கம்மம் மாநகராட்சி
கம்மம் மாநகராட்சி | |
---|---|
வகை | |
வகை | |
தலைமை | |
திருமதி. புனுகொள்ளு நீரஜா, பா.இரா.ச. | |
துணை மேயர் | திருமதி. பாத்திமா ஜோஹ்ரா, பா.இரா.ச. |
திரு. அனுராக் ஜெயந்தி இ.ஆ.ப. | |
கட்டமைப்பு | |
![]() | |
அரசியல் குழுக்கள் | |
வலைத்தளம் | |
கம்மம் மாநகராட்சி |
கம்மம் மாநகராட்சி என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவில் உள்ள கம்மத்தின் ஒரு குடிமை அமைப்பாகும். இது 19 அக்டோபர் 2012 அன்று உருவாக்கப்பட்டது.[2]
வரலாறு
[தொகு]கம்மம் நகராட்சி 1952 ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. பின்னர் 1959 ஆம் ஆண்டு இரண்டாம் நிலையாகவும், 1980 ஆம் ஆண்டில் முதல் நிலையாகவும் பின்னர் 18 மே 2001 இல் சிறப்பு நிலையாகவும் மேம்படுத்தப்பட்டது [2]
கம்மம் மாநகராட்சிக்கு முதல் நகராட்சி மேயர் திரு. குகுலோத் பபாலால்.
கம்மம் மாநகராட்சிக்கு முதல் பெண் மேயர் திருமதி. புனுகொள்ளு நீரஜா.
அதிகார வரம்பு
[தொகு]மாநகராட்சி 51 தேர்தல் வார்டுகளுடன் 94.37 km2 (36.44 sq mi) பரப்பளவில் பரவியுள்ளது.[3] 14 கிராமங்கள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இணைக்கப்பட்ட கிராமங்களில், பல்லேபள்ளி, துவம்சலாபுரம், எதுலாபுரம், கொல்லகுடம், குடிமல்லா, குர்ரலபாடு, கைகொண்டைகுடம், கானாபுரம் ஹவேலி, மல்லேமடுகு மற்றும் பெத்ததண்டா, போலேபள்ளி, வெளுகுமட்லா மற்றும் வெங்கடகிரி ஆகியவை அடங்கும்.[4]
நிர்வாகம்
[தொகு]மாநகராட்சி மேயர் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநகராட்சியின் மக்கள் தொகை 1,53,756 ஆகும். மாநகராட்சியின் தற்போதைய மாநகராட்சி ஆணையாளராக ஜி.வேணுகோபால் ரெட்டி உள்ளார்.[5]
தேர்தல்கள்
[தொகு]கம்மம் மாநகராட்சிக்கான முதல் தேர்தல் 6 மார்ச் 2016 அன்று நடைபெற்றது.[6] தேர்தலில் 68 சதவீத வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர். குடிமை அமைப்பின் 50 பிரிவுகளுக்கு தெ.இரா.ச., தெ.தே.க., இ.தே.கா.-இ.பொ.க. கூட்டணி, இ.பொ.க.(மா.), ஒய். எஸ். ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 291 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். மாநகரத்தில் 2,65,710 பேர் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக உள்ளனர்[தெளிவுபடுத்துக]. மார்ச் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.[7]
கம்மம் மாநகராட்சிக்கான தேர்தல் 30 ஏப்ரல் 2021 அன்று நடைபெற்றது. மொத்தமுள்ள 60 இடங்களில் தெ.இரா.ச. 43 இடங்களிலும், காங்கிரசு 9 இடங்களிலும் பா.ஜ.க. 1 இடத்திலும் இ.பொ.க. 2 இடங்களிலும் இ.பொ.க.(மா.) 3 இடங்களிலும் மற்றவை 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "TRS sweeps local body polls in Telangana". The Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 December 2022.
- ↑ 2.0 2.1 "Khammam Municipal Corporation". Official website of Khammam Municipal Corporation. Archived from the original on 11 February 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2016.
- ↑ "Basic Information". Khammam Municipal Corporation. Archived from the original on 11 February 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2016.
- ↑ "Khammam is a municipal corporation now". IBN Live (Khammam). 27 June 2011 இம் மூலத்தில் இருந்து 19 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160319030347/http://www.ibnlive.com/news/india/khammam-is-a-municipal-corporation-now-379571.html.
- ↑ "General Administration". Khammam Municipal Corporation. Archived from the original on 15 February 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2016.
- ↑ P. Sridhar (6 March 2016). "33 per cent voting in Khammam civic polls till 11 a.m." தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 27 March 2018.
- ↑ "68 pc voting in Khammam civic poll in Telangana". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 6 March 2016. பார்க்கப்பட்ட நாள் 27 March 2018.