கம்பிமுள் வேலி
கம்பிமுள் வேலி (Concertina wire or Dannert wire)[1] இச்சுருள் வடிவ கம்பிமுள் வேலிகள் இருநாட்டு எல்லைப்புறங்களிலும், கலவரப் பகுதிகளிலும் போராட்டாக்காரர்களை முன்னேற விடாமல் தடுப்பதற்கும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளான சிறைச்சாலைகள், திறந்தவெளி தடுப்பு முகாம்கள் மற்றும் இராணுவ முகாம்களில் தீயவர்கள் உட்புகாமல் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறது. இக்கம்பி முள் வேலிகளில் பட்டை வடிவத்தில் கூர்மையான இரும்பு முட்கள் கொண்டது. இக்கம்பிமுள் வேலிச் சுருள்களை கைகளால் எளிதாகவும், விரைவாகவும் விரிக்கவும், சுருட்டவும் முடியும் என்பதால், குறைந்த நேரத்தில் இதனை அமைக்க இயலும்.[2][3][4]
இரண்டாம் உலகப் போரின் போது படைவீரர்களே முட்கம்பி வேலிகளை தயாரித்து பயன்படுத்தினர். தற்போது இந்த கம்பிமுள் வேலிகள் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்கின்றனர். [5] [6]
இந்தியாவில் கம்பிமுள் வேலிகள்[தொகு]
- வங்காளதேசத்திலிருந்து மக்கள் ஊடுவுருவி இந்தியாவுக்குள் குடியேறுவதை தடுக்க, இந்தியா - வங்காளதேசம் எல்லையைச் சுற்றி 2277 கிமீ நீளத்திற்கு, மேற்கு வங்காளம், அசாம், திரிபுரா, மிஸோரம், மேகாலயா என பல மாநிலங்களைத் தொட்டுச் செல்லும் முள்கம்பி வேலிகள் அமைக்கும் பணி டிசம்பர் 2009 அன்று முடிவடைந்தது.
- இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளை வரையறுக்கும் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி, பாகிஸ்தான் நாட்டு தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ முடியாத அளவிற்கு இந்திய அரசு இந்தியாவின் குஜராத், இராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் எல்லைகளில் முட்கம்பி வேலி அமைத்துள்ளது.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Dannert Wire". Online Thesaurus. English Heritage. 18 July 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 September 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Hennessy-Fiske, Molly (March 24, 2019). "Trump says barbed wire ‘can be a beautiful sight.’ Many border communities disagree". Los Angeles Times. https://www.latimes.com/nation/la-na-border-concertina-wire-20190324-story.html.
- ↑ BARBED WIRE ENTANGLEMENTS.
- ↑ Watson, Julie (November 19, 2019). "Migrants won't see armed soldiers on border". Associated Press. https://www.foxnews.com/us/migrants-wont-see-armed-soldiers-on-border..
- ↑ "Rapid Deployment Concertina Wire". Creative Building Products. 16 July 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 September 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Obstacles. Military Training Pamphlet No 30, Part III:. War Office. October 1940.
பொதுவான மேற்கோள்கள்[தொகு]
- Adams, Bernard (1917). Nothing of Importance – A Record of Eight Months at the Front with a Welsh Battalion October 1915 to June 1916. Methuen & Co. https://archive.org/details/nothingofimporta00adam.
- Metcalfe, Robert W.; Buchanan-Redden, Jan (1997). No time for dreams: a soldier's six-year journey through World War II. General Store Pub House. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-896182-79-7.
- Construction of Dannert Concertina Wire Obstacles. Military Training Manual No 21A. War Office. September 1939.
- Lewis, Damien (2014). Churchill's Secret Warriors: The Explosive True Story of the Special Forces. Quercus. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1848668553. https://archive.org/details/churchillssecret0000lewi.
மேலும் படிக்க[தொகு]
- "DANNERT CONCERTINA WIRE – Instructions for Closing. and Fastening" (PDF). Military Training Pamphlet Number 218. 1939. 11 April 2012 அன்று பார்க்கப்பட்டது.