கரிசு படேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரிசு படேல்
Harish Patel
பிறப்புஹரிஷ் படேல்
5 சூலை 1953 (1953-07-05) (அகவை 70)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்இபு ஹடேலா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1983–இன்று வரை
உயரம்1.65 m

ஹரிஷ் படேல் (ஆங்கில மொழி: Harish Patel) (பிறப்பு: 5 சூலை 1953) என்பவர் இந்திய நாட்டு நடிகர் ஆவார். இவர் மேடை நாடகங்கள் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பாலிவுட் மற்றும் அமெரிக்க திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான எட்டெர்னல்சு என்ற படத்தில் 'கருண்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[1]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

படேல் 5 சூலை 1953 இல் இந்தியாவில் மகாராட்டிர மாநிலத்தில் மும்பையில் பிறந்தார். அவர் தனது ஏழு வயதில் நடிக்கத் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்து சமய இதிகாசமான இராமாயணத்தில் ஆண் மற்றும் பெண் வேடங்களில் நடித்த்ததன் மூலம் பலரின் பாராட்டை பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rubin, Rebecca. "Harish Patel on Starring in Marvel's Eternals: People will Say Ibu Hatela Did Something New". www.news18.com.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிசு_படேல்&oldid=3505963" இலிருந்து மீள்விக்கப்பட்டது