கம்பி வரைபடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கம்பி வரைபடம் (structural drawing) என்பது  பொறியியல் வரைபடத்தில் ஒரு வகை ஆகும்.  கம்பி வரைபடங்கள் பொதுவாக பதிவுசெய்யப்பட்ட தொழில்முறை கட்டுமானப் பொறியியலாளர்களால் தயாரிக்கப்பட்டு, கட்டிடக்கலை வரைபடங்களில்  தெரிவிக்கப்படுகின்றன. இந்த வரைபடமானது கம்பி மற்றும் கான்கிரீட் இரண்டின் ஒட்டுமொத்த வடிவமைப்பு என்று குறிப்பிடப்படுகிறது. புவியீர்ப்பு விசையை எதிர்த்து வளர்ந்து நிற்கும் கட்டடத்தின் ஒட்டுமொத்த எடையும் முறையாக மண்ணுக்கு காங்கிரீட் தூண்கள் வழியாக கடத்தப்பட வேண்டும். இதற்கு கட்டடத்தின் எடையைக் கடத்தும் தூண்கள், உத்திரங்களின் அளவு அவற்றுக்கு இடையில் உள்ள இடைவெளி அவற்றில் பயன்படுத்தப்பட வேண்டிய கம்பியின் அளவு மற்றும் வகைகள் குறிப்பிடப்படுகின்றன. பொதுவாக கம்பி வரைபடங்கள் கட்டுமான நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்த ஆவணங்களுடன் இணைக்கப்படுகின்றன.[1]

பொதுவாக கம்பி வரைபடம் இல்லாமல் அனுபவத்தின் அடிப்படையில் கட்டிடம் கட்டும்போது தேவையைவிடக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ கம்பி, கான்கிரீட் போன்றவற்றைப் பயன்படுத்த நேரிடும். அதாவது அனுபவத்தின் அடிப்படையில் விருப்பத்துக்கு ஏற்ப தூண்களை அமைக்கும்போது, எல்லா தூண்களும் (COLUMN) ஒரே எண்ணிக்கையிலும் ஒரே கனத்திலும் கம்பிகளைக் கொண்டிருக்கின்றன. பொதுவாக வீட்டின் மையத்தில் வரும் தூணூம், ஓரத்தில் வரும் தூண் கொண்டிருக்கும் கம்பியைவிடக் கூடுதலான கம்பியைக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால், ஓரத்தில் வரும் தூண் தாங்கி கடத்தக்கூடிய பாரத்தின் அளவு நிச்சயமாக மையத்தில் அமைவதைவிடக் குறைவு.[2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. AISC Code of Standard Practice பரணிடப்பட்டது 2016-06-29 at the வந்தவழி இயந்திரம் AISC 303-10
  2. எம். செந்தில்குமார் (2018 அக்டோபர் 27). "கம்பி வரைபடம் அவசியமா?". கட்டுரை. இந்து தமிழ். 29 அக்டோபர் 2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பி_வரைபடம்&oldid=3238362" இருந்து மீள்விக்கப்பட்டது