கம்லங் காட்டுயிர் காப்பகம்
கம்லங் காட்டுயிர் காப்பகம் Kamlang Wildlife Sanctuary | |
---|---|
காப்பகத்தில் உள்ள குலோ ஏரி | |
அமைவிடம் | லோஹித் மாவட்டம், அருணாசலப் பிரதேசம், இந்தியா |
அருகாமை நகரம் | வாக்ரோ |
ஆள்கூறுகள் | 27°40′00″N 96°26′00″E / 27.66667°N 96.43333°E |
பரப்பளவு | 783 சதுர கிலோமீட்டர்கள் (302 sq mi) |
நிறுவப்பட்டது | 1974 |
நிருவாக அமைப்பு | இந்திய அரசு, அருணாசலப் பிரதேச அரசு |
[1] |
கம்லங் காட்டுயிர் காப்பகம், இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் லோகித் மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள கம்லங் ஆற்றின் பெயரே காப்பகத்துக்கும் சூட்டப்பட்டுள்ளது. ஹிஷ்மி, திகரு, மிசோ மக்கள் உள்ளிட்டோர் வாழ்கின்றனர். இங்கு குலோ ஏரி அமைந்துள்ளது. இங்கு பூனையினங்கள் வாழ்கின்றன.[2][3]
இந்த காப்பகம் 1989 ஆண்டில் நிறுவப்பட்டது. 783 சதுர கிலோமீட்டர்கள் (302 sq mi) பரப்பளவுள்ள பகுதி காப்பகமாக அறிவிக்கப்பட்டது.[1] தின்சுகியா, திப்ருகர் ஆகிய நகரங்களின் வழியாக இந்த இடத்தை வந்தடையலாம்.[2] இந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அருணாசலப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.[3]
குலோ ஏரி 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது.[4]
உயிரினங்கள்
[தொகு]இந்த காப்பகத்தில் புலி, சிறுத்தை, படைச்சிறுத்தை, பனிச்சிறுத்தை, யானை, சிறுத்தைப் பூனை, காட்டுப்பன்றி, மான், அணில் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்கின்றன.[2] செம்முகக் குரங்கு, ஹுலக் கிப்பான் ஆகிய உயிரினங்களும் வாழ்கின்றன.[3]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Wildlife:Kamlang". Government of Arunachal Pradesh. Archived from the original on 2015-05-12. பார்க்கப்பட்ட நாள் 2016-01-23.
- ↑ 2.0 2.1 2.2 "Kamlang Wildlife Sanctuary". Aruanchal Forest Department. Archived from the original on 2015-02-22. பார்க்கப்பட்ட நாள் 2016-01-23.
- ↑ 3.0 3.1 3.2 "Demwe Lower HE Project (1750 MW):Protected Area" (pdf). Arunachal State Pradesh Power Corporation Board.
- ↑ "Jewels of Namsai district". Arunachal Times. 29 November 2014 இம் மூலத்தில் இருந்து 23 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923174659/http://www.arunachaltimes.in/wordpress/2014/11/29/jewels-of-namsai-district/.