கரணப்பந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கரணப்பந்து விளையாட்டு கோட்டுருவப் படம்

கரணப்பந்து சிறுவர் குழு விளையாட்டு. இதனைக் குரங்குப்பந்து என்றும் கூறுவர்.

ஆட்ட விவரம்[தொகு]

துணியில் முறுக்கிய திரி இதில் பந்தாகப் பயன்படுத்தப்படும். திரிப்பந்தைக் கால் கட்டைவிரல் இடுக்கில் பிடித்துக் கரணம் போட்டுக் காலால் வீசுவர். எதிரில் இருப்பவர் அதனைப் பிடிக்கவேண்டும். பிடித்தால் பிடித்தவர் கரணப்பந்து வீசலாம்.

பிறர் பிடிக்காவிட்டால் பந்து விழுந்த இடத்திலிருந்து முன்பு அடித்தவரே முன்போலவே ஆடலாம். யார் அதிக தொலைவு பந்தைக் கொண்டு செல்கிறாரோ அவர் பெருமை பெறுவார். பிடி நழுவிப் பந்து பின்பக்கம் விழுந்துவிட்டால் அவர் ஆட்டம் போய்விடும். ஒருவர் வென்றுகொண்டே சென்ற கடைசி இடத்திலிருந்து ஏனையோர் நொண்டி அடித்துக்கொண்டு முதலில் ஆட்டம் தொடங்கிய உத்தி இடத்துக்கு வந்து சேரவேண்டும். இது பந்தைப் பிடிக்காமல் விட்ட தோல்விக்குத் தண்டனை.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரணப்பந்து&oldid=988186" இருந்து மீள்விக்கப்பட்டது