கரிபா ஏரி
| கரிபா ஏரி | |
|---|---|
| ஆள்கூறுகள் | 16°55′S 28°00′E / 16.917°S 28.000°E |
| ஏரி வகை | நீர் மின் ஆற்றல், நீர் தேக்கம் |
| வடிநிலப் பரப்பு | 663,000 km2 (256,000 sq mi) |
| வடிநில நாடுகள் | சாம்பியா, சிம்பாப்வே |
| அதிகபட்ச நீளம் | 223 km (139 mi) |
| அதிகபட்ச அகலம் | 40 km (25 mi) |
| மேற்பரப்பளவு | 5,580 km2 (2,150 sq mi) |
| சராசரி ஆழம் | 29 m (95 அடி) |
| அதிகபட்ச ஆழம் | 97 m (318 அடி) |
| நீர்க் கனவளவு | 180,000,000,000 கன சதுர மீட்டர்கள் (43 cu mi) |
| கடல்மட்டத்திலிருந்து உயரம் | 479 மீட்டர்கள் (1,572 அடி) |
| Islands | சேட் தீவு சேக்குலா தீவு சிகன்கா தீவு |

கரிபா ஏரி (Lake Kariba), ஆப்பிரிக்காவின் சாம்பியா, சிம்பாப்வே நாடுகளின் எல்லையில் அமைந்த மனிதனால் நிறுவப்பட்ட உலகின் பெரிய செயற்கை ஏரியாகும். இந்த ஏரியிலிருந்து உற்பத்தியாகும் சாம்பசி ஆறு சாம்பியா மற்றும் சிம்பாப்வே நாடுகளின் வழியாக 810 மைல் தொலைவிற்கு பாய்ந்து இந்தியப் பெருங்கடலில் கலக்கிறது. கரிபா ஏரி 2,000 சதுர மைல்கள் (5,200 சதுர கிமீ) பரப்பளவைக் கொண்டுள்ளது. விக்டோரியா அருவிக்கு கீழே 250 மைல்கள் (400 கிமீ) தொலைவில் உள்ள கடின மலைப்பாறைக்களுக்கு இடையே குறுகும் கரிபா பள்ளத்தாக்கில் பாயும் சாம்பசி ஆற்றை தடுத்தி நிறுத்தியதன் மூலம் செயற்கையாக கரிபா ஏரி உருவாக்கப்பட்டது. கரிபா ஏரியை ஒட்டிக்கட்டப்பட்ட கரிபா அணை இரட்டை வளைவுச் சுவரைக் கொண்டுள்ளது .
கரிபா அணை 128 மீட்டர் உயரமும், 617 மீட்டர் நீளமும், அடிவாரத்தில் 24 மீட்டர் அகலமும் கொண்டது. கரிபா அணை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் சாம்பியா மற்றும் சிம்பாப்வே நாடுகளுக்கு மின்சாரத்தை வழங்குகிறது மற்றும் ஒரு செழிப்பான வணிக மீன்பிடித் தொழிலை ஆதரிக்கிறது. இந்த ஏரி மொத்தம் 102 தீவுகளை உள்ளடக்கியது, இதில் சேட் தீவு மற்றும் ஸ்பர்விங் தீவு போன்ற பிரபலமான தீவுகளும் அடங்கும். சேட் தீவு உலகின் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட, வளர்ச்சியடையாத ஈரநிலங்களும், ஆப்பிரிக்க யானைகளும் கொண்டுள்ளது.
ஏரியின் விளக்கம்
[தொகு]கரிபா ஏரி 223 கிலோமீட்டர்கள் (139 மைல்கள்) நீளமும், 40 கிலோமீட்டர்கள் (25 மைல்கள்) அகலமும், 5,580 சதுர கிலோமீட்டர்கள் (2,150 சதுர மைல்கள்) பரப்பளவும் மற்றும் 185 கன சதுர கிலோமீட்டர்கள் (44 cubic miles) கொள்ளவும் கொண்டது. இதன் சராசரி குறைந்தபட்ச ஆழம் 29 மீட்டர்கள் (95 அடிகள்) மற்றும் அதிகபட்ச ஆழம் 97 மீட்டர்கள் (318 அடிகள்) ஆகும். மனிதால் உருவாக்கப்பட்ட உலகின் பெரிய செயற்கை ஏரியான கரிபா ஏரியின் நீர் கொள்ளவு, சீனாவின் மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணையை விட நான்கு மடங்கு பெரிதானது.[1]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- "Lake Kariba". Zambiatourism.com. Retrieved August 11, 2005.
- "Dam Statistics: Africa and the Middle East Regions". World Commission on Dams. Retrieved August 11, 2005.
- "Lake Profile: Kariba"[usurped!]. LakeNet. Retrieved August 11, 2005.
- World Lakes Database entry for Lake Kariba