கம்ருல் இசுலாம் (மருத்துவர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்ருல் இசுலாம்
Kamrul Islam
কামরুল ইসলাম
தனிப்பட்ட விவரங்கள்
பிள்ளைகள்3
பெற்றோர்
  • அமினுல் இசுலாம் (father)
முன்னாள் கல்லூரிடாக்கா மருத்துவக் கல்லூரி
விருதுகள்சுதந்திர விருது (2022)

கம்ருல் இசுலாம் (Kamrul Islam) வங்காள தேசத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர் ஆவார், மருத்துவத் துறையில் சிறந்த பங்களிப்பிற்காக 2022 ஆம் ஆண்டுக்கான வங்கதேச அரசு வழங்கும் சுதந்திர விருதை வென்றார்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கம்ருல் இசுலாமின் தந்தை அமினுல் இசுலாம் பாப்னா கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேளாண் விஞ்ஞானியாக பணிபுரிந்தார். நான்கு உடன்பிறப்புகள் கொண்ட குடும்பத்தில் கம்ருல் இரண்டாவது நபர் ஆவார். 1980 ஆம் ஆண்டில் சந்திரபிரபா வித்யாபீடத்தில், பாப்னாவில் தனது இடைநிலைக் கல்வியை முடித்தார். தகுதிப் பட்டியலில் 15 வது இடத்தைப் பிடித்தார். பின்னர் 1982 ஆம் ஆண்டு டாக்கா கல்லூரியில் மேல்நிலைப் படிப்பை முடித்தார். டாக்கா மருத்துவக் கல்லூரியில் மருத்துவத்தில் இளநிலை பட்டம் பெற்றார். பின்னர் உயர் கல்விக்காக எடின்பரோ சென்று அங்குள்ள ராயல் அறுவைச் சிகிச்சையாளர் கல்லூரியில் அறுவை மருத்துவம் பயின்றார். 1993 இல் வங்கதேச குடிமைத் தேர்வு எழுதி சுகாதாரப் பணியில் சேர்ந்தார். தேசிய சிறுநீரக நோய்கள் மற்றும் சிறுநீரக மருத்துவமனையில் உதவி பேராசிரியராகவும் பணியாற்றினார். 2007 ஆம் ஆண்டில், முதன்முறையாக வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2011 ஆம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து விலகி சி.கே.டி மருத்துவமனை என அழைக்கப்படும் நாள்பட்ட சிறுநீரக நோய் மருத்துவமனையை நிறுவினார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர்.[3][4]

விருது[தொகு]

  • சுதந்திர விருது (2022)

மேற்கோள்கள்[தொகு]

  1. Correspondent, Staff; bdnews24.com. "10 people, 1 institution to receive Independence Awards". bdnews24.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. "10 people, 1 organisation to get Independence Award". The Business Standard (in ஆங்கிலம்). 2022-03-15. பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
  3. "স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন দুই কিংবদন্তি চিকিৎসক". banglanews24.com (in Bengali). 2022-03-15. பார்க்கப்பட்ட நாள் 2022-03-17."স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন দুই কিংবদন্তি চিকিৎসক". banglanews24.com (in Bengali). 2022-03-15. Retrieved 2022-03-17.
  4. রশীদ, মামুনুর (2021-10-27). "একজন ডা. কামরুল ও বিনা পারিশ্রমিকে ১ হাজার কিডনি প্রতিস্থাপন". The Daily Star Bangla (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-17.