கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கரவெட்டி பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவு அல்லது வடமராட்சி தெற்கு-மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு (Vadamaradchi South-West Divisional Secretariat) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சிப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 35 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அல்வாய், அத்தாய், இமையாணன், கட்டைவேலி, கப்பூது, கரணவாய், கரவெட்டி, மாத்தோணி, நெல்லியடி, சமரபாகு, இலக்கிணாவத்தை, துன்னாலை, உடுப்பிட்டி, வல்வெட்டி ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவு இதன் வடக்கு எல்லையாக உள்ளது. கிழக்கில் பருத்தித்துறை, மருதங்கேணி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், தெற்கில் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவும், கிழக்கில் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுடன் தொண்டைமானாறு நீரேரியும் எல்லைகளாக உள்ளன.

இதன் மொத்தப் பரப்பளவு 88 சதுர கிலோமீட்டர் ஆகும்[1].

குறிப்புக்கள்[தொகு]

  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]