கரிபசவையா
கரிபசவையா | |
---|---|
![]() | |
பிறப்பு | 1959 கொடிகேஹள்ளி |
இறப்பு | 3 பிப்ரவரி 2012 பெங்களூர், இந்தியா |
தேசியம் | ![]() ]] |
வாழ்க்கைத் துணை | சாந்தா |
முக்கிய தயாரிப்புகளும் பாத்திரங்களும் | கோத்ரேஷி கனசு, ஜனுமாதா ஜோடி, கலாட்டே அலியாந்த்ரு, முங்கரினா மிஞ்சு, யாரிகே சல்யூட் சம்பாலா |
கரிபசவையா (Karibasavaiah,1959-3 பிப்ரவரி 2012) கன்னடத் திரைப்படத்துறையில் தோன்றிய ஓர் இந்திய நடிகரும் மற்றும் நாடக ஆளுமையும் ஆவார். இவர் 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2012 பிப்ரவரி 3 அன்று பெங்களூரில் நடந்த சாலை விபத்து ஒன்றில் இறந்தார்.[1] கரிபசவையா உண்டு ஹோதா கொண்டு ஹோதா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். கோத்ரேஷி கனசு, ஜனுமாதா ஜோடி, கலாட்டே அலியாந்த்ரு, முங்கரினா மிஞ்சு, யாரிகே சல்யூட் சம்பாலா, போலீஸ் ஸ்டோரி 2 மற்றும் உல்லாசா உத்சாகா ஆகியவை இவரது குறிப்பிடத்தகுந்த படங்களில் சில.
பின்னணி
[தொகு]1959இல் பிறந்த கரிபசவையா ஒரு ஏழை குருபா சமூகத்தைச் சேர்ந்தவர். சிறுவனாக இருந்தபோது, இவர் குருபா கௌடா கலை வடிவங்களான கம்சலே, டோலு குனித்தா மற்றும் ஹரிகதா கலாட்சேபம் போன்றவற்றைக் கற்றுக்கொண்டார். திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு சேஷாத்ரிபுரம் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றினார். தொட்டமனே என்ற தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார். இயக்குனர் நாகத்திஹள்ளி சந்திரசேகர் இவருக்கு கன்னட திரைப்படத் துறையில் ஒரு வாய்ப்பை வழங்கினார். உடல்நலம் சரியில்லாமல் இருந்த இவரது இறுதி நாட்களில் சந்திரசேகர் மருத்துவ கட்டணங்களை செலுத்துவதன் மூலம் இவருக்கு உதவினார். கரிபசவையாவின் திருமணமான மகள் இராதா 2009 தற்கொலை செய்து கொண்டார். அவர் பல திரைப்படங்களில் மற்றொரு பிரபலமான நடிகை உமாஸ்ரீயுடன் இணையாக நடித்தார்.[2] பெலாகின்டெகே இவர் நடித்து வெளியான கடைசித் திரைப்படம் ஆகும்.
இறப்பு
[தொகு]பிரேக்கிங் நியூஸ் படத்தின் படப்பிடிப்பை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த கரிபசவையா 2012 ஜனவரி 31 அன்று பெங்களூரில் நடந்த ஒரு சாலை விபத்தில் காயமடைந்தார். அதைத் தொடர்ந்து பெங்களூரிலுள்ளா ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் பிப்ரவரி 3 அன்று இறந்தார். அவரது சொந்த ஊரான கொடிகஹள்ளி கிராமத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bangalore: Kannada Actor Karibasavaiah Dead". Daijiworld.com. Archived from the original on 25 September 2012. Retrieved 2012-09-17.
- ↑ Prakash (2012-02-03). "Actor Karibasavaiah passes away | – Oneindia Entertainment". Entertainment.oneindia.in. Archived from the original on 11 October 2020. Retrieved 2012-09-17.
- ↑ "Kannada actor Karibasavaiah succumbs to injuries". IBN Live. 2012-02-04. Archived from the original on 6 December 2013. Retrieved 2012-11-18.