கம்போடியாவில் இந்தியர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கம்போடியாவில் இந்தியர்கள்
Indians in Cambodia
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
புனோம் பென்
மொழி(கள்)
கெமர் · பல்வேறு இந்திய மொழிகள் · ஆங்கிலம்
சமயங்கள்
இந்து சமயம் · சீக்கியம் · பௌத்தம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
இந்திய வம்சா வழியினர்

கம்போடியாவில் இந்தியர்கள் (Indians in Cambodia) ஒரு சமூகமாக மிகச்சிறிய அளவில் வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் புலம்பெயர்தவகள் மற்றும் நாடுகடத்தப்பட்டவர்கள் ஆவர். மூன்றில் ஒரு பகுதி இந்தியர்கள் குறிப்பாக கம்போடியத் தலைநகரமான புனோம் பென்னில் வசிக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.[1]

வரலாறு[தொகு]

பண்டைக்காலந் தொட்டே இந்தியா கம்போடியா உறவுகள் தொடர்ந்து வந்துள்ளன. கம்போடியாவில் இந்தியர்கள் செல்வாக்குடன் இருந்துள்ளனர் என்பதை தமிழ் இந்துமத பாணியிலமைந்த அங்கோர் வாட் ஆலயம் முதல் கெமர் எழுத்துகள் வரை உறுதி செய்கின்றன. தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் சமசுகிருத எழுத்துருக்களில் இருந்து தோன்றியவையே கெமர் எழுத்துக்கள் ஆகும். தமிழ்நாட்டைச் சார்ந்த பாண்டிய மன்னன் திரு மாறன் 2 வது நூற்றாண்டில் கம்போடியாவில் ஒர் இந்துமதப் பேரரசை நிறுவி ஆட்சி செய்துள்ளார். கம்போடியாவில் உள்ள சமசுகிருதக் கல்வெட்டில் இவருடைய பெயர் இடம்பெற்றுள்ளது.[2]

1960 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தற்கால நவீன இந்தியர்களின் முதலாவது குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. பஞ்சாபின் வடக்குப் பகுதியில் இருந்து வந்த இவர்கள் பொற்கொல்லர்களாகவும், பணம் கொடுத்து வாங்கும் கந்து வட்டிக்காரர்களாகவும் , மத்திய சந்தைப் பகுதியில் வர்த்தகம் புரிபவர்களாகவும் இருந்துள்ளனர். ஆனால் கெமர் ரூச் படையினரின் வருகைக்குப் பின்னர் இவர்கள் இந்தியா திரும்பினர். பொல் பொட்டின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் இவர்கள் மீண்டும் கம்போடியாவில் குடியேறினர்,

தற்காலநிலை[தொகு]

இன்று, கம்போடியாவில் பல இந்தியர்கள் உணவகங்கள் , மருந்தகங்கள், போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். வளர்ந்துவரும் கம்போடியப் பொருளாதாரம் பல இந்தியர்களை ஈர்த்துள்ளது. பாங்காக், கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் போன்ற ஊர்களைப் போலில்லாமல் புனோம் பென்னில் மிகக் குறைவான எண்ணிக்கையில் இந்தியர்கள் இருப்பதால் இவர்களுக்குப் போதிய அளவுக்கு ஆதரவும் பின்புலமும் இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் உள்ளூர் சமூகத்தில் நெருக்கமான உறவு கொண்ட இனக்குழுவாக ஒன்றுபட்டு வாழ்கின்றனர்.

கம்போடியாவில் இந்தியக் கலாச்சாரத்தைக் காணமுடிகிறது. தீபாவளி மற்றும் ஓலி போன்ற இந்துமதப் பண்டிகைகள் இந்திய சமூகத்தினரால் கொண்டாடப்படுகின்றன. புகழ்பெற்ற இந்தி நாடகங்கள் செயற்கைக் கோள் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட சில இந்திய உணவகங்களில் வாரந்தோறும் இந்தி மொழித் திரைப்படங்கள் மற்றும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புகின்றன. செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்காக இந்திய அடிப்படையிலான சில இணைய தளங்களும் செயல்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]