கம்பராமாயணத்தில் விலங்குகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கம்பராமாயணத்தில் குரங்கு, மான், கழுகு, கரடி, எருமை காகம், அணில் போன்ற விலங்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

குரங்குகள்[தொகு]

Hanuman taking Sita's ring

இந்தியாவில் அனுமன் குரங்கு என்ற விலங்கு, ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளபடி நீண்ட வாலினைக் கொண்டு சாம்பல் நிற உடலும் கூரிய பற்களும் அமைந்த ஓர் உயிரினம் ஆகும். மொத்தத்தில் 28 வகை குரங்குள் இந்தியாவில் இருந்தாலும் “அனுமன் லங்கூர்” என்ற ஒரு சிற்றினம் நூற்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கை கொண்ட குழுக்களாக, ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளபடி வானரப் படைகளாகவே காணப்படுகின்றன.

Hanuman langur - 1

குழுவின் தலைவன் வலிமை மிக்க ஆண் குரங்கு. அது மற்ற குரங்குகளை வழிநடத்திச் செல்கிறது. ராமாயணத்தில் காணும் சுக்ரீவன், வாலி போட்டிகளையொத்த தலைமைப் பதவிக்கான போட்டிகள் இக்குரங்குகளிடமும் காணப்படுகின்றன. வட இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர், ஜோத்பூர் பகுதிகளிலுள்ள காடுகளில் வாழும் குரங்குகளது வாழ்முறையை ஆராய்ந்து இவற்றினிடையேயான குழுப் பிரிதல், சண்டைகள் போன்றவை அறிவியற்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. “மயிர் சிலிர்த்து நின்று அனுமன் பெரும் கர்ஜனை செய்தான், வாலைத் தூக்கித் தரையிலடித்தான்” எனக் கம்பராமாயணத்தில் வருவது போலவே நிஜத்தில் அனுமன் குரங்குகள் 2 வினாடிகள் முதல் 20 வினாடிகள் வரை கர்ஜனை செய்யக்கூடியன. குறிப்பாகக் குழுத் தலைவர் தனது உறுப்பினர்களது கவனத்தைக் கவர காலை மாலை இரு வேளையும் இப்படிக் கர்ஜிக்கிறது. தனது வாலை இப்படியும் அப்படியும் அசைக்கிறது. டில்லி, ஜெய்ப்பூர் போன்ற நகரங்களில் இந்த அனுமன் குரங்குகள் மக்களால் பக்தியுடன் வழிபடப்படுகின்றன. அவற்றுக்கு உணவும் பழங்களும் அளிக்கப்படுகின்றன.

மான்[தொகு]

Maricha dress like a deer with golden deer skin and present himself to Sita

ராமாயணத்தில் சீதையை ராவணன் கடத்துமிடத்தில் மாரீச மான் எனும் மாயமான் வருகிறது. இம்மானின் அழகினால் கவரப்பட்ட சீதை பின்னர் பெரிய ஆபத்தைச் சந்திக்கிறார்.

கழுகு[தொகு]

ராவணன் சீதையைப் புஷ்பக விமானத்தில் கடத்தியபோது ஜடாயு என்ற கழுகு அரசன் சீதையைக் காப்பாற்றப் போராடி உயிரிழக்கிறது. ஜடாயுவின் தனயன் சம்பாதி என்ற கழுகரசன் பற்றியும் ராமாயணத்தில் விளக்கப்பட்டுள்ளது. கருடன் ராம லட்சுமணர்களுக்கு போர்க்களத்தில் உதவி செய்கிறது.

கரடி[தொகு]

ஜாம்பவான் என்ற கரடி வானரக்கூட்டத்திற்கும், அனுமன், அங்கதன் போன்றவர்களுக்கும் அறிவுரை, ஆலோசனைகள் வழங்குகிறது.

எருமை, காகம்[தொகு]

சீதையும் ராமனும் தனிமையில் இருக்கையில் காகத்தின் உருவில் அசுரன் ஒருவன் வந்து தொந்தரவு செய்கிறான். எருமை வடிவில் சமுத்திரராஜன் வருகிறான்.