கயத்தாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கயத்தாறு
—  பேரூராட்சி  —
கயத்தாறு
இருப்பிடம்: கயத்தாறு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°57′32″N 77°47′43″E / 8.9587558°N 77.7953053°E / 8.9587558; 77.7953053ஆள்கூற்று: 8°57′32″N 77°47′43″E / 8.9587558°N 77.7953053°E / 8.9587558; 77.7953053
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை 9,497 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

கயத்தாறு (ஆங்கிலம்:Kayatharu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

வரலாற்று நிகழ்வுகள்[தொகு]

பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்த வீரபாண்டிய கட்டபொம்மன் அக்டோபர் 16 , 1799, அன்று ஆங்கிலேயரால் இவ்வூரில் தான் தூக்கிலிடப்பட்டார்.

கயத்தாரில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுத்தூணைக் காணலாம்


வீரபாண்டி கட்டபொம்மனின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவிடம் இவ்வூரில் உள்ளது. இந்த நினைவிடம் அக்டோபர் 16 1970 ஆம் ஆண்டு அன்று பத்மஸ்ரீ நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் சிலை நிறுவப்பட்டு, நீ. சஞ்சீவ ரெட்டி விழாத் தலைவராகவும், மற்றும் காங்கிரசு பெருந்தலைவர் கு. காமராசரால் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவிடம் தேசிய நெடுஞ்சாலையும் உள்ளூர் சாலையும் சந்திக்கும் சந்திப்பில் இந்த நினைவிடம் உள்ளது.

இங்கு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பழைய விமானதளம் ஒன்று உள்ளது.

வேளாண்மை சிறப்புகள்[தொகு]

சந்தைகள் : இவ்வூரில் வாரசந்தை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை சந்தை நடைபெருகின்றது. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட இடத்தில் செயல்படுகின்றது. இங்கு சமையலுக்குத் தேவையான அனைத்துக் காய் கறிகள், தானியங்கள், கனி வகைகள், மற்றும் இறைச்சி வகைகள், ஒரு பக்கமாகவும். மறுபக்கத்தில் பசுமாடுகள், ஆடு, கோழிகள், என மிருகங்கள் சார்ந்தவைகள் மற்றபகுதிகளிளும் விற்க்கப்படுகின்றது. இந்த சந்தைக்கு பக்கத்தில் உள்ள 50 கிராமங்களின் மக்கள் வருகைத்தருகின்றார்கள்.

குட்டி குளம்[தொகு]

இங்கு மழைக் காலங்களில் மழை நீர் இந்த நீர் நிலையில் சேமிக்கப்பட்டு விவசாயத்திற்க்காகவும் மற்றும் மேச்சல் கால் நடைகளுக்கும் உபயோகிக்கப்படுகின்றது.

தொழில்கள்[தொகு]

இங்கு பாய் தயாரிப்புடன் மிகப்பெரிய தொழில்சாலையும், இந்த வட்டாரத்திலேயே மிகப் புகழ்பெற்ற மின்சாரக் காற்றாலை உள்ளது. இதையேற்று மத்திய அரசின் ஒரு அலுவலகமும் உள்ளது. இதை முன்னால் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் திறந்து வைத்தார்.[சான்று தேவை]

சமயங்கள்[தொகு]

கயத்தார் புதுமை புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்[தொகு]

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுமை நகர் கயத்தார் புனித ஆரோக்கிய அன்னையின்​ திருத்தல வரலாறு :

தென் தமிழ்நாட்டின் வரலாற்றில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த புகழ்மிக்க கத்தோலிக்க திருச்சபைகளில் ஒன்றான கயத்தாறு புதுமை புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் 113 ஆண்டுகளை தழுவி நிற்கிறது. 1898 ம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது.

ஆலயத்தின் அருகில் மாதாவின் புதுமை கிணறு உள்ளது. ஆரம்பத்தில் சிறிய கோவிலாக இருந்தது.

பின்னர் நெருக்கடி காரணமாக 1998 ஆம் ஆண்டு ஊர்மக்கள் உதவியோடு அப்போதைய பங்குத்தந்தை ம. சார்லஸ் அடிகளாரின் முழு முயற்சியோடும் 2000 ஆம் ஆண்டு புதிய கோபுர கோவிலாக எழுப்பட்டது.

ஆலயம் 110 அடி நீளம் 41 அடி அகலம் 90 அடி உயரத்திலும் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

கோபுரத்தின் அருகில் கடலில் கப்பல் மிதந்து வருவது போல் மாதா வந்து புயலை அடக்கியவாறு காட்சியாளிப்பது போல் ஆலயம் கட்டப்பட்டு 2001 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி திறக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 13 தேதி ​ ஆலய திறப்பு விழா அன்னதானம் வழங்கி கொண்டாடப்படுகிறது.

அன்னையின் பிறந்தநாள் பெருவிழா ஒவ்வொறும் ஆண்டும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

செப்டம்பர் 7 தேதி 9 ஆம் திருநாள் மாலை சிறப்புதிருப்பலியும் வாணவேடிக்கையுடன் கூடிய அதிதூதர்மிக்கேலல்யார், புனித செபஸ்தியார், புனித அந்தோணியார், புனித சவேரியாரின் சொருபங்கள் தாங்கிய சிறப்பாக நடைபெறும்.

செப்டம்பர் 8 தேதி பத்தாம் திருவிழா அதிகாலை ஆயர்களின் ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் 35 அடி உயரமுள்ள வெள்ளிதேரில் ஆரோக்கிய தாய் அமர்ந்து புதுமை நகரின் வீதிகளில் வலம் வந்து மக்களுக்கு எண்ணற்ற வரங்களை அள்ளித்தருகிறாள்.

மாலை தேர்நிலையை வந்தடைந்ததும் கொடியிறக்கப்பட்டு திருவிழா இனிதே நிறைவடைகிறது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து கயத்தாறுக்கு பேருந்து வசதிகள் உள்ளது.

திருநெல்வேலி செல்லும் வழியில் கோவில்​ப்பட்டிக்கு அடுத்து அமைந்துள்ளது.

வெளியீடு: MR.விஜய் தஞ்சாவூர்

Om symbol.svg இந்துக் கோயில்கள்

1)அகிலாண்ட நாயகி - கோதண்ட ராமேஸ்வரர் கோயில்.

2)திருமலை நாயகி - திருநீலக்கண்டேஸ்வர் கோயில். இவைகள் மன்னர்கள் ஆட்சி காலக்கட்டத்தில் எழுப்பப்பட்ட கோயில்கள் என அறியப்பட்டவைகள்.

3)கயத்தாறு ஆத்தங்கரை சுடலை மாடன் சாமி கோயில். இந்த கோவிலின் கொடைத் திருவிழா வருடாவருடம் ஓர் குறிப்பிட்ட நாள் அன்று விழா நடைபெருகின்றது.

P christianity.svg தேவாலயம்

1)புனித லூர்த் மாதா தேவாலயம். இது ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும்.

2)தென்னிந்திய திருச்சபைகள் மற்றும் இதரக்குழுக்களின் தேவாலயங்களும் இங்கு உள்ளது.

Flag of Pakistan.svg மசூதி(பள்ளி வாசல்)

இந்த ஊரில் புகழ்பெற்ற மசூதி(பள்ளி வாசல்) ஒன்று உள்ளது இது இந்த நகரத்தின் மேற்கு திசையில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9497 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கயத்தாறு மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கயத்தாறு மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கயத்தாறு&oldid=2572219" இருந்து மீள்விக்கப்பட்டது