கராச்சி இடைநிலைக் கல்வி வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கராச்சி இடைநிலைக் கல்வி வாரியம்
Board of Intermediate Education, Karachi
உருவாக்கம்1974
தலைமையகம்கராச்சி
தலைமையகம்
ஆட்சி மொழி
உருது, சிந்தி மற்றும் ஆங்கிலம்
வலைத்தளம்biek.edu.pk

கராச்சி இடைநிலைக் கல்வி வாரியம் (Board of Intermediate Education, Karachi) பாக்கித்தான் நாட்டின் கராச்சி நகரில் இடைநிலைக் கல்வித் தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள அரசு வாரியமாகும். 1973 ஆம் ஆண்டு ஆவணப் புத்தகத்தின் சிந்து வாரியங்கள் இடைநிலை மற்றும் இடைநிலைக் கல்வி திருத்தச் சட்டம் எண். 20 பக்கம் 31 இன் அடிப்படையில் 1974 ஆம் ஆண்டு ஒரு தனி நிறுவனமாக நிறுவப்பட்டது. இடைநிலைக் கல்வியை ஒழுங்கமைக்கவும், மேம்படுத்தவும் மற்றும் கட்டுப்படுத்தவும் வாரியத்திற்கு அதிகாரம் உள்ளது. கராச்சி இடைநிலைக் கல்வி வாரியம் ஓர் ஆய்வு அமைப்பாக மட்டுமல்லாமல் மாணவர்களின் உடல், தார்மீக மற்றும் ஆன்மீக வளர்ச்சியை உறுதிசெய்யும் கல்வி மற்றும் பிற செயல்பாடுகளின் தரத்தை பராமரிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பொறுப்பேற்கிறது. சிந்து மாகாண ஆளுநர் அல்லது அவர் நியமனம் செய்பவர் வாரியத்தின் தலைவராக செயல்படுகிறார். வாரியத்தின் தற்போதைய தலைவர் பேராசிரியர் சயீதுதீன் ஆவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sindh appoints Dr Saeeduddin as new intermediate board chairman Karachi". www.geo.tv (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-19.

புற இணைப்புகள்[தொகு]