கம்பளி முயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Bilateria
கம்பளி முயல்
Woolly Hare at Polakongka La, Ladakh, India.jpg
இந்தியாவின் லடாக்கின் பலகோங்கா லாவில் ஒரு கம்பளி முயல்
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: லகோமோர்பா
குடும்பம்: லெபோரிடே
பேரினம்: முயல்
இனம்: L. oiostolus
இருசொற் பெயரீடு
Lepus oiostolus
ஹாட்க்சன், 1840
Woolly Hare area.png
கம்பளி முயல் பரவல்

கம்பளி முயல் (ஆங்கிலப்பெயர்: Woolly Hare, உயிரியல் பெயர்: Lepus oiostolus) என்பது லெபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி இனம் ஆகும்.[2] இது மேற்கு மற்றும் நடு சீனா, வட இந்தியா மற்றும் நேபாளத்தில் காணப்படுகிறது. அப்பகுதிகளில் இது மலை சார்ந்த புல்வெளிகளில் வாழ்கிறது. இதன் வாழ்விடம் மிகப் பரந்து விரிந்துள்ளது. இது சில பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் காணப்படுகிறது. ஆனால் பொதுவாக இது அரிதான உயிரினமாகும். இது தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் என பட்டியலிடப்பட்டுள்ளது.

விளக்கம்[தொகு]

இதன் நீளம் 40 முதல் 58 சென்டி மீட்டர் வரை இருக்கும். இது தன் ரோமத்தை ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே உதிர்க்கும்.[3]

பரவல் மற்றும் வாழ்விடம்[தொகு]

கம்பளி முயல்

கம்பளி முயல் நடு ஆசியாவை பூர்வீகமாக கொண்டது ஆகும். இது வடக்கு நேபாளம், இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மற்றும் சிக்கிம், மேற்கு மற்றும் நடு சீனாவில் காணப்படுகிறது. சீனாவில் இது கன்சு, சிங்கை, சிச்சுவான், திபெத், சின்ஜியாங் மற்றும் யுன்னான் ஆகிய மாகாணங்களில் காணப்படுகிறது. இதன் வாழ்விடமானது பொதுவாக உயரமான பகுதிகளில் உள்ள பல்வேறு வகை புல்வெளிகள் ஆகும். அவை அல்பைன் புல்வெளிகள், புதர் புல்வெளிகள் மற்றும் உயர்நில குளிர் பாலைவனங்கள் ஆகும். ஆனால் இது ஊசியிலை அல்லது கலவையான மலை சார்ந்த மர நிலப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இது கடல்மட்டத்தில் இருந்து 3000 முதல் 5300 மீட்டர் உயரம் வரை காணப்படுகிறது.[1][3]

சூழலியல்[தொகு]

கம்பளி முயலானது ஒரு கூச்ச சுபாவம் கொண்ட மற்றும் பொதுவாக தனித்து இருக்கிற விலங்கு ஆகும். பகல் நேரத்தில் செயல்பட்டாலும் இது பெரும்பாலும் ஒரு இரவாடியாகும். இது புற்கள் மட்டும் மூலிகைகளை உண்கிறது. தனித்தனி விலங்குகள் தொடர்ந்து இரவு நேரத்தில் ஒரே உணவு உண்ணும் பகுதிக்கு வரும். பகலில் சில நேரங்களில் இது சூரியன் இருக்கும்போது நிழலில் ஓய்வு எடுக்கிறது. இது வருடத்திற்கு இரண்டு முறை குட்டி ஈனும். ஒரு முறைக்கு 4 முதல் 6 குட்டிகளை ஈனும்.[3]

நிலை[தொகு]

கம்பளி முயலின் பரவலானது பூமியில் பெரும் நிலப்பரப்பை கொண்டுள்ளது. ஆனால் இது ஒரு பொதுவாக காணப்படும் உயிரினம் அல்ல. இதன் எண்ணிக்கையானது "ஒரு சில பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் மிகவும் குறைவு" என்று விளக்கப்பட்டுள்ளது. இது அதன் மாமிசம் மற்றும் உரோமத்தோலுக்காக வேட்டையாடப்படுகிறது. சில பகுதிகளில் தகுந்த வாழ்விடமானது அழிக்கப்படுகிறது. இதன் காரணமாக இவற்றின் எண்ணிக்கை குறைகிறது. மேலும் தனித்தனி விலங்குகள் இடம்பெயர்வது கடினமாகிறது. நேபாளம் மற்றும் சீனாவில் இது சில பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் காணப்படுகிறது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் கம்பளி முயலை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் என பட்டியலிட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இது அருகி வரும் இனமாக கருதப்படுகிறது.[1]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பளி_முயல்&oldid=2846234" இருந்து மீள்விக்கப்பட்டது