கம்பிதைப்புக் கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலுவலக நவீன பிணைப்பி

பிணைப்பி அல்லது 'கம்பிதைப்புக் கருவி' (ஆங்கிலத்தில்:stapler) ஒரு இயந்திர சாதனம் ஆகும். இது காகிதங்கள் அல்லது அதனைப் போன்ற ஒத்தப்பொருளை பிணைக்கப்பயன்படுகிறது. இது ஒரு மெல்லிய உலோக முள்ளை காகிதங்களின் வழியே உந்தித் தள்ளி அந்தமுள்ளின் முனைகள் மடிக்கப்படுவதால் காகிதங்களை பிணைக்கிறது. பிணைப்பி அரசுஅலுவலகங்கள், வணிகநிறுவனங்கள், வீடுகள் மற்றும் பள்ளிகளில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.[1]

பிணைப்பி காகிதங்களை இணைக்க மட்டுமல்லாமல் அறுவை சிகிச்சை உபகரணங்களாகவும், அறுவை சிகிச்சைகளின் பொழுது காயங்களை மறைக்க திசுக்களை இணைக்கவும் பயன்படுகிறது.[2]

பிணைப்பி இருவகைப்படும், 1. கைகளால் உபயோகப்படுத்துவது, 2. மின்சாரத்தால் உபயோகப்படுத்துவது. மின்சாரப் பிணைப்பியானது அதிக அளவிலான காகிதப் பக்கங்களை விரைவில் இணைக்கப் பயன்படுகிறது.[3]

பொதுவாக கைகளால் இயக்கப்படும் பிணைப்பி 15 பக்கங்களை இணைக்கும் வகையிலிருக்கும்.

முதன் முதலாக பிணைப்பி, 18 ஆம் நூற்றாண்டில் பிரான்சு மன்னர் 15ஆம் லூயிஸ்க்கு செய்யப்பட்டது.[4] 19 ஆம் நூற்றாண்டில் காகிதங்களின் பயன்பாடு அதிகரித்ததால் திறன்மிக்க பிணைப்பிகள் தேவைப்பட்டன.[5]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பிதைப்புக்_கருவி&oldid=3711518" இருந்து மீள்விக்கப்பட்டது