கராச்சி கால்நடை சந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கராச்சி கால்நடை சந்தை (Karachi Cattle Market) பாக்கித்தான் நாட்டின் கராச்சி நகரத்திலுள்ள சோராப் கோத் திற்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மாட்டு மண்டி அல்லது மாவேசி மண்டி என்றும் இச்சந்தை அழைக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அமைக்கப்படும் இக்கால்நடை சந்தை நடத்தப்படுகிறது. [1] [2] [3] இந்த சந்தை பெரும்பாலும் ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை சந்தையாக கருதப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கான விலங்குகள் சிறிய, சுதந்திரமான வர்த்தகர்களால் விற்கப்படுகின்றன. [4] இசுலாமியர்கள் மத்தியில் கொண்டாடப்படும் ஈத் அல்-ஆதா பண்டிகையின் காரணமாக வாங்குபவர்கள் விலங்குகளை பலியிடுவதற்காக வாங்குகிறார்கள்.

இடம் மற்றும் அளவு[தொகு]

கராச்சி கால்நடை சந்தை சோராப் கோத் இன்டர்சேஞ்சிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சந்தையின் அளவு 900 ஏக்கருக்கு மேல் ஆகும். இங்கு பசுக்கள், ஆடுகள் மற்றும் ஆட்டுக்குட்டிகள் உட்பட 700,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படுகின்றன.[5] விற்பனையாளர்கள் முக்கியமாக சிந்து மற்றும் பஞ்சாபின் கிராமப்புற பகுதிகளில் இருந்து சந்தைக்கு வருகிறார்கள். இங்கு கால்நடை வளர்ப்பு ஒரு பொதுவான தொழிலாக உள்ளது.

கராச்சியின் குடிமக்களின் பெரும் தேவையைப் பூர்த்தி செய்வதில் சந்தை முக்கிய பங்கு வகிக்கிறது. 150 பில்லியன் பாக்கித்தான் ரூபாய் மதிப்பீட்டில் வருடாந்திர வர்த்தகத்துடன், நாட்டின் பொருளாதாரத்தில் இச்சந்தை முக்கிய பங்கு வகிக்கிறது. [6]

போக்குவரத்து இடையூறுகள்[தொகு]

நகர் முழுவதும் வாங்குபவர்களுக்கு கால்நடைகளை வாங்க சந்தை வாய்ப்பளிக்கும் அதே வேளையில், சுற்றியுள்ள பகுதிகளில் பரவலான போக்குவரத்து நெரிசலை ஏற்படுகிறது. [7] குல்சார் இ இச்ரி உள்ளிட்ட நெடுஞ்சாலையில் வசிப்பவர்கள், போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைகள் அடைப்புக்கு எதிராக அடிக்கடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sheikh, Arslan (18 June 2020). "Cattle markets — to be or not to be?" (in en). The Express Tribune. https://tribune.com.pk/story/2244987/1-cattle-markets-not. 
  2. Jabri, Parvez (5 July 2019). "All set for Asia's largest cattle market of sacrificial animals" (in en). Business Recorder. https://www.brecorder.com/news/507821. 
  3. Jafar, Askari (1 October 2013). "70,000 animals arrive in Asia's largest cattle market" (in en). The Nation. https://nation.com.pk/01-Oct-2013/70-000-animals-arrive-in-asia-s-largest-cattle-market. 
  4. Mansoor, Aqsa (2017). "A trip to Asia's biggest and famous cow 'Mandi'" (in en). https://www.thenews.com.pk/latest/225686-A-trip-to-Asias-biggest-and-famous-cow-Mandi. 
  5. Sheikh, Arslan (18 June 2020). "Cattle markets — to be or not to be?" (in en). The Express Tribune. https://tribune.com.pk/story/2244987/1-cattle-markets-not. 
  6. Khan, Aamir Shafaat (1 September 2016). "Billions to be spent on sacrificial animals in Pakistan". DAWN.COM (in ஆங்கிலம்).
  7. "Sacrificial animals: Online buying picks up in Pakistan amid pandemic" (in en). The Express Tribune. 20 July 2020. https://tribune.com.pk/story/2255802/sacrificial-animals-online-buying-picks-up-in-pakistan-amid-pandemic. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கராச்சி_கால்நடை_சந்தை&oldid=3751461" இலிருந்து மீள்விக்கப்பட்டது