thehindu.com/news/national/kerala/sangeetha-nataka-akademi-awards-announced/article65214004.ece. 
  7. 7.0 7.1 "Mattanoor Sankarankutty to head Sangeetha Nataka Akademi" இம் மூலத்தில் இருந்து 20 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230220070400/https://www.newindianexpress.com/states/kerala/2022/may/22/mattanoorsankarankuttyto-head-sangeetha-nataka-akademi-2456451.html. "Mattanoor Sankarankutty to head Sangeetha Nataka Akademi". The New Indian Express. 22 May 2022. Archived from the original on 20 February 2023. Retrieved 6 May 2023.
  8. admin. "ചെഗുവേര (നാടകം)". Keralaliterature.com (in மலையாளம்). Archived from the original on 7 November 2023. Retrieved 2023-02-20.
  9. "Kerala Sangeetha Nataka Akademi Award: Drama". Department of Cultural Affairs, Government of Kerala. Archived from the original on 28 June 2022. Retrieved 26 February 2023.
  10. "മികച്ച പ്രഫഷനൽ നാടക പുരസ്കാരം സൗപർണികയുടെ 'ഇതിഹാസ'ത്തിന്". ManoramaOnline (in மலையாளம்). Archived from the original on 20 February 2023. Retrieved 2023-02-20.
  11. "Kala Kuwait Sambasivan Award for Karivellur Murali" இம் மூலத்தில் இருந்து 20 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230220070401/https://www.doolnews.com/kala-award-karivellur-murali-456.html. 
  12. "List of Important Malayalam Literature Award Winners | PSC Arivukal". www.pscarivukal.com. Archived from the original on 20 February 2023. Retrieved 2023-02-20.
  13. "പി കെ നാരായണൻ മാസ‌്റ്റർ പുരസ‌്കാരം കരിവെള്ളൂർ മുരളിക്ക‌് സമ്മാനിച്ചു". Deshabhimani (in மலையாளம்). Archived from the original on 20 February 2023. Retrieved 2023-02-20.
  14. "ഇ കെ അയമു ട്രസ്‌റ്റ്‌ അവാർഡ് കരിവള്ളൂർ മുരളിക്ക്". Deshabhimani (in மலையாளம்). Archived from the original on 20 February 2023. Retrieved 2023-02-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிவெள்ளூர்_முரளி&oldid=4380962" இலிருந்து மீள்விக்கப்பட்டது