கம்பு தோசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கம்பு தோசை[தொகு]

தேவையான பொருட்கள்

 • கம்பு மாவு _2 கப்
 • ஜாதிக்காய் பொடி _ அரை ஸ்பூன்
 • நெய் _ 4 ஸ்பூன்
 • வெல்லப்பொடி _ அரை கப்
 • தேங்காய் _ கால் மூடி
 • ஏலப்பொடி _அரை ஸ்பூன்
 • முந்திரிப்பருப்பு _ 10
 • சாரைப்பருப்பு _ கால் கப்
 • எண்ணெய் _ தேவையான அளவு
 • உப்பு _ தேவையான அளவு

செய்முறை[தொகு]

கம்புமாவை வெல்லப்பொடி,ஏலப்பொடி, ஜாதிக்காய் பொடி சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு போட்டு தோசைமாவு பதத்தில் கரைத்துகொள்ளவும்.தேங்காயை மெல்லிய பல்பல்லாக கீறிக்கொள்ளவும்.முந்திரிப்பருப்பை சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.இதையும் சாரைப்பருப்பையும் அரைமணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.இதை வடித்து தேங்காயோடு எடுத்து ஐந்து நிமிடம் நெய்யில் வதக்கி மாவோடு கலந்து மெல்லிய தோசைகளாக எண்ணெய் விட்டு வார்த்து எடுக்கவும். இதற்கு ஃப்ரூட்ப்ச்சடி,தேன்,தக்காளி கெட்சப் தொட்டுக்கொள்ளலாம்.

மேற்கோள்[தொகு]

[1]

 1. எ,ஸ்.புனிதவல்லி எம்.ஏ. (அக்டோபர் 2009). கம்பு தோசை. தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட். பக். 36. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பு_தோசை&oldid=2377615" இருந்து மீள்விக்கப்பட்டது