கயிஜோ முற்றுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கயிஜோ முற்றுகை
மங்கோலிய-ஜின் மற்றும் ஜின்-சாங் போர்கள் பகுதி
நாள் திசம்பர் 1233 – பிப்ரவரி 9, 1234
இடம் கயிஜோ (தற்கால ருனான் கவுன்டி, ஹெனான் மாகாணம், சீனா)
தீர்க்கமான மங்கோலிய-சாங் வெற்றி
  • பேரரசர் அயிசோங் தற்கொலை செய்து கொள்கிறார்
  • வன்யன் செங்லின் போரில் கொல்லப்படுகிறார்
  • ஜின் வம்சத்தின் வீழ்ச்சி
பிரிவினர்
ஜின் வம்சம் மங்கோலியப் பேரரசு
தெற்கு சாங் வம்சம்
தளபதிகள், தலைவர்கள்
பேரரசர் அயிசோங் 
பேரரசர் மோ (வன்யன் செங்லின்) 
ஒக்தாயி கான்

கயிஜோ முற்றுகை என்பது ஜுர்ச்சென்கள் தலைமையிலான ஜின் அரசமரபிற்கும், மற்றும் மங்கோலியப் பேரரசு மற்றும் சாங் அரசமரபின் கூட்டுப்படையினருக்கும் இடையே நடந்த முற்றுகைப் போர் ஆகும். இது 1233 முதல் 1234 வரை நடைபெற்றது. மங்கோலியர்களுக்கும் ஜின்களுக்கும் இடையே நடந்த கடைசி பெரிய போர் இதுவே ஆகும். இரு நாடுகளுக்கும் இடையே முதன் முதலில் 1211ல் போர் ஆரம்பித்தது. மங்கோலியர்கள் செங்கிஸ் கான் தலைமையில் போர் புரிந்தனர்.[1] ஜின்களின் தலைநகரான ஜோங்டு (தற்கால பெய்ஜிங்கின் க்ஷுச்செங் மற்றும் ஃபெங்டை மாவட்டங்கள்) 1213ல் முற்றுகையிடப்பட்டது.[2] பிறகு 1215ல் வெல்லப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் ஜின்கள் தங்களுடைய தலைநகரை பியான்ஜிங்குக்கு (தற்கால ஹெனான் மாகாணத்தின் கைஃபெங்) மாற்றினர்.[3] 1227ல் செங்கிஸ் கான் இறந்த பிறகு ஒக்தாயி கான் பதவிக்கு வந்தார்.[4] 1230ல் ஜின் அரசமரபினருக்கு எதிரான போரை மீண்டும் ஆரம்பித்தார்.[5] மங்கோலியர்கள் பியான்ஜிங்கை முற்றுகையிட்ட போது பேரரசர் அயிசோங் தப்பி ஓடினார்.[6] பிப்ரவரி 26, 1233ல், அவர் குயிடே (தற்கால ஷன்ஜியு, ஹெனான் மாகாணம்) எனும் இடத்தை அடைந்தார். பின்னர் ஆகத்து 3ல் கயிஜோவுக்குச் (தற்கால ருனான் கவுன்டி, ஹெனான் மாகாணம்) சென்றார்.[6][7][6] மங்கோலியர்கள் திசம்பர் 1233ல் கயிஜோவுக்கு வந்தனர்.

உசாத்துணை[தொகு]

  1. Franke 1994, ப. 252.
  2. Allsen 1994, ப. 351.
  3. Franke 1994, ப. 254.
  4. Allsen 1994, ப. 265-366.
  5. Allsen 1994, ப. 370.
  6. 6.0 6.1 6.2 Franke 1994, ப. 264.
  7. Mote 1999, ப. 248.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயிஜோ_முற்றுகை&oldid=3511242" இலிருந்து மீள்விக்கப்பட்டது