உள்ளடக்கத்துக்குச் செல்

கரிமா அரோரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரிமா அரோரா (Garima Arora ) ஒர் இந்திய சமையல்கலை நிபுணராவார். 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 அன்று இவர் பிறந்தார். 2018 ஆம் ஆண்டு மிச்செலின் நட்சத்திர விருது இவருக்கு வழங்கப்பட்டது. [1][2] இவ்விருதை வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமை இவருக்கு சேர்ந்தது.

ஆரம்பகால வாழ்க்கையும் தொழிலும்[தொகு]

பஞ்சாபி பாரம்பரியத்தைச் சேர்ந்த அரோரா மும்பையில் வளர்ந்தார். ஒரு சமையல்காரர் ஆவதற்கு முன்பு இவர் பத்திரிகைத் துறை பணியில் இருந்தார்.

2008 ஆம் ஆண்டு அரோரா பிரான்சு நாட்டுக்குச் சென்றார். அங்கு பாரிசு நகரிலுள்ள லி கார்டன் பிளியுவில் படித்து 2010 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தனது சொந்த உணவு விடுதியான கா திறப்பதற்கு முன்னர் இவர் கோபனேகனில் மிச்செலின் இரண்டு நட்சத்திர விருதை வென்ற நோமா உணவு விடுதியில் கோர்டன் ராம்சே மற்றும் ரெனே ரெட்யெபி ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். [3] பாங்காக்கிலுள்ள இவருடைய கா உணவகம் மூன்று அடுக்கு மாடிகள் கொண்ட உணவகமாகும். பாரம்பரிய இந்திய நுட்பங்களைப் பயன்படுத்தி நவீன சுவை உணவுகள் தயாரித்து இங்கு வழங்கப்படுகின்றன. [1]

நவம்பர் 2018 ஆம் ஆண்டு நவம்பரில் இவருக்கும் இவரது உணவகத்திற்கும் மிச்செலின் நட்சத்திர விருது வழங்கப்பட்டது, அரோரா இந்த விருதைப் பெற்ற முதலாவது பெண் இந்திய சமையல்காரர் ஆவார்.[4] 2019 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் ஆசியாவின் 50 சிறந்த உணவகங்களின் பட்டியலில் 16 வது இடத்தில் இவரது கா உணவகம் அறிமுகமாகி, மிக உயர்ந்த புதிய நுழைவு விருதைப் பெற்றது.

முன்னதாக பிப்ரவரி 2019 இல், உலகின் 50 சிறந்த உணவகங்கள் பட்டியலில் அரோரா ஆசியாவின் சிறந்த பெண் சமையல்காரராக அறிவிக்கப்பட்டார். [5][6]

2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகின் 50 சிறந்த உணவகங்கள் பட்டியலில் அரோராவின் கா உணவகம் [7] 95 ஆவது இடத்தில் அறிமுகமானது.

2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் அரோரா உணவு முன்னோக்கு இந்தியா என்ற அமைப்பை அறிமுகப்படுத்தினார், [8] இவ்வமைப்பு இந்திய உணவின் எதிர்காலத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது. தொடக்க நிகழ்வு 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 அன்று மும்பையில் நடைபெற்றது, இந்திய உணவு சமூகத்தில் மும்பையின் புகழ்பெற்ற சமையலர்களை ஒன்றிணைத்து பேச்சுக்கள், உணவுச் சுவைகள் மற்றும் குழு விவாதங்கள் முதலான அனைத்து நிகழ்வுகளிலும் அவர்களை ஒரே நாளில் ஈடுபட வைத்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Chef Arora: India's first woman with a Michelin star" (in en). CNN Travel. 2018-11-16. https://www.cnn.com/travel/article/garima-arora-indian-chef-michelin-star/index.html. 
  2. "India’s first woman to win a Michelin star" (in en-GB). BBC News. 2018-11-15. https://www.bbc.com/news/world-asia-india-46219876. 
  3. "Chef Arora: India's first woman with a Michelin star" (in en). CNN Travel. 2018-11-16. https://edition.cnn.com/travel/article/garima-arora-indian-chef-michelin-star/index.html. 
  4. "Garima Arora becomes first Indian woman to bag a Michelin Star for Bangkok restaurant". The News Minute. 2018-11-15. https://www.thenewsminute.com/article/garima-arora-becomes-first-indian-woman-bag-michelin-star-bangkok-restaurant-91635. 
  5. Tiu, Cheryl. "Garima Arora, The First Indian Woman To Receive A Michelin Star, Is Now Asia's Best Female Chef 2019". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-12.
  6. "Mumbai girl voted Asia's best female chef". Condé Nast Traveller India (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-02-28. பார்க்கப்பட்ட நாள் 2019-08-12.
  7. "1-50 The Worlds 50 Best Restaurants". The World's 50 Best Restaurants (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-17.
  8. "Food Forward India: Can Experts Agree on Indian Food?". MICHELIN Guide (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிமா_அரோரா&oldid=3060476" இலிருந்து மீள்விக்கப்பட்டது