கராச்சி கதிர்ச்சிகிச்சை மற்றும் அணுக்கரு மருத்துவ நிறுவனம்
கராச்சி கதிர்ச்சிகிச்சை மற்றும் அணுக்கரு மருத்துவ நிறுவனம் (Karachi Institute of Radiotherapy and Nuclear Medicine) பாக்கித்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையாகும். பாக்கித்தான் அணுசக்தி ஆணையத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இப்புற்றுநோய் மருத்துவமனை இயங்குகிறது. பாக்கித்தானில் உள்ள பத்தொன்பது புற்றுநோய் மருத்துவ மையங்களில் கராச்சி கதிர்ச்சிகிச்சை மற்றும் அணுக்கரு மருத்துவ நிறுவனமும் ஒன்றாகும். இங்கு நோயாளிகளுக்கு நோயறிதல் மற்றும் சிகிச்சை வசதிகளை இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோல் வழங்கப்படுகின்றன.[1]
சேவைகள்
[தொகு]கராச்சி கதிர்ச்சிகிச்சை மற்றும் அணுக்கரு மருத்துவ நிறுவனம் ஆரம்பத்தில் அதிநவீன கதிரியக்க சிகிச்சை வசதிகளைக் கொண்டிருக்க திட்டமிடப்பட்டது. பின்னர், கராச்சி, சிந்து மற்றும் பலுசிசுத்தானின் கிராமப்புறங்களில் வாழும் ஏழை புற்றுநோயாளிகளுக்கு குறைந்த செலவில் சேவைகளை வழங்க புற்றுநோயியல் மற்றும் வேதிச் சிகிச்சை வசதிகள் நிறுவப்பட்டன. மருத்துவமனை தற்போது சிகிச்சை புற்றுநோயியல், அணு மருத்துவம், கதிரியக்கவியல் மற்றும் புற்றுநோய் மருந்தகம் ஆகிய பிரிவுகளில் சேவைகளை வழங்குகிறது.[2]
புற்றுநோய் கண்டறிதல் மற்றும் உடல் திசு ஆய்வு பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்வதைத் தவிர,[3] உலக புற்றுநோய் நாளைக் குறிக்கும் வகையில் கராச்சி கதிர்ச்சிகிச்சை மற்றும் அணுக்கரு மருத்துவ நிறுவனம் ஆண்டுதோறும் செயல்பாடுகளை முன்னெடுத்து ஏற்பாடு செய்கிறது.[4][5]
ஆராய்ச்சி
[தொகு]2002 முதல் 2006 ஆம் ஆண்டு வரை, விந்து சுரப்பி குறிப்பிட்ட நோயெதிர்ப்பு மருந்துக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதை மதிப்பீடு செய்ய விந்துச் சுரப்பி புற்றுநோயாளிகளை ஊடுகதிர்ப் படமெடுத்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கண்டுபிடிப்புகள் பாக்கித்தான் மருத்துவ சங்கத்தின் செய்தி இதழில் வெளியிடப்பட்டன.[6]
கட்டணம்
[தொகு]பாக்கித்தான் நாட்டிலுள்ள மற்ற அணுக்கரு மருத்துவமனைகளை விட கராச்சி கதிர்ச்சிகிச்சை மற்றும் அணுக்கரு மருத்துவ நிறுவனத்தில் சிகிச்சைக் கட்டணம் க்றைவாகும்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cancer Hospitals". PAEC. பார்க்கப்பட்ட நாள் December 25, 2016.
- ↑ "Karachi Institute of Radiotherapy & Nuclear Medicine (KIRAN)". Medical Review. July 2016. பார்க்கப்பட்ட நாள் December 25, 2016.
- ↑ Anjum (March 2, 2012). "Cancer Treatment myths rife". Pakistan Today. பார்க்கப்பட்ட நாள் November 15, 2016.
- ↑ "Walk in KIRAN Hospital Karachi". World Cancer Day Org. February 4, 2016. பார்க்கப்பட்ட நாள் December 25, 2016.
- ↑ Staff Reporter (February 4, 2016). "PAEC hospitals treat 800,000 cancer patients annually". The Daily Dawn. பார்க்கப்பட்ட நாள் December 25, 2016.
- ↑ "Significance of prostate specific antigen in prostate cancer patients and in non cancerous prostatic disease patients". J Pak Med Assoc 57: 248–51. May 7, 2007. பப்மெட்:17571482.
- ↑ Samia Saleem (January 13, 2011). "Atomic energy: Nuclear medical centre opens at JPMC". The Express Tribune. பார்க்கப்பட்ட நாள் December 25, 2016.