கரணவாய் வடக்கு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரணவாய் வடக்கு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் யாழ் மாவட்டத்தின் வடமராட்சியில் கரணவாய் வடக்கு எனும் ஊரிலுள்ள எள்ளங்குளம் என அழைக்கப்படும் எல்லாளன் குளத்துக்கு அருகாமையில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

அத்தி, இத்தி, ஆல், அரசு மரங்களின் சோலையில் கோயில் கொண்டு அருளாட்சி புரிந்து வரும் முத்துமாரி அம்மன் ஆலயமானது யாழ் மாவட்டத்தின் வடமராட்சிப் பகுதியிலுள்ள காரணவாய் வடக்கு எனும் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இம் முத்துமாரி அம்மன் ஆலயமானது  நாச்சிமார் எனும் பெயராலும் அழைக்கப்பட்டது வருகிறாள்.

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஆலயத்தின் திருத்தல வரலாறு[தொகு]

எல்லாளன் குளத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள பத்தையடி எனும் தலத்தின்மீது இப் பகுதியைச்சேர்ந்த சின்னவி என்பவர் அளவில்லாத பக்தியுடையவராக இருந்து வந்தார். அவர் தாம் மேற்கொண்ட நேர்த்திக்கடன் காரணமாக பத்தையடி அம்மனுக்கு பொங்கல் செய்ய வேண்டி ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். அக்காலப்பகுதியில் கோயிலை பரிபாலனம் செய்தவர்களால் மாத்திரமே கோயிலுக்கான கடமைகளை மேற்கொள்ளும் வழக்கம் இருந்தது. இந் நிலையில் சின்னவி என்பவரும் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றவேண்டிபொங்கலுக்குரிய பொருட்களை  கோயிலுக்கு  கொண்டுவந்து கோயில் பரிபாலனாரிடம் ஒப்படைத்துள்ளார். பொங்கல் நடைபெற்றபோது மழைபெய்யத் தொடங்கியது மழைகாரணமாக பொங்கல் பொங்கியவர்கள் பொங்கலை அரையும் குறையுமாக இறக்கிவிட்டனர். நேர்த்திக்கான பொங்கலை சரியாகச் செய்யாமல் அரையும் குறையுமாக இறக்கியமையால் சின்னவி என்ற பக்தருக்கு கோபம் விஷம் போல் ஏறியது. இதனால் பொங்கலை வாங்காமல் அவ்விடத்திலேயே விட்டு விட்டு அவ்விடத்தில் நின்ற ஆலமரமொன்றின் கிளையினை வெட்டி எடுத்து வந்தார் இவ்வாறு எடுத்து வரப்பட்ட ஆலமரக்கிளையினை தற்போது எள்ளங்குளம் எனும் பதியில் நாட்டி வைத்தார். இவ்வாறு வெட்டி நாட்டப்பட்ட ஆலமரக்கிளை தழைத்து வந்ததாகவும் பின்னர் அவ்விடத்தில் ஓலைக்கொட்டிலொன்று அமைத்து பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

இந்நிலையில், ஏழு குடில்கள் அமைக்கப்பட்டு ஏழு குடில்களிலும் அம்மனுக்கு பூசைகள் நடைபெற்றுவந்தமையினாலேயே நாச்சிமார் (ஸப்த கன்னிகள்)என நாமம்கொண்டு அடியவர்களால் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் இவ்வாலயத்தின் தோற்றுவாய்க்கு காரணமாக இருந்த சின்னவி என்பவர் காலமாக அவரது சந்ததியில் வந்த வாரிச்சாமியார் என அழைக்கப்பட்ட  சின்னப்பெடியன் என்பவரால் இவ்வாலயம் பராமரிக்கப்பட்டு பூசைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

வாரிச்சாமியார் அவர்களது காலத்திலேயே இவ்வாலயமும் இவ்வாலயத்தின் மகிமைகளும்       நாள் ஒரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ச்சி கண்டது. இவர் இக் கோயிலைச் சூழவுள்ள அயற் கிராமங்களிற்கு சென்று அதிகாலையில் வீடு வீடாக தரிசனம் செய்து அப்பகுதி மக்களிற்கு திருநீற்றை வழங்கி அவர்களிடம் காணிக்கை பெற்று வந்தார்.

வாரிச்சாமியார் அவர்கள் நான்குமுழ வேஷ்டியை அணிந்த நிலையியல் கைத்தடி ஒன்றுடன் தோளில் துணியிலனான பொட்டலமொன்றையும் சுமந்துகொண்டு தாடியுடனும் காட்சியளிப்பார். அதிகம் பேசமாட்டார் இவர் நோய்ப்பிணி  என்றிருப்போரை ஆலயத்திற்கு வரும்படி சொல்லி விபூதி வழங்குவார். இவ்வாறு இவரது செயற்பாடுகள் காரணமாகவும் எல்லா இடங்களிலும் கிடைத்த காணிக்கைகளையும் கொண்டு ஏழு குடில்களாக இருந்த கோயிலை ஒன்றாக்கி கோயிலை அமைத்தார். இவ்வாறு கோயில் அமைந்தபோது மூலவிக்கிரமாக  விக்கிரமும் பரிவாரங்களாக காளி, வைரவர், முருகன், ருத்திரன் என்பவர்களையும் உள்ளடக்கி கோயில் அமைத்த வேளையில் இவ்வாலயத்திற்கருகில் முனீஸ்வரன் ஆலயம் ஒன்றினையும் நிர்மானித்திருந்தார். சிறிய ஆலயமாக இருந்த நாச்சிமார் ஆலயத்தினைப் பெருப்பித்து திருப்பணி வேலைகளை ஆரம்பித்த வாரிச்சாமியார் அவர்கள் நாச்சிமார் ஆலயத்தின் திருப்பணி வேலைகளை மேற்கொண்டு வரும் வேளையில் 1969 ம் ஆண்டு இறைபதமடைந்தார்.

இறைபதம் எய்திய வாரிச்சாமியார் அவர்கள் அவரது விருப்பத்திற்கு அமைய ஆலயளவின் தென்புறத்தில் சமாதியாக வைக்கப்படடர். இவரது மறைவின் பின் இவரது மருமகனான சுந்தரம் என்பவராலும் அவரின் பின் மகனான பழனி என்பவராலும் பக்தி மார்க்க முறையில் (வாய்கட்டி) பூசைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. வாரிச்சாமியாரது சந்ததியினரால் பூசைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த இவ்வாலயம் அவரது மருமகனான சுந்தரம் அவர்கள் 1981ம் ஆண்டு மறைந்த பின்னர் பொதுமக்கள் வேண்டுதலுக்கு இணங்க 1984 ம் ஆண்டு பொதுமக்களது பரிபாலனத்தில் கீழ் கொண்டுவரப்பட்ட ஆலயத்தின் திருப்பணி வேலைகள் நிறைவேற்றப்பட்டு 1985 ம் ஆண்டு ஆவணி மாதம் கும்பாபிஷேக பெருவிழாவினைக் கொண்டாடியது. இப் பெருவிழாவின்போது அருகே அமைந்திருந்த முனீஸ்வரன் ஆலயத்தின் திருப்பணி வேலைகள் பூர்த்தியக்காதமையால் முனீஸ்வரர் ஆலயம் பாலஸ்தானம் செய்யப்பட்ட நிலையிலேயே இருந்து வந்தது. இந் நிலையில் முக்கிய விடயம் ஒன்றினைக் குறிப்பிடுதல் வேண்டும், அது என்னவெனில் இவ் ஆலயம் ஏழு குடில்களிருந்த நிலையில் பின்னர் அதனை ஒன்றாக்கி கோயில் அமைத்த போது அது நாச்சிமார் என அழைக்கப்பட்டது. இங்கு பக்திமார்க்கமாகவே  பூசைகள்  நடைபெற்றமையால் பூசகர்களைத்தவிர வேறு எவரும் மூலஸ்தானத்திற்கு செல்லமுடியாது. இந் நிலையில் 1985 ம் ஆண்டு கோயில் திரும்பணி வேலைகள் நிறைவுற்று கும்பாபிஷேகம் காணும் நிலைவரை பக்திமார்க்கமாகவே பூசைகள் நடைபெற்றதோடு,கர்ப்பகிரகத்தின் பண்டிகையும் பக்தி மார்க்க முறைக்கு அமையவே நிமாமானிக்கப்பட்டிருந்தது  இருந்தபோதும் 1985ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின் பின்னர் கிரியா மார்க்க முறையில் அந்த சிவாச்சாரியார்கள் மூலம் பூசைகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந் நிலையிலேயே கும்பாபிஷேகத்தினை ஒழுங்கு செய்வதற்காக வருகை தந்த அந்தணர்கள் மூல விக்கிரத்தைப்பார்த்து இது நாச்சிமார் அல்ல எனவும்  மூல விக்கிரதத்திலுள்ள அம்மனின் கரங்களிலுள்ள ஆயுதங்களை கருத்தில் எடுத்து  அம்மன் எனவும் அடையாளம் கண்டனர். இதன் பின்னரே இவ் ஆலயம்(1985)நாச்சிமார் என வழங்கும் முத்துமாரி என பெயர் மாற்றம் பெற்றது.

மேலும் கும்பாபிஷேகத்தினை மேற்கொள்ளவந்த சிவச்சக்காரியர்கள் நாச்சிமார் கோயிலுக்கு அருகிலிருந்த முனீஸ்வரன் ஆலயத்தினையும் அவதானித்தபோது அங்கும் கோதுமைகள் உள்ளத்தகாயத் தெருவித்தார்.முனீஸ்வரன்   முனீஸ்வர பெருமான் வேடடைப்பால்,தடியுடனும் ஒரு கால் கட்டையானவராகவும் இருப்பதனை அவதானித்து உண்மை நிலையினை தெரியப்படுத்தினர். முனீஸ்வரன் ஆலயங்களில் இவ்வாறானதொரு விக்கிரகம் இல்லை என்றும் இது அற்புத நிலை என்றும் கூறினர்.

இந் நிலையில் கடந்த 2010ம் ஆண்டு 25 வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில் கிரியாமார்க்க முறைக்கு அமைய ஆலயம் நிர்மானிக்கப்பட்டு கும்பாபிஷேகம் ஒன்றினை மேற்கொள்வதன் பொருட்டு பாலஸ்தானம் செய்யப்பட்டு, பரிவார மூர்த்திகளுடன் நவக்கிரகமும் அமைக்கப்பட்டு கிழக்கு, தெற்கு ராஜகோபுரங்களும் நிர்மானிக்கப்பட்டு 2012ம் ஆண்டில் கும்பாபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது. இந் நிலையில் முனீஸ்வரப்பெருமானின் திருப்பணி வேலைகள் தொடரப்படாமையால் முனீஸ்வரர் ஆலயம் 50 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தான நிலையிலேயே இருந்தது. இந் நிலையில் முத்துமாரி அம்மனின் கும்பாபிஷேகத்தினைத் தொடர்ந்து முனீஸ்வரப்பெருமானின் திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 2015ம் ஆண்டு பங்குனி மாதம் கும்பாபிஷேகமும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இவ் ஆலயத்தில் சித்திரை மாதம் வருடாந்த மகோற்சவமும், வைகாசி மாதம் பொங்கல் விழாவும், நவராத்திரியும் அதனையொட்டி நடைபெறும் மானம்பூவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மகாசிவராத்திரி, தைப்பூசம், ஆனிஉத்தரம், ஆடிப்பூசம், வரலக்ஷ்மி காப்பு, கேதாரகௌரி காப்பு, திருவெம்பாவை என்பனவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருத்தல பதிகம்[தொகு]

எள்ளங்குளத்தில் எழுந்தருளி மெய்யருளை

அள்ளி வழங்குகின்ற அம்மையே -தெள்ளுதமிழ்ப்

பாவில் உனது பரங்கருணை பேசிடவென்

நாவில் உறைவாய் நயந்து .

இம்மைச்சுகம் பலவும் ஏழையடியார்க்குதவும்

அம்மையே எள்ளங்குளத்தமிர்தே -எம்மையுமுன்

சேய் போற் கருதி தினமும் துதிக்கவருள்

வாய் நீயுன்னுள்ளம் மகிழ்ந்து.

முத்தியளித்தாதரிக்கும் முக்கண்ணன் பாகத்தே

சத்தியென வீற்றிருக்கும் தாயேயெம் –புத்திக்கும்

எட்டாவுன் பாதமலர் எள்ளங்குளப்பகுதியில்

தொட்டு நின்றோம் நாளும் துதித்து

நோயால் நலிந்துன்னை நோக்கிவருமாடியர்

வீயாமற் காத்தவர்க்கு மெய்யன்புத் -தாயாய்ச்

சுகமருள்ளெள்ளங்குளத்து  சுந்தரியே உன்றன்

முகமலர்ந்தேன் ஈந்தருள்வாய் முன்.

மக்களின்மையால் துயருற்றவர் மண்ணினுனைப் பூசித்தால்

அக்கவலை நீக்கியவர்க்கனாந்தம் -மிக்களிக்கும்

தாயே எள்ளங்குளத்து சங்கரியே எப்போதும்

நீயே எமக்கருள் நில்.

மருத்துவர்கள் கைவிட்ட மாறாத நோயெனினும் 

விருப்புடன் எள்ளங்குளத்தை மேவி -ஒருத்தரமே

நாச்சியார் என்றோதி நாள் மலரிட்டே தொழுதால்

பேச்சேது நோயகலும் பின்.

வெள்ளி தொறு மெள்ளங்குளவடியார் வெண்ணீற்றை

அள்ளியுடம் பெங்கும் அணிந்தாலே -வில்லுப்பாயம்

போயாகலும் போகாத பேயகலும் 

காயமகலாது களித்து.

வைகாசி தோறும் வரும் பொங்கல் வைபவத்தில்

பை காசில்லாதவரும் பங்கு பற்றி -கைகால்கண்

பெற்ற பயன் எய்திடுவார் பேரருள் எள்ளங்குளத்து

கற்பகமுன் காட்சியது கண்டு.

கும்பாபிஷேக மகிமை[தொகு]

இறைவன் உருவத்திருமேனியில் நின்று அடியார்களுக்கு அருள்புரியும் தலமே ஆலயமாகும். இதனை தேவையானம் என்றும் அழைப்பர். பொதுவாக ஆலயம் என்ற பெயராலேயே அழைக்கப்படுகின்றன.அதாவது ஆன்மாக்களது லயம் என்ற கருத்தாகும். ஆன்மாக்கள் இறைவனை அடைந்து பக்தியுடன் ஒடுங்கும் தன்மையைக் கொண்டிருப்பதனால் ஆலயம் என அழைக்கப்பட்டது. விதிமுறைகளுக்கு அமைவாக இறைவனின் உருவத்திருமேனியை அமைத்து கும்பாபிஷேகம் செய்து வழிபட்டு வருவதை காணமுடிகிறது. கும்பாபிஷேக முறையானது வாழ்க்கைத்தத்துவத்தை எடுத்துக்கடடுவதாக அமைந்துள்ளன. விசேஷ பூர்ணபகுதி முடித்து தீபாரானை செய்து யாத்திராதனம் முடித்து கும்பம் தூக்கி அடியார்கள் புடைசூழ மேள வாத்தியங்களுடன் ஆலயம் சென்று,சுபமுகூர்த்ததில் கலசத்தின் அருளமுதை உருவத்திருமேனியில் சிவாச்சாரியார் அபிஷேகம் செய்வார்

இந்து வாழ்வியலில் சக்தியின்மகத்துவம்[தொகு]

சக்தி எனும் சொற்பிரயோகம் இந்து சமயத்தில் தாய்த்தெய்வத்தை முதன்மைப்படுத்தும் ஒரு சொல்லகப் பெரிதும் போற்றப்படுகின்றது. சக்தி என்றால் அன்பு, ஆற்றல், வல்லமை என்பது மட்டுமன்றி அணுசக்தி, ஆக்கசக்தி, அறிவுசக்தி, அனுக்கிரகசக்தி, அழித்தல் சக்தி எனவும் நடைமுறைவாழ்வில் செயற்பட்டு வருவதனைக் காணலாம்.

தத்துவ முறையிலோ மாயசக்தி, திருவருடசக்தி, சிற்சக்தி எனப் பல்துறைப் பரிமாணங்களாகச் சக்தி தத்துவம் பல்வேறு ஆற்றல்களாகவும் அறிவுத்துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றது. நாம் வாழும் நாடு தாய்நாடு; பேசும் மொழி தாய்மொழி; உணவளித்து இரட்சிக்கும் நிலமும் பூமித் தாய் தாகம் தீர்க்கும் நதிகளும் பொருளாதார உற்பத்தியின் ஊற்றாக விளங்குவதும் கடலன்னை ;மொத்தத்தில் "இயற்கை அன்னையாக" இந்துக்கள் வாழ்வில் ஆற்றல் சக்தியானது பெண்ணாக மட்டுமின்றி மாபெரும் "சக்தி தத்துவமாகவும்" விளங்குகின்றது.

இந்துக்களின் முன்னோர்கள் தமது அனுபூதி ஞானத்தால் இதன் தாற்பரியத்தை உணர்ந்தே சிவவழிபாட்டிற்கு இணையாக மகிமையுடையதாகச் சக்தி வழிபாட்டினையும் உருவகித்துக் கொண்டுள்ளனர்."ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால்" எனும் முதுமொழி ஒன்றே இவற்றினை உணர்த்தப் போதுமானதாகும்.

அந்த சக்தியின் மகத்தான ஆற்றலை ஞானியர் சமய வழிபாட்டில் தாயாக மனைவியாக, சகோதரியாக, மகளாக அவற்றின் உன்னதத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் வகுத்துள்ளனர். அன்னை பராசக்தியானவள் அகில உலகையும்   உயிர்களையும்  பேணி வளர்க்கும் பாங்கிலே சிந்து வெளிக்காலம் முதல் பெண் வழிபாடாகவும், தாய்த்தெய்வ வழிபாடாகவும் உருவான பெண்மை இந்துப் புராணங்களில் சக்தி பரிமாணமாக பல்துறை ஆற்றல்களை வெளிப்படுத்தும் "பெண் தெய்வமாக" உருவாகிய வரலாற்றினைக் காணலாம்.