உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்பூர்
Kampur
கம்பூர்
Town
கம்பூர்Kampur is located in அசாம்
கம்பூர்Kampur
கம்பூர்
Kampur
இந்தியாவின் அசாமில் அமைவிடம்
கம்பூர்Kampur is located in இந்தியா
கம்பூர்Kampur
கம்பூர்
Kampur
கம்பூர்
Kampur (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°12′N 92°38′E / 26.20°N 92.63°E / 26.20; 92.63[1]
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்நகாமோ
அரசு
  நிர்வாகம்கம்பூ நகராட்சி வாரியம்
ஏற்றம்
48 m (157 ft)
மக்கள்தொகை
 (2011)
  மொத்தம்1,85,087
மொழிகள்
  அலுவல்அசாமிய மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுஏ.எசு

கம்பூர் (Kampur) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்திலுள்ள நகாமோ மாவட்டத்தின் கணக்கெடுப்பில் உள்ள நகரமாகும்.

புவியியல்

[தொகு]

26.20°வடக்கு 92.63°கிழக்கு என்ற புவியியல் ஆள்கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து 48 மீட்டர் (157 அடி) உயரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.

அசாமின் நகாமோ மாவட்டத்திலிருந்து காம்பூர் நகரை இரண்டு வழிகளில் அடையலாம். இது நகாமோ மாவட்டத்திலிருந்து 32 கி.மீ. தொலைவில் கபிலி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

அரசியல்

[தொகு]

கம்பூர் நகரமானது பத்து வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது; இவற்றுக்கு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

மக்கள் தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கம்பூர் நகரத்தின் மக்கள் தொகை 10,371 ஆக இருந்தது. இம்மக்கள் தொகையில் 5,230 பேர் ஆண்களும், 5,141 பேர் பெண்களும் இருந்தனர்.

கம்பூர் பகுதியின் மொத்த மக்கள் தொகையில், 0 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1035 ஆகும்; இது மொத்த மக்கள் தொகையில் 9.98 ​​சதவீதமாகும். கம்பூர் கணக்கெடுப்பு நகரத்தில், மாநில சராசரியான 958- என்பதற்கு எதிராக, பெண் பாலின விகிதம் 983 ஆக இருந்தது. மேலும், அசாம் மாநில சராசரியான 962- என்பதுடன் ஒப்பிடுகையில், கம்பூரில் குழந்தைகளுக்கான பாலின விகிதம் சுமார் 917 ஆக இருந்தது. கம்பூர் நகரின் எழுத்தறிவு விகிதம் 88.28 சதவீதமாகும்; இது மாநில சராசரியான 72.19 சதவீதத்தை விட அதிகமாகும். செக்கோனிதாராவில், ஆண்களின் எழுத்தறிவு விகிதம் சுமார் 91.28 சதவீதமாகவும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 85.26 சதவீதமாகவும் இருந்தது.[2]

இந்நகரம் 2,342-எண்ணிக்கைக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நீர் மற்றும் கழிவுநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்குகிறது. இது நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளை அமைப்பதுடன், தனது அதிகார வரம்பிற்குட்பட்ட சொத்துக்களுக்கு வரி விதிக்கிறது.

சமயம்

[தொகு]

கம்பூரில் இந்துக்கள் (84.9%), முசுலிம்கள் (14.2%), கிறித்தவர்கள் (0.5%), சீக்கியர்கள் (0.2%), பௌத்தர்கள் (0%), சமணர்கள் (0.1%), பிறர் (0%) மற்றும் குறிப்பிடாதவர்கள் (0.1%) ஆகியோர் வசிக்கின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Maps, Weather, and Airports for Kampur, India". www.fallingrain.com. Retrieved 2019-03-19.
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பூர்&oldid=4519027" இலிருந்து மீள்விக்கப்பட்டது