கரந்தை அரவம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள் |
விதி
பகைவரால் பசுக்கூட்டம் கைபற்றப்பட்டதை அறிந்த கரந்தைவீரர்கள் ஒன்று திரளுவதைக் கூறுவது இத்துறையாகும்.
சான்று
காலார் கழலார் கடுஞ்சிலையார் கைக்கொண்ட வேலார் வெருவந்த தோற்றத்தார் - வேலன் கிளர்ந்தாலும் போல்வார் கிணைப்பூசல்கேட்டே யுளர்ந்தால் நிரைப்பெயர்வு முண்டு.
விளக்கம்
காலில் கழலையும், கொடிய வில்லையும், வேலையும், அஞ்சத்தக்க காட்சியும் உடைய இவ்வீரர்கள், எமன் கோபிப்பதுபோல் இருப்பர். தடாரி ஓசையைக் கேட்டு, ஆநிரை மீட்கவும் கூடும்.
சான்றாதாரம்
வெ.சாமிநாதைய்யர், புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும், வைஜயந்தி அச்சுக்கூடம், இரண்டாம் பதிப்பு, 1915
வெளி இணைப்பு
https://ia802505.us.archive.org/23/items/TholkAppiyamTheLivurai/puRapporuL%20veNbAmAlai.pdf
http://www.tamilvu.org/courses/degree/d021/d0213/html/d0213332.htm