உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பார் சாதத்கோட் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்பார்-ஷாதத்கோட் மாவட்டம்
ضلع قمبر-شہدادکوٹ
قمبر شهدادڪوٽ ضلعو
மாவட்டம்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கம்பார்-ஷாதத்கோட் மாவட்டத்தின் அமைவிடம்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கம்பார்-ஷாதத்கோட் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு பாக்கித்தான்
மாகாணம்சிந்து மாகாணம்
கோட்டம்லர்கானா கோட்டம்
நிறுவப்பட்ட ஆண்டு2004
தலைமையிடம்கம்பார்
அரசு
  வகைமாவட்டம் (நிர்வாகி-துணை ஆணையாளர்]]
பரப்பளவு
  மாவட்டம்5,475 km2 (2,114 sq mi)
மக்கள்தொகை
  மாவட்டம்15,14,869
  அடர்த்தி280/km2 (720/sq mi)
  நகர்ப்புறம்
4,21,865 (27.84%)
  நாட்டுப்புறம்
10,93,004 (72.16%)
எழுத்தறிவு
  எழுத்தறிவு %
  • மொத்தம்:
    40.02%
  • ஆண்:
    48.94%
  • பெண்:
    30.35%
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
இணையதளம்www.sindh.gov.pk

கம்பார் ஷாதத்கோட் மாவட்டம் (Qambar Shahdadkot District), பாக்கித்தான் நாட்டின் தெற்கில் உள்ள சிந்து மாகாணத்தின் 30 மாவட்டங்களில் ஒன்றாகும். சிந்து மாகாணத்தின் கராச்சி கோட்டத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கம்பார் நகரம் ஆகும். கம்பார் நகரமானது, சிந்து மாகாணத் தலைநகரான கராச்சிக்கு வடகிழக்கே 443 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 1,056 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இம்மாவட்டம் பலூசிஸ்தான் மாகாணத்தின் எல்லையை ஒட்டி உள்ளது.

மாவட்ட எல்லைகள்

[தொகு]

கம்பார் ஷாதத்கோட் மாவட்டத்தின் மேற்கே பலூசிஸ்தான் மாகாணத்தின் குஸ்தர் மாவட்டம், ஜாப்ராபாத் மாவட்டம் ஜால் மாக்சி மாவட்டங்களும், தெற்கே தாது மாவட்டம், கிழக்கே லர்கானா மாவட்டம் மற்றும் வடக்கே ஜோகோபாபாத் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 267,553 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 1,514,869 ஆகும்.[3] பாலின விகிதம் 100 பெண்களுக்கு 109.31 ஆண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 40.02% ஆகும்[1][4]. இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 527,655 (34.83%) ஆக உள்ளனர்.[5]நகர்புறங்களில் 421,865 (27.85%) மக்கள் வாழ்கின்றனர்.[1]

சமயம்

[தொகு]

இம்மாவட்ட மக்கள் தொகையில் இசுலாம் சமயத்தை 99.17%% மக்களும், இந்து சமயம், கிறித்துவம் போன்ற சிறுபான்மைச் சமயங்களை 0.83% மக்களும் பின்பற்றுகின்றனர்.[6]

மொழி

[தொகு]

இம்மாவட்ட மக்கள் தொகையில் சிந்தி மொழியை 96.21%, பிராகுயி மொழியை 2.58% மற்றும் பிற மொழிகளை 1.21% மக்களும் பேசுகின்றனர்.[7]

மாவடட நிர்வாகம்

[தொகு]

5475 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட் கம்பார் ஷாதத்கோட் மாவட்டம் 7 வருவாய் வட்டங்களையும், 52 ஒன்றியக் குழுக்களையும் மற்றும் 2 நகராட்சிகளையும் கொண்டுள்ளது.

வருவாய் வட்டம் பரப்பளவு

(km²)[8]

மக்கள் தொகை

(2023)

மக்கள்தொகை அடர்த்தி

(ppl/km²)

(2023)

எழுத்தறிவு %

(2023)[9]

ஒன்றியக் குழுக்கள்
மிரோகான் வட்டம் 374 182,461 96,091 33.41%
நசீராபாத் வட்டம் 309 174,708 91,575 41.81%
குபோ சாகித் கான் வட்டம் 1,033 99,308 51,360 26.46%
சாதாத்கோட் வட்டம் 419 225,086 117,532 47.06%
சிஜாவால் ஜுனேஜா வட்டம் 385 130,635 67,877 37.66%
வாரா வட்டம் 695 253,681 132,165 44.25%

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
  2. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, SINDH" (PDF).
  3. "7th Population and Housing Census - Detailed Results: Table 20" (PDF). Pakistan Bureau of Statistics.
  4. "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
  5. "7th Population and Housing Census - Detailed Results: Table 5" (PDF). Pakistan Bureau of Statistics.
  6. "7th Population and Housing Census - Detailed Results: Table 9" (PDF). Pakistan Bureau of Statistics.
  7. "7th Population and Housing Census - Detailed Results: Table 11" (PDF). Pakistan Bureau of Statistics.
  8. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, SINDH" (PDF).
  9. "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023, SINDH" (PDF).