கரவு கப்பல்
கரவு கப்பல் (ஆங்கிலம்: Stealth Ship)என்பது கரவு தொழில்நுட்ப கட்டுமானத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் கப்பலாகும். இவ்வகை கப்பல்களை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கதிரலைக் கும்பாவாலோ(Radar), ஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவு மூலமோ(Sonar), காட்சி, ஒலி, மற்றும் அகச்சிவப்பு முறைகள் மூலமோ கண்டறிவது கடினம்.
கரவு கப்பல்கள் மிககுறைந்த கதிரலைக் கும்பா குறுக்கு வெட்டுடனும், கதிரலைக் கும்பா உட்கிரகிப்பு உலோகத்தால் வடிவமைக்கப்படுவதால் இவற்றை கதிரலைக் கும்பா மூலம் கண்டரிவது மிக கடினம்.