உள்ளடக்கத்துக்குச் செல்

கரிபியன் பறவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரிபியன் பறவைகள் (BirdsCaribbean) என்பது கரிபியன் பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய பறவைகள் பாதுகாப்பு அமைப்பாகும். முன்னதாக இது கரிபியன் பறவைகள் பாதுகாப்பு மற்றும் ஆய்வு சங்கம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இப்பறவையியல் அமைப்பு இலாப நோக்கற்ற ஓர் அமைப்பாகும்.[1] 1988 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, கல்வி, ஆராய்ச்சி, பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் திறன் மேம்பாடு மூலம் கரீபியன் தீவுகளில் உள்ள பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்க பாடுபடுகிறது. இது பகாமாசு மற்றும் பெர்முடா மற்றும் கரீபியன் படுகையில் உள்ள தீவுகள் உட்பட கரிபியன் பிராந்தியத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய பறவை பாதுகாப்பு அமைப்பாகும்.

கரிபியன் பறவைகள் நிறுவனம், ஆங்கிலம், பிரஞ்சு மற்றும் எசுப்பானியம் ஆகிய மொழிகளில் பறவையியல் கட்டுரைகளை வெளியிடும் கரீபியன் பறவையியல் செய்தி இதழ் (முன்னர் எல் பிட்டிர்) என்ற அறிவியல் வெளியீட்டை வெளியிடுகிறது.

கரிபியன் வட்டார பறவை விழா

[தொகு]

ஆண்டுதோறும் நடைபெறும் கரிபியன் வட்டார பறவை விழா, பிராந்தியத்தின் தனித்துவமான பறவை வாழ்க்கை குறித்த விழிப்புணர்வையும் பாராட்டையும் அதிகரிக்க முயற்சிக்கிறது. . கரிபியன் பறவைகள் அமைப்பு 20 ஆண்டுகளாக இந்த விழாவை நடத்தி வருகிறது. ஒரு மாத கால கொண்டாட்டத்தில் பூமி தினம் (ஏப்ரல் 22) தொடங்கி, பன்னாட்டு பல்லுயிர் தினம் (மே 22) வரை இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கரிபியன் அளவிலான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இந்த நிகழ்வு கரிபியனில் மட்டுமே காணப்படும் 171 பறவை இனங்களைக் கொண்டாடுகிறது. அவை உள்ளூர் பறவைகள் என்று அழைக்கப்படுகின்றன. மிகவும் வெற்றிகரமான இந்த திட்டம் ஒவ்வொரு ஆண்டும் 100,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஈர்க்கிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Staff writer (2024). "BirdsCaribbean". UIA Global Civil Society Database. uia.org. Brussels, Belgium: Union of International Associations. Yearbook of International Organizations Online. Retrieved 24 December 2024.
  2. "Caribbean Endemic Bird Festival". www.birdscaribbean.org. 28 September 2020. Archived from the original on 2021-02-04. Retrieved 2021-05-27.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிபியன்_பறவைகள்&oldid=4347545" இலிருந்து மீள்விக்கப்பட்டது