கயிலை மலைத்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கயிலை மலைத்தொடர் (Kailas Range), திபெத் தன்னாட்சிப் பகுதிக்கு தெற்கே, இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் வடக்கே இமயமலையில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரில் 22,028 அடி (6,714 மீட்டர்) உயரத்தில், இந்து மற்றும் பௌத்தர்களின் புனிதத் தலங்களான கயிலை மலை மற்றும் மானசரோவர் ஏரி மற்றும் இராட்சதலம் ஏரிகள் உள்ளன. இம்மலைத்தொடரில் சிந்து ஆறு, சத்லஜ் ஆறு, பிரம்மபுத்திரா ஆறு உற்பத்தியாகிறது. [1]

புவியியல்[தொகு]

இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள காரகோரம் மலைத்தொடர் பாங்காங் ஏரியின் ஏரியின் வடக்குப் பகுதியோடு முடிகிறது. ஏரியின் தெற்கு கரை முடிவிற்குப் பிறகு கயிலை மலைத்தொடர் ஆர்மபபாகிறது. 4,000 முதல் 5,500 மீட்டர் வரை உயரமுள்ள கயிலை மலைத்தொடர் கரடுமுரடான, உடைந்த நிலப்பரப்புகளாக வகைப்படுத்தப்படுகிறது. கயிலை மலைத்தொடர் ஹெல்மெட் டாப், குருங் மலை, ஸ்பாங்கூர் கேப், முகர் ஹில், முக்பாரி, ரெசாங் லா, ரெச்சின் லா ஆகிய முக்கிய நிலப்பகுதிகளையும் கொண்டுள்ளது. இந்தியாவின் முக்கிய தகவல் தொடர்பு மையமாகக் கருதப்படும் சுஷுல் பவுல் (Chushul Bowl) இங்கு தான் அமைந்துள்ளது.

2020 இந்தியா-சீனா எல்லை மோதல்கள்[தொகு]

2020 இந்தியா-சீனா எல்லை மோதல்கள் போது, 30 ஆகஸ்டு 2020 அன்று சிறப்பு எல்லைப்புறப் படைகள் கயிலைமலைத்தொடர் பகுதியை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாத்த விதம் சீனா ராணுவத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kailas Range
  2. இந்தியா- சீனா எல்லை மோதல்: கைலாய மலைத்தொடர் ஏன் முக்கியமானது?
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயிலை_மலைத்தொடர்&oldid=3833595" இலிருந்து மீள்விக்கப்பட்டது