கயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கயர் என்பது தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய புதினம். 1978-ல் வெளியானது 1997-ல் இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியானது.

உள்ளடக்கம்[தொகு]

கொல்லத்தில் வாழும் மக்களின் வாழ்வைப் பற்றி பிள்ளை கூறுகிறார். [1]. ஆறு தலைமுறைகளுடன் ஏறத்தாழ ஆயிரம் கதாபாத்திரங்களைக் கொண்ட கதையை உடையது. 250 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் தொடங்கி, அண்மையில் நக்சலைட்களின் வரவு வரை கதை நீண்டுள்ளது. குட்டநாட்டில் மருமக்கத்தாய பழக்கம், நம்பூதிரி பந்தம், கோயில்களும், கோயில் கலைகளும், பழைய பழக்கவழக்கழங்கள், நியமங்கள், பெண்களின் வாழ்க்கைமுறை, தொழிலாளிகளின் குல வேறுபாடு, சாதி மத பிரச்சனைகள், கிறித்தவ சமயத்தின் வளர்ச்சி, பணத்தின் பலம், புலையரின் தியாகம், என பல்வகை செய்திகளை கதையின் ஊடே சொல்லியிருக்கிறார். அந்த காலகட்டத்தில் இருந்த பேச்சுவழக்கினை கதைக்குள் புகுத்தியுள்ளார்.

திரைத்தொடர்[தொகு]

இதேபெயரில் எம். எஸ். சத்யுவின் இயக்கத்தில் 1989 இல் இந்தியில் திரைத்தொடர் வெளியிடப்பட்டது.

விருதுகள்[தொகு]

  • வயலார் விருது (1980)

சான்றுகள்[தொகு]

  1. http://www.dcbooks.com/blog/tag/thakazhi-sivasankara-pillai/[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயர்&oldid=3238402" இருந்து மீள்விக்கப்பட்டது