கரிச்சான் குஞ்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு (ஜூலை 10, 1919 - 1992) ஒரு தமிழ் எழுத்தாளர்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

நாராயணசாமி தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் சேதனீபுரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ராமாமிருத சாஸ்திரி- ஈஸ்வரியம்மாள். எட்டு வயது முதல் பதினைந்து வயது வரை பெங்களூரில் வேதமும் வடமொழியும் கற்றார். மதுரை ராமேஸ்வர தேவஸ்தான பாடசாலையில் ஐந்தாண்டுகள் (17 முதல் 22 வயது வரை) தமிழ் பயின்றார். நாராயணசாமியின்21வது வயதில் (1940இல்) அவர் எழுதிய சிறுகதையான “மகிழ்ச்சி”, “ஏகாநதி” என்ற புனைப்பெயரில் கலைமகள் இதழில் வெளியானது.

கு. ப. ராஜகோபாலனின் (கு.ப.ரா) சீடர்களுள் ஒருவராக இருந்த நாராயணசாமி அவர் மீது கொண்ட பற்றால் “கரிச்சான் குஞ்சு” என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். (கு.ப.ராவின் புனைப்பெயர் “கரிச்சான்”).

படைப்புகள்[தொகு]

சிறுகதைகள்[தொகு]

160 சிறுகதைகள், பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளாக வந்துள்ளன

புதினங்கள்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • தேவி ப்ரசாத் சட்டோபாத்யாயாவின் ”What is True and Relevant in Indian Philosophy”
  • ஆனந்த வர்தனரின் ”த்வன்யாலோகம்"

கட்டுரை நூல்கள்[தொகு]

  • பாரதியார் தேடியதும் கண்டதும்
  • கு.ப.ரா

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிச்சான்_குஞ்சு&oldid=2307834" இருந்து மீள்விக்கப்பட்டது