கம்லா சங்க விளையாட்டரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்லா சங்க விளையாட்டரங்கம்
Kamla Club Ground
முழு பெயர் கம்லா சங்க விளையாட்டரங்கம்
இடம் இந்தியாஉத்திரப் பிரதேசம், கான்பூர்
எழும்பச்செயல் ஆரம்பம் 1932
திறவு 1932
உரிமையாளர் கம்லா சங்கம்
ஆளுனர் கம்லா சங்கம்
குத்தகை அணி(கள்)
அமரக்கூடிய பேர் 15,000

கம்லா சங்க விளையாட்டரங்கம் (Kamla Club Ground) இந்தியாவிலுள்ள உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரிலுள்ள ஒரு பல்நோக்கு விளையாட்டு அரங்கமாகும். முக்கியமாக துடுப்பாட்டப் போட்டிகளை ஒழுங்கமைக்க இவ்வரங்கம் பயன்படுகிறது,. 1999/00 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உத்தரபிரதேச துடுப்பாட்டக் கூட்டமைப்பு அகாதமியின் தாயகமாகவும் கருதப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு வடக்கு மண்டல துடுப்பாட்ட அணிக்கும் தெற்கு மண்டல துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான துடுப்பாட்ட போட்டி நடைபெற்றபோது [1] ஒன்பது முதல் தர துடுப்பாட்ட போட்டிகள் இங்கு நடைபெற்றிருந்தன. [2]

1988 முதல் 2007 வரை மேலும் எட்டு முதல் தர போட்டிகள் இங்கு நடைபெற்றன. இரயில்வே துடுப்பாட்ட அணிக்கும் மத்திய பிரதேச துடுப்பாட்ட அணிக்கும் இடையில் போட்டி நடைபெற்றபோது [3] மேலும் ஒன்பது பட்டியல் ஏ போட்டிகளும் நடைபெற்றன. ஆனால் அப்போது முதல் அரங்கத்தில் தரமற்ற போட்டிகள் மட்டுமே நடைபெறுகின்றன. [4] அரங்கம் 15,000 நபர்கள் அமர்ந்து பார்க்கும் வசதியைக் கொண்டுள்ளது. உடற்பயிற்சிக் கூடம், வீர்ர்களுக்கான உடைமாற்றும் அறைகள் பந்து வீசும் இயந்திரம், காணொளி பகுப்பாய்வு வசதி போன்ற பிற வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளது. [5]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]