கரண் சிங் குரோவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கரண் சிங் குரோவர்
Karan Singh Grover.jpg
கரண் சிங் குரோவர்
பிறப்பு கரண் சிங்
பெப்ரவரி 23, 1982 (1982-02-23) (அகவை 40)
India
வேறு பெயர் கரண் சிங்
Dr. Armaan
கரண் சிங் குரோவர்
தொழில் Model, Actor, Television presenter
நடிப்புக் காலம் 2004–முதல்
துணைவர் பிபாசா பாசு (2016–முதல்)

கரண் சிங் குரோவர் (Karan Singh Grover, பிறப்பு: 23 பிப்ரவரி 1982) ஒரு பிரபல இந்தியத் தொலைக்காட்சி நடிகர் மற்றும் மாடலாக இருக்கிறார். இவர் தமது தொலைக்காட்சி தொழில்வாழ்க்கையை எம்டிவி இந்தியாவில் ஏக்தா கபூரின் கித்னி மஸ்தி ஹே ஜிந்தகி என்பதில் இருந்து தொடங்கினார். ஸ்டார் ஒன் சேனலின் தில் மில் கயா சீசன் 1 -ல் டாக்டர். அர்மான் மலிக் கதாபாத்திரத்தில் அவர் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார்[1][2].

சொந்த வாழ்க்கை[தொகு]

கரண் இந்தியாவில் டில்லியில் பிறந்தார், ஆனால் பின்னர் அவர் குடும்பம் சவூதி அரேபியாவிற்குச் சென்றது, அங்கு அவர் பன்னிரெண்டு ஆண்டுகள் வசித்தார். அவர் தம் சிறுவயது பள்ளிபருவத்தை சவூதி அரேபியாவின் டம்மமில் முடித்தார். டம்மமில் சர்வதேச இந்திய பள்ளியில் படித்தார். சவூதி அரேபியாவில் அவருடைய கல்லூரி நாட்களில் அவர் தாமஸ் டெசிபல்ஸ் என்ற ஓர் இசைக்குழுவைக் கொண்டிருந்தார். அவர் 2000-ல் மும்பைக்குத் திரும்பி வந்தார், IHM மும்பை, தாதர் கேட்டரிங் கல்லூரியில் இருந்து ஹோட்டல் மேனேஜ்மெண்ட்டில் ஒரு பட்டம் பெற்றார். [3] பட்டம் பெற்றதும் கரண் ஓமனில் உள்ள மஸ்கட்டிற்குச் சென்றார், அங்கு குடும்பத்தோடு தங்கி இருந்த அவர் ஷெரட்டன் ஹோட்டலில் சுமார் ஓர் ஆண்டிற்கு சந்தைப்படுத்தல் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.[3] பின்னர் நடிப்பு தொழிலைத் தொடர்வதற்காக இந்தியா திரும்பினார்.2004-ல் கிளேட்ரேக்ஸ் மெகா மாடல் மேன்ஹன்ட் போட்டியில் பங்கு பெற்றார். தேசியளவில் ஒரு திறமைசாலிக்கான தேடுதல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், எம்டிவி இந்தியாவில் பாலாஜி டெலிபிலீம்ஸூக்காக கித்னி மஸ்தி ஹை ஜிந்தகி என்ற நிகழ்ச்சியோடு அவர் தமது நடிப்பு தொழில்வாழ்க்கையைத் தொடங்கினார். கரண் ஹரியானாவின் அம்பாலாவில் வந்த ஒரு பஞ்சாபி சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். தற்போது கரணின் பெற்றோர்களும், அவருடைய சகோதரரும், டெல்லியில் வசித்து வருகிறார்கள். முன்னதாக, 2004-ல் இருந்து 2006 மத்தி காலம் வரை, அவர் தன்னுடன் கித்னி மஸ்த் ஹை ஜிந்தகி நாடகத்தில் உடன் இணைந்து நடித்த தொலைக்காட்சி நடிகை பார்கா பிஸ்ட்டைக் காதலித்து வந்தார். அவர்களுக்கு இடையில் நிச்சயதார்த்தம் கூட நடத்தப்பட்டது, இருந்தும் 2006 மத்தியில் அவர்கள் பிரிந்துவிட்டார்கள். 2007 ஏப்ரலில், அவர் பிரபல தொலைக்காட்சி நடிகை சாரதா நிகமைக் காதலிக்க தொடங்கினார். 2008 டிசம்பர் 2-ல், கோவாவின் குருத்வாரில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.[4] ஆனால் இந்தத் திருமணம் மிகவும் பிரத்யேகமாக தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்டது. மிலே ஜப் ஹம் தும் என்பதில் உதய் கதாபாத்திரத்தில் நடித்த ஜஸ்கரண் சிங், நிஜத்தில் கரணின் உறவினராவார். உடற்பயிற்சி ஆர்வலரான கரண், வழக்கமாக மணிக்கணக்கில் உடற்பயிற்சி கூடத்தில் செலவிடுவார். அவருக்கு பச்சைக்குத்துவது மிகவும் விருப்பம் என்பதால், நான்கு பச்சைக்குத்தியுள்ளார்.

தொலைக்காட்சியில் தொழில்வாழ்க்கை[தொகு]

பல மாடலிங் பணிகளையும், ரேம்ப் ஷோக்களையும், விளம்பரப்படங்களையும் செய்தார், மேலும் ஒரு ரேடியோ நிகழ்ச்சியையும் நடத்தினார். இதன் பிறகு தான், 2004-ல் கிளேட்ரேக்ஸ் மெகா மாடல் மேன்ஹன்ட் போட்டியில் கலந்து கொண்டார், அதில் 'மிகப் பிரபலமான மாடல்' என்ற விருதுடன் வெற்றியும் பெற்றார். [3] பிறகு பஜாஜ் டெலிபிலீம்ஸின் தேசியளவிலான திறமைசாலிகளுக்கான தேடுதல் போட்டியின் மூலம், மேலும் ஐந்து நபர்களுடன் சேர்ந்து, எம்டிவி நிகழ்ச்சியான கித்னி மஸ்தி ஹை ஜிந்தகி என்பதில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்தார். பின்னர், அதைத் தொடர்ந்து பிரின்சஸ் டோலி அவுர் உஸ்கா மேஜிக் பேக் என்பதிலும், இறுதியாக கசௌத்தி ஜிந்தகி கே என்பதில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து முடித்தார். அதன்பிறகு, அவரை புகழின் உச்சியில் நிறுத்திய தில் மில் கயா வில் டாக்டர். அர்மான் மலிக் கதாபாத்திரம் ஏற்று நடிப்பதற்கு முன்னர், சஹாரா ஒன் சேனலுக்காக சோல்ஹாஹ் சின்ஹாரிலும் , சி.ஐ.டி. மற்றும் பரிவார் போன்றவற்றில் சில காட்சிகளிலும் மட்டும் தோன்றினார். ஸ்டார் ஒன் சேனலின் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியான ஜரா நாச்கே திகா நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கினார். ஜலக் திக்லா ஜா சீசன் 3 என்ற நடன நிகழ்ச்சியில் அவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். தற்போது இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஐடியா ராக்ஸ் இந்தியா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

தொலைகாட்சி நிகழ்ச்சிகளும், தோன்றிய கதாபாத்திரங்களும்[தொகு]

ஆண்டு நிகழ்ச்சி கதாபாத்திரம் சேனல் குறிப்புகள்
2004 - 2005 கித்னி மஸ்தி ஹே ஜிந்தகி அர்னவ் தியோல் எம்டிவி இந்தியா கரணின் அறிமுக நாடகம். அந்நாடகத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்தார்.
2005 பிரின்சஸ் டோலி அவுர் உஸ்கா மேஜிக் பேக் அமன் ஸ்டார் பிளஸ் நகைச்சுவை நாடகம், இதில் இவர் சிறிய கதாபாத்திரம் ஏற்று நடித்தார்.
2005 - 2006 கசௌத்தி ஜிந்தகி கே சரத் குப்தா ஸ்டார் பிளஸ் ஜெனிபர் வின்ஜெட்டுக்கு எதிராக ஆரம்பத்தில் நேர்மறையான கதாபாத்திரம், அவர்களின் கதாபாத்திரங்கள் திருமணம் ஆன பிறகு, அவர் வில்லனாக மாறுவது போன்ற கதாபாத்திரம்.
2006 - 2007 சோல்ஹாஹ் சின்ஹார் அபிமன்யு சஹாரா ஒன் ஆரம்பத்தில் மீரா கதாபாத்திரத்திற்கு எதிராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு மீராவிற்கு திருமணம் ஆகிவிடுவது போல கதை மாறுகிறது. அவருடைய கதாபாத்திரம் சிறிது காலத்திற்கு 2007-ன் மத்தியில் மீண்டும் உள்நுழைகிறது. பிறகு 2007 ஆகஸ்டில் அந்த கதாபாத்திரம் நீக்கப்படுகிறது.
2007 சி.ஐ.டி. ராகுல் மற்றும் சமீர் (சிட்) சோனி என்டர்டெயின்மெண்ட் டெலிவிஷன் இரண்டு எபிசோடுகளில் மட்டும் வந்தார். ஒரு எபிசோடில் பாதிக்கப்பட்டவராகவும், மற்றொன்றில் கொலை செய்பவராகவும் கதாபாத்திரம் ஏற்றிருந்தார்.
2007 பரிவார் ஆதிராஜ் கில் ஜீ டிவி ஒரு வாரத்திற்கு மட்டும் வந்த ஒரு சின்ன கதாபாத்திரம்.
2007 - 2009 தில் மில் கயே சீசன் 1 டாக்டர். அர்மான் மலிக் ஸ்டார் ஒன் சீசன் 1-ல் முக்கிய ஆண் கதாபாத்திரம்
2008 நாச் பாலியே 3 அவராகவே நடித்திருந்தார் ஸ்டார் பிளஸ் சாரதா நிகமுடன் இணைந்து ஒரு சிறப்பு நடன காட்சியில் நடித்திருந்தார்.
2008 ஜரா நாச்கே திகா நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்டார் ஒன் ஸ்வேதா குலாத்தியுடன் இணைந்து நிகழ்ச்சியை வழங்கி இருந்தார்
2009 ஜலக் திக்லா ஜா அவராகவே நடித்திருந்தார் சோனி என்டர்டெயின்மெண்ட் டெலிவிஷன் நிகோல் அல்வாரிஸூடன் சீசன் 3-ல் மூன்றாம் இடம் பெற்றார்.
2009 ஐடியா ராக்ஸ் இந்தியா நிகழ்ச்சி தொகுப்பாளர் கலர்ஸ் டிவி மன்சி பரேக்குடன் இணைந்து நிகழ்ச்சியை வழங்கினார்.

விளம்பரங்கள்[தொகு]

ஆண்டு விளம்பரம் குறிப்புகள்
2009 ரூபா பிரண்ட்லைன் ராஜ்பால் யாதவ்வுடன் ரூபா உள்ளாடைகள் பற்றிய தொலைகாட்சி விளம்பரம்
2009 இந்திய ஜெம் & ஜூவல்லரி ஆண்களுக்கான நகைகள் விற்பனை நிறுவனத்திற்கான அச்சு விளம்பரங்கள்

திரைப்பட விவரங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2008 பெஹ்ரம் முக்கிய கதாபாத்திரத்தின் நண்பராக தோன்றினார். வெளியிடப்பட்டது; சின்ன பாத்திரம்
2008 ஐ யம் 24 குணச்சித்திர பாத்திரம் 2008-ல் முடிந்தது, இன்னும் வெளிவரவில்லை; இதில் சிறிய நகைச்சுவை பாத்திரம் ஏற்றிருந்தார்.
2009 பட் ஆதி லவ்ஸ் சஞ்சனா இரண்டாவது முக்கிய பாத்திரம் பின்னடைவின் காரணமாக முடக்கப்பட்டது; முதலில் கரண் சிங் குரோவர் மற்றும் ஹூசைன் குவாஜெர்வாலா ஆகியோரை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து திட்டமிடப்பட்டது.
2009 பாக் ஜானி ஆண் முக்கிய கதாபாத்திரம் தயாரிப்பில் இருக்கிறது; விக்ரம் பட் தயாரிக்கிறார், தீபக் திஜோரி இயக்குகிறார்

விருதுகள்[தொகு]

  • 'மிக பிரபலமான மாடல்' விருதைப் பெற்றார் - கிளேட்ரேக்ஸ் மேன்ஹன்ட் போட்டி 2004[3]
  • கலாக்கார் விருதுகள் அமைப்பால் வழங்கப்பட்ட 'மோஸ்ட் பிராமிசிங் ஆக்டர்' விருதைப் பெற்றார்.

விமர்சனங்களும்/வதந்திகளும்[தொகு]

  • 2009 அக்டோபரில், கரணும் அவர் மனைவி சாரதாவும் பிரிந்துவிட்டதாகவும், கரண் மும்பை வெர்சோனாவில் இருக்கும் அவர்களின் வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாகவும் செய்திகள் வெளியாயின.[5]
  • 2009 நவம்பரில், தில் மில் கயே தயாரிப்பு நிறுவனமான சினிவிஸ்தாஸ் சினிமா & தொலைக்காட்சி நடிகர்கள் சங்கத்துடன் இணைந்து (CINTAA) கரணுக்கு எதிராக வழக்கு தொடுத்திருப்பதாகவும், படப்பிடிப்புக்காக கரண் ஒப்புக்கொண்ட நேரத்தை விட குறைவாகவே ஒதுக்கி அளித்ததற்காகவும், தில் மில் கயே தயாரிப்பு அரங்கிற்கு அவர் தாமதமாக வந்தார் என்பதற்காகவும் அதனால் ஏற்பட்ட இழப்பிற்காக ரூ. 2 கோடி நஷ்ட ஈடாக தர வேண்டும் என்று கோரி வழக்கு தொடுத்திருப்பதாக மும்பை மிர்ரர்[6] செய்தி வெளியிட்டது.

குறிப்புதவிகள்[தொகு]

பிற வலைத்தளங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரண்_சிங்_குரோவர்&oldid=3355624" இருந்து மீள்விக்கப்பட்டது